பெண்ணை ஷைத்தான் நோக்குகிறான்
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
ஷைத்தான் அவளை நோக்குகிறான்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”பெண் என்பவள் மறைவாக இருக்க வேண்டியவள் ஆவாள். அவள் (வீட்டிலிருந்து) வெளியேறினால் ஷைத்தான் அவளை உற்று நோக்குகிறான்.”
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : திர்மிதி (1173)
இந்தச் செய்தி அறிவிப்பாளர்கள் ரீதியாக பலவீனமானதாகும். கதாதா அவர்களிடமிருந்து மர்ஃபூ (நபியவர்கள் கூறியதாக) அறிவிக்கப்படும் செய்தியை மூன்று மாணவர்கள் அறிவிக்கின்றனர். 1. ஹம்மாம். 2. ஸயீத் இப்னு பஷீர். 3. சுவைத் பின் இப்ராஹிம் இந்த மூன்று நபர்களுமே பலவீனமானவர்கள் ஆவார்கள்.