பொறாமை நன்மைகளை அழித்துவிடும்

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

பொறாமை நன்மைகளை அழித்துவிடும்

4200 حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَمَّالُ وَأَحْمَدُ بْنُ الْأَزْهَر قَالَا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ عَنْ عِيسَى بْنِ أَبِي عِيسَى الْحَنَّاطِ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَسَدُ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ وَالصَّلَاةُ نُورُ الْمُؤْمِنِ وَالصِّيَامُ جُنَّةٌ مِنْ النَّارِ رواه ابن ماجة

விறகை நெருப்பு திண்டுவிடுவதைப் போல் பொறாமை நன்மைகளை திண்டுவிடும். நெருப்பை தண்ணீர் அணைத்தவிடுவதைப் போல் தர்மம் பாவங்களை அழித்துவிடும். தொழுகை முஃமின்களின் ஒளியாகும். நோன்பு நரகத்தை காக்கும் கேடயமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : இப்னுமாஜா (4200), அபூதாவூத் (4257), பஸ்ஸார் (6212, 8412), முஸ்னத் அபீ யஃலா (3656), ஹாகிம் (1430), முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (26053) இப்னுமாஜா, பஸ்ஸார் ஆகிய நூல்களில் ஈஸா பின் அபீ ஈஸா அல்ஹன்னாத் என்பவர் இடம்பெறுகிறார். இவர் பொய் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் ஆவார்.

அபூதாவூத், ஹாகிம் ஆகிய நூல்களில் இப்ராஹீம் பின் அபீ உஸைதின் பாட்டனார் என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.

இப்னு அபீஷைபா என்ற நூலில் யஸீத் அர்ராஸியீ என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.