பெண்கள் புருவ முடியை நீக்கலாமா?
கேள்வி-பதில்:
பெண்கள்
பெண்கள் புருவ முடியை நீக்கலாமா?
புருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது. இக்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறு தான்.
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அமைத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5931)