095. மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா?

இல்லை

மக்காவில் 40 ரகஅத் தொழ வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன. எனினும், மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.

”எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் தவிர ஏனைய பள்ளிகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விடச் சிறந்ததாகும்” என்பது நபி மொழி.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1190)

இந்த நன்மையை அடைவதற்காகவே பிரயாணம் மேற்கொள்ளவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர்.

”(அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா” என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)

(புகாரி: 1189, 1197, 1864, 1996)