பொறாமைத் தீ
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இந்த பொறாமையின் காரணமாகத்தான் மனித இனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் முதல் கொலையே நடந்தது.
لَئِنْ بَسَطْتَ إِلَيَّ يَدَكَ لِتَقْتُلَنِي مَا أَنَا بِبَاسِطٍ يَدِيَ إِلَيْكَ لِأَقْتُلَكَ إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ
إِنِّي أُرِيدُ أَنْ تَبُوءَ بِإِثْمِي وَإِثْمِكَ فَتَكُونَ مِنْ أَصْحَابِ النَّارِ وَذَلِكَ جَزَاءُ الظَّالِمِينَ فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ الْخَاسِرِينَ
(முஹம்மதே) ஆதமுடைய இரு மகன்களின் உண்மைச் செய்தியை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக! அவ்விருவரும் இறைவனுக்கு நேர்ச்சை செய்தனர். அவர்களில் ஒருவருடைய நேர்ச்சை மட்டும் ஏற்பட்டுக் கொள்ளப்பட்டது. இன்னொருவரின் நேர்ச்சை ஏற்கபடவில்லை.
(ஏற்கப்படாதவர்) நான் உன்னை கொன்று விடுவேன் என்று சொன்னார். (ஏற்றுக் கொள்ளபட்டவர்) அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களிடமிருந்து தான் நேர்ச்சையை அவன் ஏற்கிறான். நீ என்னை கொள்வதற்காக உன்கையை என்னிடத்தில் நீட்டினாலும் நான் உன்னை கொள்வதற்காக என் கையை உன்னிடத்தில் நீட்டமாட்டேன்.
அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ்வை பயப்படுகிறேன். என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாகுவாய் என்று தான் நினைக்கிறேன். அது தான் அநீதி இழைத்தோரின் கூலி. அவரது உள்ளம் அவனது சகோதரரை கொள்வதற்கு அவருக்கு அலங்கரித்துக் காட்டியது. அவர் அவரைக் கொன்று நஷ்டவாளியானார்
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக (அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார். (இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்)
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: (புகாரி: 5025)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, “செல்வச் சீமான்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அது எவ்வாறு?” என்று கேட்டார்கள். அவர்கள், “(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தானதர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) தானதர்மங்கள் செய்(ய முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) அடிமைகளை விடுதலை செய்(ய இயல்)வதில்லை” என்று கூறினர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா! (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர” என்று கூறினார்கள். முஹாஜிர்கள், “ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் “சுப்ஹானல்லாஹ்” (அல்லாஹ் தூயவன்) என்றும், “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், “அல்ஹம்து லில்லாஹ்” (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் (மூன்றையும் சேர்த்து) முப்பத்து மூன்று முறை கூறுங்கள்” என்றார்கள்
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 1044) (936)
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
நான் உனக்கு கட்டளையிட்டிருக்க (ஆதமுக்கு) நீ பணியாமல் இருக்க உன்னை தடுத்தது எது?என்று (இறைவன்) கேட்டான். அதற்கவன் நான் அவரை விட சிறந்தவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று சொன்னான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவனது உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளதோ அவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். அப்போது ஒரு மனிதர் ஒருவரின் ஆடையும் காலணியும் அழகானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். (இது பெருமையாகுமா?) என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அழகானவன். அழகையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும், மக்களை இழிவாக கருதுவதும் தான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 147)
அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிலைலா(ரஹ்) அவர்கள் கூறினார்:
கஅப் இப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘உங்களுக்கு ஓர் அன்பளிப்பை வழங்கட்டுமா?’ என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்.
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே வந்தபோது நாங்கள் ‘இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு எவ்வாறு நாங்கள் ‘சலாம்’ உரைக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளோம். ஆனால், தங்களின் மீது நாங்கள் எவ்வாறு ‘ஸலவாத்’ கூறவேண்டும்?’ என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்’ என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் கருணை புரிந்திடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய். இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் தம் குடும்பத்தாருக்கும் சுபிட்சம் வழங்கிடுவாயாக! நீயே புகழுக்குரியவனும் கண்ணியமிக்கவனும் ஆவாய்.)
அறிவிப்பவர்: இப்னு உஜ்ரா(ரலி)
நூல்: (புகாரி: 6357)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான். அவர்களுக்கு அருள்புரிந்ததைப் போன்று தமக்கும் அருள்புரியுமாறு நபி (ஸல்) அவர்கள் பிராத்திக்க சொல்கிறார்கள்.
இன்னும் அல்லாஹ் தான் விரும்பியவருக்கு அருட்கொடையை வழங்குவதாக கூறுகிறான்.
அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான்
இந்த அருட்கொடை வழங்குதல் அல்லாஹ்வின் அதிகாரம். இதை பார்த்து பொறாமை கொண்டால் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவது போன்றுதாகிவிடும்
ந பி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.
அல்லாஹ்வின் அதிகாரத்தில் உமக்கு எந்த பங்கும் இல்லை. (சுருக்கம்)
இந்த பொறாமை நம் உள்ளத்தில் குடி கொள்ளாமல் இருப்பதற்கு அல்லாஹ் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்.
எங்கள் இறைவா எங்களையும் எங்களுக்கு முன்னால் நம்பிகொண்டவர்களையும் மன்னிப்பாயாக! எங்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை கொண்டோருக்கெதிராக பொறாமையை ஏற்படுத்திவிடாதே. நீயே மன்னிப்பவன் கருணையாளன்.
இது நபித்தோழர்கள் செய்த பிராத்தனையாக குறிப்பிடுகிறான்.
அல்லாஹவின் அருட்கொடை வழங்கப்பட்டவர்கள் பொறாமைக்காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடும் படியும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
பொறாமைகாரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
(முஹம்மதே!) சொல்வீராக உமது இறைவன் நாடியதை தவிர வேறொன்றும் எங்களுக்கு அணுகாது.
இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!