பெற்ற மகள்கள் என்றும் பாராமல் நரபலி கொடுத்த பெற்றோர்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பெற்ற மகள்கள் என்றும் பாராமல், 

நரபலி கொடுத்து நிர்வாண பூஜை.. பெற்றோர் செய்த கொடூரம்

திருப்பதி: ஆந்திராவில் மூட நம்பிக்கையின் உச்சம் என்று சொல்வதா அல்லது கொடூரத்தின் உச்சம் என்று சொல்வதா என்று தெரியவில்லை, ஏனெனில் தாங்கள் பெற்ற இரு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்துள்ளது. இந்த கொடூரத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆபத்தானது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், அதனை இன்னும் சில உணர விரும்புவது இல்லை.

தங்கள் வாழ்வுக்காகவும், வசதிக்காவும், அற்புதங்களை அவர்களின் நம்பிக்கைகள் நிறைவேற்றும் என்கிறார்கள். இன்னும் சிலர் மிக மோசமாக நரபலி கொடுப்பது , நிர்வாண பூஜை செய்வது போன்ற மூட நம்பிக்கைகளில் இறங்கி பெரிய ஆபத்தான காரியங்களில் இறங்குவது உண்டு. அப்படித்தான் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பெற்ற மகள்கள் என்று கூட பாராமல் பேராசிரியர் பெற்றோர், தங்கள் மகள்களை நிர்வாண பூஜை செய்து நரபலி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

படித்தவர்கள்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள சிவநகர் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தம்(50). முன்னாள் பேராசிரியரான இவர் மகளிர் கல்லூரியில் அசிஸ்டண்ட் பிரின்சிபால் ஆக இருந்து உள்ளார். இவரது மனைவி பத்மஜா (5) தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையாக உள்ளார். 

அதீத பூஜை

இந்த தம்பதிகளுக்கு அலெக்கியா (27), சாய் திவ்யா (22) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இந்நிலையில் இத்தம்பதியினர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வீட்டில் அற்புதங்கள் நடத்துவதாக இருவரும் கடந்த சில மாதங்களாக பூஜைகள் நடத்தி வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு வீட்டில் பூஜைகள் செய்து கொண்டிந்தபோது, முதலில் சாய் திவ்யாவையும் பின்னர் அலெக்கியாவும் உடற்பயிற்சி செய்யும் டம்பல்ஸ் மூலம் அவரது பெற்றோர் அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் மகள்களை பூஜை அறையில் நிர்வாணமாக கிடத்தி சிறப்பு பூஜை செய்திருக்கிறார்கள். 

உயிர் வந்துவிடும்

வீட்டிலிருந்து வந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரிடம் புருஷோத்தம், பத்மஜா இருவரும், ‘நாங்கள் சிறப்பு பூஜை நடத்தி வருகிறோம். எங்களது 2 மகள்களையும் நரபலி கொடுத்துள்ளோம். ஒருநாள் பொறுத்திருங்கள். 2 மகள்களும் மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவார்கள்’ என்று கூறி அதிரவைத்துள்ளார்கள்.

விசாரணை

இதனிடையே பூஜை அறையில் நிர்வாண நிலையில் கிடந்த 2 மகள்களின் சடலங்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். தொடர்ந்து, புருஷோத்தம், பத்மஜா இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: https://tamil.oneindia.com/news/tirupati/andhra-former-principal-wife-kill-two-daughters-human-sacrifice-suspected/articlecontent-pf517270-409921.html