போர்க்களத்தில் துஆ மறுக்கப்படாது
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
“பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),(அபூதாவூத்: 2540)
இந்த ஹதீஸில் இடம்பெறும் 3வது அறிவிப்பாளரான மூஸா பின் யாகூப் அஸ்ஸம்ஈ (مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ) அவர்கள் பலஹீனமானவர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானது.