பேணுதலுக்காக நோன்பை தாமதமாக திறக்கலாமா?
கேள்வி-பதில்:
நோன்பு
பேணுதலுக்காக நோன்பை தாமதமாக திறக்கலாமா?
கூடாது.
நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: (புகாரி: 1957)
சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே பேணுதலுக்காக சில நிமிடங்கள் தாமதமாகத் திறப்பது நபிவழிக்கு மாற்றமானதாகும்.