பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அர்த்தமற்ற வாதங்களைச் செய்து வருவது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆய்வு முற்றிலும் அபத்தமாகவும் உளறலாகவும் அமைந்திருந்ததால் மக்களுக்கு உண்மையை விளக்குவதற்காக இரண்டு மறுப்புத் தொடர்கள் வெளியிட்டோம். அந்த மறுப்புகளுக்கு எதிராக நவ்பர் என்பவர் அபத்தமான மறுப்புக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். அவரது மறுப்பு அவரது ஆய்வைப் போலவே அபத்தமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அந்த மூன்று தொடர்களுக்கும் தக்க மறுப்பு வெளியிட்டோம். இவை அனைத்தும் தனித் தனி கட்டுரைகளாக இடம் பெற்றதால் வாசிக்க சிரமம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொண்டு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
தொடர் : 1
பெண்கள் தங்க நகை அணியலாமா என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன. இந்தக் கருத்து அவ்வப்போது வரலாற்றில் எடுத்து வைக்கப்படுவதும், இது அபத்தமான வாதம் என்று நிரூபிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப சாதனங்களின் வசதியால் இலங்கையில் சொல்லப்படும் இக்கருத்து தமிழ் கூறும் அனைவரையும் எளிதில் சென்று அடைந்து விடுகிறது. எனவே அதே தொழில் நுட்ப சாதனங்கள் வழியாகவே அதைத் தெளிவுபடுத்தும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது. எனவே பெண்கள் தங்க நகை அணிவது குறித்த விஷயத்தில் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா? என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறோம். இது போல்
இலங்கைக் குழப்பங்கள் ஒவ்வொன்றாகத் தெளிவுபடுத்தப்படும்..
பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் கூறும் கருத்தும் அதை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் வாதங்களும் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை முன்னரே சிலரால் சொல்லப்பட்டவை தான்.
அதைத் தான் இலங்கையைச் சேர்ந்த சிலரும் எடுத்து வைக்கின்றனர்.
ஆனால் அவர்கள் இதை நிரூபிக்க எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கும் வாதங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதே உண்மையாகும். மேலும் பெண்கள் வளைந்த தங்க நகை அணியக் கூடாது, வளையாத தங்க நகை அணியலாம் என்று வாதிடுவதும் அறியாமையின் உச்ச கட்டமாகும்.
இந்தக் கருத்துடையவர்கள் முஸ்னத் அஹ்மதிலும், நஸயியிலும் இடம் பெற்ற கீழ்க்காணும் இரண்டு ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள்.
مسند أحمد مخرجا (37/ 83)
22398 – حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنِي زَيْدُ بْنُ سَلَّامٍ، أَنَّ جَدَّهُ حَدَّثَهُ، أَنَّ أَبَا أَسْمَاءَ حَدَّثَهُ، أَنَّ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُ أَنَّ: ابْنَةَ هُبَيْرَةَ دَخَلَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا خَوَاتِيمُ مِنْ ذَهَبٍ، يُقَالُ لَهَا الْفَتَخُ، فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَعُ يَدَهَا بِعُصَيَّةٍ مَعَهُ يَقُولُ لَهَا: «أَيَسُرُّكِ أَنْ يَجْعَلَ اللَّهُ فِي يَدِكِ خَوَاتِيمَ مِنْ نَارٍ؟» فَأَتَتْ فَاطِمَةَ فَشَكَتْ إِلَيْهَا مَا صَنَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَانْطَلَقْتُ أَنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ خَلْفَ الْبَابِ، وَكَانَ إِذَا اسْتَأْذَنَ قَامَ خَلْفَ الْبَابِ قَالَ: فَقَالَتْ لَهَا فَاطِمَةُ: انْظُرِي إِلَى هَذِهِ السِّلْسِلَةِ الَّتِي أَهْدَاهَا إِلَيَّ أَبُو حَسَنٍ. قَالَ: وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ ذَهَبٍ، فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا فَاطِمَةُ بِالْعَدْلِ أَنْ يَقُولَ النَّاسُ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ، وَفِي يَدِكِ سِلْسِلَةٌ مِنْ نَارٍ؟» ثُمَّ عَذَمَهَا عَذْمًا شَدِيدًا، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَمَرَتْ بِالسِّلْسِلَةِ فَبِيعَتْ فَاشْتَرَتْ بِثَمَنِهَا عَبْدًا فَأَعْتَقَتْهُ، فَلَمَّا سَمِعَ بِذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ وَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّى فَاطِمَةَ مِنَ النَّارِ»
المجتبى (المعروف بالسنن الصغرى) للنسائي (8/ 98)
5184- أَخبَرَنا عُبَيدُ اللهِ بنُ سَعيدٍ، قال: حَدَّثنا مُعَاذُ بنُ هِشَامٍ، قَالَ: حَدَّثني أَبي، عَن يَحيَى بْنِ أَبي كَثِيرٍ، قَالَ: حَدَّثني زَيْدٌ، عَن أَبي سَلاَّمٍ، عَن أَبي أَسْمَاءَ الرَّحَبِيِّ، أَنَّ ثَوْبَانَ، مَوْلَى رَسُولِ اللهِ صَلى الله عَليه وسَلم حَدَّثَهُ قَالَ: جَاءَتْ بِنْتُ هُبَيْرَةَ إِلَى رَسُولِ اللهِ صَلى الله عَليه وسَلم وَفِي يَدِهَا فَتَخٌ، فَقَالَ: كَذَا فِي كِتَابِ أَبي، أَيْ خَوَاتِيمُ ضِخَامٌ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم يَضْرِبُ يَدَهَا، فَدَخَلَتْ عَلَى فَاطِمَةَ تَشْكُو إِلَيْهَا الَّذِي صَنَعَ بِهَا رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم، فَانْتَزَعَتْ فَاطِمَةُ سِلْسِلَةً فِي عُنُقِهَا مِنْ ذَهَبٍ، قَالَتْ: هَذِهِ أَهْدَاهَا إِلَيَّ أَبو حَسَنٍ، فَدَخَلَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم وَالسِّلْسِلَةُ فِي يَدِهَا، فَقَالَ: يَا فَاطِمَةُ، أَيَغُرُّكِ أَنْ يَقُولَ النَّاسُ ابنَةُ رَسُولِ اللهِ صَلى الله عَليه وسَلم، وَفِي يَدِهَا سِلْسِلَةٌ مِنْ نَارٍ، ثُمَّ خَرَجَ وَلَمْ يَقْعُدْ، فَأَرْسَلَتْ فَاطِمَةُ بِالسِّلْسِلَةِ إِلَى السُّوقِ فَبَاعَتْهَا، وَاشْتَرَتْ بِثَمَنِهَا غُلاَمًا، وَقَالَ مَرَّةً: عَبدًا، وَذَكَرَ كَلِمَةً مَعْنَاهَا فَأَعْتَقَتْهُ، فَحُدِّثَ بِذَلِكَ، فَقَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْجَى فَاطِمَةَ مِنَ النَّارِ.
மேற்கண்ட ஹதீஸ்களுக்கு இவர்கள் செய்த தமிழாக்கம் இது தான்.
தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள்.உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை(அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார். பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள்.
ஆதாரம் : ஸுனனுன் நஸாயீ
ஹதீஸ் இலக்கம்:5140
அறிவிப்பாளர்: தவ்பான் (ரலி)
ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாதிடுபவர் தான் கூறுகின்ற அக்கருத்து அந்த ஹதீஸில் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நடைமுறையில் உள்ளதற்கு மாற்றமாக ஒன்றைச் சொல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தங்க நகை அணிவது கூடாது என்று வாதிடும் இலங்கை அறிஞர்களிடம் இந்தப் பொறுப்புணர்வை நாம் காண முடியவில்லை. மேலும் தங்களின் கருத்தை நிலை நாட்டிடுவதற்கு ஏற்ற வகையில் தமிழாக்கத்திலும் கை வரிசையைக் காட்டியுள்ளனர்.
நீல நிறத்தில் நாம் சுட்டிக்காட்டிய இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியதால் தான் இவ்வாறு இவர்களால் வாதிட முடிகின்றது.
இந்த ஹதீஸ் தங்க நகை அணிவது பற்றிய ஹதீஸ் அல்ல. ஹுபைராவின் மகளுடைய கையில் கனமான மோதிரங்கள் இருந்தன என்று தான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். கையில் இருந்தன என்று மொழியாக்கம் செய்யாமல் அணிந்திருந்தனர் என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர். இந்தச் சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தம் செய்ய இடம் இருந்தாலும் இந்த இடத்தில் கையில் வைத்திருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டி விட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால் தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டி விடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்தும்.
அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா ரலி அவர்களிடம் ஹுபைராவின் மகள் சொல்கிறார். இதை கேட்ட ஃபாத்திமா ரலி அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழட்டி விடுகிறார்கள். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். கழுத்தில் தங்க மாலையை அணிந்திருக்கும் போது வரவில்லை. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது என்ன?
பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
என்று தான் கூறினார்கள். ஃபாத்திமாவின் கரத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியைக் கையில் அணிய முடியாது. வைத்திருக்கத் தான் முடியும். இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கக் கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத் தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை.
அடுத்து ஃபாத்திமா (ரலி ) அம்மாலையைக் கழட்டி விற்று விடச் சொன்னார்கள் என்பதும் இவர்களின் கைச்சரக்காகும்.
ஏற்கனவே அவர்கள் கழட்டி விட்டார்கள் எனும் போது மீண்டும் ஏன் கழட்ட வேண்டும் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லை. மூலத்தில் இப்படி கூறப்படவே இல்லை என்பதும், இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. முதலில் கழட்டியதாகத் தான் மூலத்தில் உள்ளது. இரண்டாம் தடவை கழட்டியதாக இல்லை. ஆனாலும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதை எப்படியாவது நிறுவ வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை நுழைத்து தங்க நகை அணிவது தான் தவறு என்று காட்ட முயற்சித்துள்ளனர்.
தங்க நகையை அணிவது தவறு என்றால் ஃபாத்திமா (ரலி) அதை விற்கத் தேவை இல்லை. அணியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றி பேசவே இல்லை.
எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்தச் செய்தி அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.
தங்கத்தை வைத்திருக்கவே கூடாதா என்றால் இந்த ஹதீஸின் கருத்து இது தான். ஆனால் ஆரம்ப காலத்தில் இவ்வாறு சட்டம் இருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது.
மாற்றப்பட்ட சட்டம்
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் (9 : 34)
இந்த வசனம் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகின்றது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாரத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகின்றது.
ஆனால் இவ்வசனம் கூறும் இந்தச் சட்டம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் இருந்தது. ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பொருளுக்குரிய ஸகாத்தைக் கொடுத்துவிட்டால் அதைச் சேமிப்பது தவறில்லை என்று அனுமதி தரப்பட்டது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றது.
صحيح البخاري (2/ 106)
1404 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ: خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ أَعْرَابِيٌّ: أَخْبِرْنِي عَنْ قَوْلِ اللَّهِ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ، وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} [التوبة: 34] قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «مَنْ كَنَزَهَا، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا ، فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلْأَمْوَالِ»
காலித் பின் அஸ்லம் கூறுகிறார் :
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ… என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் சுத்தீகரிக்கக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் என்றார்கள்.
புகாரி (1404)
நபித்தோழர்களின் கருத்து மார்க்க ஆதாரமாகாது என்பதற்கு இது முரணானது என்று நினைக்கக் கூடாது. ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள் தான் கூற முடியும். (இது குறித்து சர்ச்சை வந்தால் பின்னர் விரிவாக விளக்குவோம்.)
سنن أبي داود (2/ 126)
1664 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا غَيْلَانُ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ} [التوبة: 34]، قَالَ: كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا أُفَرِّجُ عَنْكُمْ، فَانْطَلَقَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ، إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ، وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ»، فَكَبَّرَ عُمَرُ، ثُمَّ قَالَ لَهُ: «أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ»
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! (9 : 34) என்ற இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது. உங்கள் பிரச்சனையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இறைத் தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தையே அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். (எனவே ஸகாத் கொடுத்துவிட்டால் தங்கம் வெள்ளியைச் சேர்ப்பது குற்றமில்லை) என்று கூறினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் இறைவன் மிகப் பெரியவன் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் (1417)
எனவே மேற்கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.
இலங்கை அறிஞர்கள் இரண்டு ஹதீஸ்களைத் தான் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதில் ஒரு ஹதீஸ் பற்றிய நிலை இது தான். அடுத்த ஹதீஸ் பற்றி அடுத்த வியாழன் பார்க்கலாம். இது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக இரண்டு தொடராக வெளியிடப்படுகிறது.
தொடர் : 2
பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் பொதுவாக பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கலந்து ஆதாரமாக எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பியவர்கள் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். அந்த இரண்டு ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைப் பற்றி சென்ற தொடரில் விளக்கியுள்ளோம். அந்த ஹதீஸ் தங்கத்தை அணிவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்பதால் அது இவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது என்பதைத் தெளிவுபடுத்தினோம்.
அடுத்ததாக அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
سنن أبي داود (2/ 126)
4236 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ أَسِيدِ بْنِ أَبِي أَسِيدٍ الْبَرَّادِ، عَنْ نَافِعِ بْنِ عَيَّاشٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ، فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ، وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ، فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ، وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ، فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ، وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ، فَالْعَبُوا بِهَا»
(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவிசகோதரிதாய்உறவுமுறைப்பெண்)ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும்.(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),நூற்கள்: முஸ்னத் அஹ்மத்,ஸுனன் அபீதாவுத்-4236)

இது தான் அவர்கள் எடுத்துக் காட்டும் இரண்டாவது ஹதீஸாகும்.

மேற்கண்ட ஹதீஸுக்கு அவர்கள் செய்துள்ள அர்த்ததைத் தான் நாம் அப்படியே மேலே வெளியிட்டுள்ளோம்.
முதல் ஹதீஸில் தங்கள் கைச் சரக்கைச் சேர்த்து எப்படி வாதிட்டார்களோ அது போல் இந்த ஹதீஸிலும் தாங்கள் என்ன வாதிடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஹதீஸை வளைத்திருக்கிறார்கள்.
அதாவது அடிக்கோடிட்ட இடங்களில் பெண்பாலாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அடைப்புக் குறிக்குள் (மனைவிசகோதரிதாய்,உறவுமுறைப்பெண்) என்று கூறி தங்களின் கருத்தைத் திணித்துள்ளனர்.
நேசிக்கின்றவளுக்குஎன்று மொழி பெயர்த்த இடத்தில் அரபு முலத்தில் ஹபீப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹபீப், ரஹீம், ரஷீத், அலீம் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள சொற்கள் ஆண்பாலாகவும் பயன்படுத்தப்படும். பெண்பாலாகவும் பயன்படுத்தப்படும் என்று காரணம் கூறி இதன் காரணமாக தாங்கள் பெண்பாலாக அர்த்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம்
மேற்படி நபிமொழியில் ஹபீப் எனும் அறபு வார்த்தை நேசிக்கப்படும் ஆண் அல்லது சிறுவர்களைத் தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் ஃபயீல் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச் சொல் மாதிரிகள் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.
பொதுவாக ஹபீப் என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழிவிதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம். நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம். இரண்டுஅர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத் தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூறமுடியும்.
என்று தாங்கள் செய்த அர்த்தத்தை நியாயப்படுத்துகிறார்கள்
இவர்களின் இந்த வாதம் அரபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியதால் ஏற்பட்டதாகும்.
இது பற்றி அரபு இலக்கணம் கூறுவது என்ன?
ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும். உதாரணமாக ஆலிம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் அறிஞன் என்று பொருள் கொண்டாலும் அரபியில் அவ்வாறு கூற முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சொல்லமைப்பைப் பயன் படுத்த வேண்டும். ஆணுக்கு ஆலிம் என்றும், பெண்ணுக்கு ஆலிமா என்றும் கூற வேண்டும்.
ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும். இது போன்ற வடிவமைப்பில் உள்ள சொற்களுடன்பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் அதற்கேற்ப ஹபீபா என்று பெண்பாலாக இச்சொல்லை மாற்ற வேண்டியதில்லை. ஆணுக்கும் பயன் படுத்தும் ஹபீப் என்ற சொல்லையே பெண்ணுக்கும் கூறலாம்.
அதாவது ஆண் ஹபீப், பெண் ஹபீப்என்று கூறலாம்.
ஆனால்பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச் சேர்க்காமல், வெறும் ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்பம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால் ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த வேண்டும்.
நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம். பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

أوضح المسالك إلى ألفية ابن مالك – الجيل (4/ 288)
والثاني : فَعِيل بمعنى مفعول نحو ( ( رَجُلٌ جَرِيح ) ) و ( ( امرأة جَريح ) ) وشذ ( ( مِلْحفة جَديِدة ) ) فإن كان فَعِيل بمعنى فاعل لحقته التاء نحو ( ( امرأة رَحِيمَة ) ) و ( ( ظَرِيفَة ) ) فإن قلت ( ( مررت بِقَتيلَةِ بني فلان ) ) ألحقت التاء خشية الإلباس لأنك لم تذكر الموصوف

ஒரு கதீல் (கொல்லப்பட்டவன், கொல்லப்பட்டவள்) ஐ நான் கடந்து சென்றேன் என்று கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா, பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று கூறப்படாததால் கேட்பவருக்கு குழப்பம் ஏற்படும். பெண்ணைக் குறிப்பது தான் நமது நோக்கம் என்றால் கதீல் என்று கூறாமல் கதீலா என்று பெண்பாலாக மாற்றிக் கூற வேண்டும்.
حاشية العلامة الصبان على شرح الشيخ الأشموني: على ألفية الإمام ابن مالك – (4 / 135)
ومن فعيل بمعنى مفعول كقتيل بمعنى مقتول وجريح بمعنى مجروح إن تبع موصوفهغالبًا التا تمتنع فيقال:رجل قتيل وجريح، وامرأة قتيل وجريحوالاحتراز بقوله: كقتيل من فعيل بمعنى فاعل نحو: رحيم وظريف، فإنه تلحقه التاء فتقول: امراة رحيمة وظريفة،وبقولهإن تبع موصوفه من أن يستعمل استعمال الأسماء غير جارٍ على موصوف ظاهر ولا منوي لدليل فإنه تلحقه التاء نحو: رأيت قتيلًا وقتيلة؛ فرارًا من اللبسولو قال: ومن فعيل كقتيل إن عُرف موصوفه غالبًا التا تنحَذِفلكان أجود؛ ليدخل في كلامه نحو: رأيت قتيلًا من النساء، فإنه مما يحذف فيه التاء للعلم بموصوفه؛ ولهذا قال في شرح الكافية: فإن قصدت الوصفية وعلمالموصوف جرد من التاء. وأشار بقوله: غالبًا إلى أنه قد تلحقه تاء الفرق حملًا على الذي بمعنى فاعل؛ كقول العرب: صفة ذميمة، وخصلة حميدة، كما حمل الذي بمعنى فاعل عليه في التجرد نحو: {إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ} [الأعراف: 56]، {قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ} [يس:78]
இந்த இலக்கண விதியின் படி மேற்கண்ட ஹதீஸை அணுகினால் இவர்கள் செய்த அர்த்தம் தவறு என்பது நிரூபணமாகும்.
இந்த ஹதீஸில் ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படாமல் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் பெண் என்று அர்த்தம் செய்ய இலக்கணத்தில் இடமில்லை. ஆண் என்ற ஒரு பொருள் மட்டுமே இந்த இடத்தில் கொடுக்க முடியும்.

 

இதன் படி இந்த ஹதீஸின் பொருள் இது தான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவனுக்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவூத் (3698)
மேலும் இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும் “ஹா”  என்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல் “ஹு” என்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது போல் உங்களுக்கு என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும் “கும்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும் “குன்ன” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை.
ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.
ஆண்கள் வெள்ளி அணிவதற்கு அனுமதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன. அதைத் தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.
(ஆண்கள் தங்க நகை அணியக் கூடாது என்ற ஹதீஸ் சரியானது என்று இவர்களே குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே எடுத்துக் காட்ட அவசியம் இல்லை.)

 

அரபு இலக்கணத்துக்கு மாற்றமாக பொருள் செய்து விட்டு அதை இன்னொரு வகையிலும் இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.

அது ஆணைத் தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்குதங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன்பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்குஅர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.

இதுவும் அறியாமையின் காரணமாக எடுத்து வைக்கப்படும் வாதமாகும்.
தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு தடவை கூறி விட்டதால் இன்னொரு தடவை அதைக் கூறுவது அர்த்தமற்றது என்று சொல்வார்களா? ஒரு விஷயம் ஐம்பதுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. 49 தடவை கூறியது அர்த்தமற்றது என்பார்களா? ஒரு வாக்கியத்தில் ஒரு நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது இரண்டு அர்த்தத்துக்கு இடம் இருந்தால் அவ்வாறு கூறுவதில் அர்த்தம் இருக்கும்.
இவர்கள் கூறுவது போல் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடமில்லை. மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த ஹதீஸின் ஒரு பகுதி அல்ல. எனவே இவர்கள் கூறும் இந்தக் காரணமும் அர்த்தமற்றதாகும்.
அடுத்து இன்னொரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள்
அது பெண்களைத்தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாக இன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்த அறிவிப்பில், தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது. அந்தஅறிவிப்பையும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றியவிவரங்களையும் நாம் தருகின்றோம்.
இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரானஅப்துர்ரஹ்மான் பின்அப்துல்லாஹிப்னு தீனார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக் கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம்.
இமாம் யஹ்யா பின் மயீன்: என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு.
இமாம் இப்னு ஹஜர்: தவறிழைக்கும் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர்.
இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும். அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது
இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு. மேலும்,இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது. ஆகமொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும்.
இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள்
இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்:
இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியானவர்.
இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரண நம்பகத்தன்மை கொண்டவர்.
இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்.
மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும்நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை, ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்கு கிடையாது. இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம் ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரண நம்பகத் தன்மை கொண்டவர் என்பது தெளிவாக விளங்குகின்றது.
இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது. இதனால் தான் இதை முதன்மை ஆதாரமாகக் காட்டாமல் வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
இவர்கள் கூறுகிற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பது உறுதியாகிவிடும்.
ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆனணக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா என்ற சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது.
எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை.
அடுத்து இன்னொரு தத்துவத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.
எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தஒரு விடயம் தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.
இஸ்லாத்தின் பார்வையில் காப்பு, மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்ட தங்க நகைகள் அணிவது ஹராமாகும். மாறாக, வளையல் அல்லாத தங்க நகைகளை தாரளமாக அணிந்து கொள்ளலாம்.
என்பது இவர்களின் அந்தத் தத்துவமாகும்.
எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல. அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.
யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.
ஏன்? இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது.
இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வெள்ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள்.

 

மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் முதல் தொடரில் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள்.

இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.
தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
தொடர் : 3
பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் தவறான வாதங்களை எடுத்து வைப்பது குறித்து நாம் இரண்டு தொடர்களை வெளியிட்டோம்.
அதற்கு இரண்டு மறுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் மறுப்பு தாருல் அதர் எனும் அமைப்பின் சார்பில் நவ்பர் என்பார் வெளியிட்டுள்ளார். அந்த மறுப்புக்குரிய நமது விளக்கத்தை முன் வைக்கிறோம்.
நவ்பர் வெளியிட்ட மறுப்பில் பெண்கள் தங்க நகை அணிவது தொடர்பாக நாம் கேட்டஎந்தக் கேள்விக்கும் பதில் இடம் பெறவில்லை. தொடரும் என்று போட்டிருப்பதால்அடுத்தடுத்த தொடரில் தான் வெளியிடுவார் என்று நினைக்கிறோம்.
முதல் தொடரில் அவர் எடுத்து வைத்த தலைப்புடன் தொடர்பில்லாத வாதங்களுக்கு இங்கே பதில் தருகிறோம்.

முதல் வாதம்

அன்புச் சகோதரர் பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? என்ற தலைப்பில் தாங்களது பிரேத்தியேக இணைய தளத்தில் வெளியான இரு தொடர்களையும் கண்டோம். அது தொடர்பான எமது மாற்றுக் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் ஏன் சில ஆலோசனைகளையுங் கூடஇந்த பதிலினூடாக உங்கள் முன் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.
முதலில்இந்தப் பிரச்சனை குறித்து அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம் _பீ ஜைனுல் ஆபிதீன் என உங்கள் மறுப்பை தொடக்கியுள்ளீர்கள்.
உங்களது பிரேத்தியேக இணைய தளத்தில் குறித்த பிரச்சனை தொடர்பாக உங்களது ஆய்வை (நீங்கள் இது குறித்து ஆய்வு செய்திருந்தால்) வெளியிடாமல் அப்பாஸ் அலி அவர்களது ஆய்வை வெளியிட்டிருக்கிறீர்கள். விவாதங்கள், நிகழ்வுடன் சம்பந்தப்பட்டவர்களது நேரடித் தகவல்கள் (உதாரணம் தமுமுக விவகாரம்) போன்றவை அல்லாமல் உங்களோடு மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கு நீங்களே பதில் எழுதும் உங்கள் வழமைக்கு மாற்றமாக அதுவும் உங்கள் தனிப்பட்ட இணைய தளத்தில் முதன் முறையாக எமக்கு பதில் எழுதும் போது மாத்திரம் அப்பாஸ் அலி என்பவரது ஆய்வை தேவையான மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறீர்கள். அவர் குறித்த விடயத்தில் ஆய்வு செய்திருக்கிறார். நாம் இது தொடர்பான எமது வாதங்களை முன்வைத்தபின் அவரது ஆய்வில் செய்யப்பட்ட தேவையான மாற்றம் என்ன என்பது ஒரு புறமிருக்க, அவரது ஆய்வையே நீங்கள் சரி கண்டு உங்கள் இனைய தளத்திலே பிரசுரித்து உள்ளதால் அதை உங்கள் ஆய்வாகவே கருதியும் நபர்களை எதிர் கொள்வது முக்கியமில்லை, கருத்தை எதிர்கொள்வதே முக்கியம் என்ற எமது நடைமுறைக்கேற்பவும் இப்பதிலை உங்கள் முன்னிலையில் பதிவு செய்கிறோம்.
இந்த வாதத்தில் உருப்படியான ஒரு விஷயமும் இல்லை. தவறான கருத்துக்களுக்கு நாமே பதில் எழுதும் எந்த வழிமுறையயும் நாம் அறிவிக்கவில்லை. தகுதியானவர்களை ஊக்குவிப்பதும் அவர்களை முன்னிலைப் படுத்துவதும் தான் நமது வழிமுறை. களியக்காவிளை விவாதத்தில் மற்ற அறிஞர்கள் வாதிட்டனர். ரசாத் கலீபா கூட்டத்துடனும் இளம் மவ்லவிகள் தான் வாதிட்டனர். நாத்திகருடன் நடந்த விவாதத்தில் கூட நானே ஆக்ரமித்துக் கொள்ளவில்லை. மற்றவர்களை விட என் பங்கு குறைவாகவே இருந்தது. நான் மட்டும் தான் விவாதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்த போது மட்டும் (உதாரணம் ஜகாத் விவாதம் , முஜீப் விவாதம்) தான் நான் மட்டும் களம் இறங்கினேன். மற்றபடி அனைவருக்கும் நானே பதில் சொல்வது என்று எந்தக் கொள்கை முடிவும் எம்மிடம் இல்லை.
அடுத்து அவரது ஆய்வையே நீங்கள் சரி கண்டு உங்கள் இனைய தளத்திலே பிரசுரித்து உள்ளதால் அதை உங்கள் ஆய்வாகவே கருதியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் நான் அந்த ஆய்வுக்குப் பொறுப்பு என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆன்லைன் பீஜே இணையதளம் ஆகஸ்ட் மாதத்துக்கு முன் எனது பொறுப்பில் நடக்கவில்லை. அதில் இடம்பெறும் ஆக்கங்கள் செய்திகள் அனைத்தும் வெப்மாஸ்டர் பொறுப்பில் தான் நடந்தது. ஆகஸ்ட் முதல் டைனமிக் வடிவில் இணையதளம் இயங்கிய போது தான் அதன் ஒவ்வொரு செய்திக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
நமது இணையதளம் புது வடிவில் இயங்க ஆரம்பித்தபோது முதல் நாளே ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். அந்த அறிவிப்பு ஆன்லைன் பீஜே பற்றி என்ற தலைப்பில் இன்றும் உள்ளது.
அதில் நாம் குறிப்பிட்ட விஷயம் இது தான்
இந்த இணைய தளம் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் பல இணையதளங்களில் இருந்து பல விதங்களில் மாறுபட்டுள்ளதை நீங்கள் காணலாம். அதில் முக்கியமான வேறுபாடு இதில் வெளியாகும் அனைத்துக்கும் நாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.
எந்தக் கருத்து சரியானது என்று நமக்குத் தோன்றுகிறதோ அதைத் தான் மக்களிடம் நாம் வைக்க வேண்டும். தவறானது என்று நமக்குத் தோன்றுவதையும், சரியா தவறா என்று நமக்கே சந்தேகமானதையும் நாம் மக்களிடம் வைக்கக் கூடாது.
ஆனால் பெரும்பாலான இணைய தளங்கள் யாருடைய எந்தக் கருத்தையும் வெளியிடுவதுடன் இதில் வெளியிடப்படுவதற்கு நாம் பொறுப்பல்ல என்று பொறுப்பற்று நடப்பதைக் காண்கிறோம்.
நாங்கள் பொறுப்பல்ல என்று மக்கள் மத்தியில் இவர்கள் அறிவித்தாலும் அல்லாஹ்விடம் இவர்கள் தான் அதற்குப் பொறுப்பாளர்கள். இவர்கள் வெளியிட்டதை நம்பி தவறானதைப் பின்பற்றியவர்களின் பாவ மூட்டைகளை இவர்கள் சுமப்பார்கள்.
அது போல் தனி நபர்களைப் பற்றி எழுதப்படும் தரக் குறைவான விமர்சனங்களையும் வெளியிட்டு இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அறிவிப்புச் செய்கின்றனர்.
அனைத்து வகையான உணவுகளையும் பரிமாறும் உணவு விடுதியில் இங்கே பரிமாறப்படும், பன்றி இறைச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல; அதைச் சமைத்தவர் தான் பொறுப்பு என்று அறிவிப்பு பலகை தொங்க விடுவது போல் இவர்களின் இந்தச் செயல் அமைந்துள்ளது.
பொறுப்பற்ற கேவலமான இந்த இழி செயலை இந்த இணைய தளம் செய்யாது. தனக்குச் சரி என்று பட்டதை மட்டுமே வெளியிடும். இதில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்.
 قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع
கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.
இது எனது சொந்தப் பொறுப்பிலும் சொந்தச் செலவிலும் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த இணைய தளத்தின் அனைத்துக்கும் நானே பொறுப்பாளி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
இவ்வளவு தெளிவாக நான் அறிவித்துள்ள பின் இதை இவர்கள் புதிதாகக் கண்டு பிடித்துள்ளனர். இப்போதும் நான் சொல்கிறேன். இந்த இணைய தளத்தில் யாருடைய ஆக்கமும் இடம் பெறும். யாருடைய ஆக்கம் இடம் பெற்ற்றாலும் அதை நானும் வாசித்து அதன் அனைத்து விஷயங்களிலும் முழு திருப்தி அடைந்த பிறகு தான் வெளியிடுவேன். ஒரு வேளை அந்த ஆக்கம் தவறு என்றால் அது கட்டுரையாளர் தவறு என்று நான் கூற மாட்டேன். அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன் என்று திட்டவட்டமாக நான் அறிவித்த பின் யார் பெயரில் மறுப்பு வெளியானால் என்ன?
நான் பொறுப்பேற்பதற்கு முன் மற்றவரின் பொறுப்பில் வெளியான விஷயங்களுத் தான் நான் பொறுப்பாளியாக மாட்டேன். ஆகஸ்டுக்குப் பின் வெளியிடப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் நானே பொறுப்பாளி என்று நானே அறிவித்த விஷயத்தைத் தான் புதிதாகக் கண்டு பிடித்து கூறுகின்றனர்.
அப்பாஸ் என்றதும் தான் இந்த இடத்தில் எமக்கு இன்னுமொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஏற்கனெவே உங்கள் அமைப்பின் இணையத்தள நிர்வாகி எஸ் எம் அப்பாஸ் என்பவர் இரண்டாம் ஜமாஅத் தொடர்பாக சகோதரர் அலி ********* என்பவருக்கு வழங்கிய தவறான பத்வாவும் அது தொடர்பாக அவர் எம்மிடம் விளக்கம் கேட்ட போது நாம் எழுதிய மறுப்புக்கு இன்று வரை அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது உரிய பதிலோ எழுதாமல் மௌனம் சாதிக்கும் தாங்கள் (பார்க்க :ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்தபின் இன்னுமொரு ஜமாஅத் நடாத்த அணுமதி உண்டா?)
குறித்த தங்க நகை விடயத்தில் இன்னுமொரு அப்பாஸை களமிறக்கியிருப்பதற்கும், மாற்றுக் கருத்துடையவர்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்போம் எனக் கூறும் உங்கள் நிலைப்பாட்டுக்கும் தெளிவான முரண்பாடாகத் தென்படவில்லையா ? அல்லது எதற்கு உங்களிடம் பதில் இல்லையோ அதை அப்படியே ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எதற்கு பதில் சொல்ல முடியுமோ அல்லது பதில் என்று எதையாவது சொல்ல முடியுமோ அதற்கு மாத்திரம் பதில் அளிப்பதுதான் உங்களது நிலைப்பாடா என்பதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.
அடுத்து இவர்கள் குறிப்பிடும் வாதமும் அபத்தமானது. நமது இணையதளத்தின் முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டது புதிய வடிவத்தில் வந்த பிறகு தான். அதன் பிறகு நம்முடைய கவனத்துக்கு வரும் ஒவ்வொரு தவறான வாதங்களுக்கும் மறுப்பு எழுதி வருகிறோம்.
(ஒரே நேரத்தில் அனைத்துக்கும் பதில் எழுத இயலாது. ஒவ்வொன்றாகத் தான் பதில் எழுத முடியும். இவர் அவசரப்படுவதால் இரண்டாம் ஜமாஅத் குறித்து இவரது அபத்தமான ஆய்வுக்கும் மறுப்பு வெளியிடப்பட்டு விட்டது. அதன் பிறகு இன்று வரை மவுனம் சாதிக்கிறார்.)
அது சரி இதற்கும் பெண்கள் தஙக் நகை அணியக் கூடாது என்ற வாதத்துக்கும் என்ன தொடர்பு?
பதில் எழுதப்படாத பல வாதங்கள் இன்னும் உள்ளன.. இவர்களைப் போல் தான் இஸ்மாயீல் சஃலபியும் சொன்னார். எதற்கு பதில் உள்ளதோ அதை மட்டும் எழுதுகிறார்கள் என்று கூறிய அவர் இப்போது உண்மையை உணர்ந்திருப்பார். இன்ஷா அல்லாஹ், அது போல் உங்கள் வாதங்கள் ஒவ்வொன்றும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மக்களிடம் ஒரு விஷயம் எந்த அளவுக்குப் பரவியுள்ளதோ அந்த வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அடுத்துபெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன என்று 02/11/2009 அன்று தாங்கள் வெளியிட்ட முதல் தொடரில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏதோ இக்கட்டுரை வெளியிடப்படும் காலப் பகுதியில் தான் நாம் இக்கருத்தை முன்வைத்தது போலும், அது குறித்த வாதப் பிரதி வாதங்கள் இலங்கையில் பரவலாக நடந்து வருகிறது போலும், அது பற்றிய தெளிவை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்ற காரனத்தால் சுடச் சுட தாங்கள் பதிலளிப்பது போன்ற ஒரு பிரம்மையை தமிழ் நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் குறிப்பாக அல் குர் ஆனும் ஆதாரப் பூர்வமான நபி மொழியும் மாத்திரம் தான் இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழும் கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறீர்கள்.
ஆனால் உன்மை நீங்கள் குறிப்பிட்டதற்கு மாற்றமாக அல்லவா அமைந்துள்ளது.!! நாம் குறித்த தங்க வளையல் நகை தொடர்பான கருத்தை முன்வைத்தது 27/05/2009 அன்றாகும்.
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? Posted on மே 27, 2009 by darulathar (பார்க்க எமது இணையதளம்) என்ற கட்டுரை மூலமாக ஐந்தாம் மாத இறுதியில் எமது கருத்தை வெளியிடுகிறோம். வழமையாக நாம் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் ஒரு கருத்தை வெளியிடும் போது ஏற்படுவது போன்ற சிறு சலசலப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் இஸ்மாயில் மதனி என்ற சகோதரர் ஒரு மஸ்அலா இஜ்திஹாத் என்ற வகையில் பதில் பேச அதற்கான எமது தரப்பு பதில்களும் அளிக்கப்பட்டதே அன்றி நீங்கள் அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன என்று எழுதியுள்ளது போல் எந்த வாதங்களும் நடக்க வில்லை.
இவர்களின் புரிந்து கொள்ளும் திறன் பற்றி நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இவர்களுக்கு எதிர் கருத்து கொண்ட உலமாக்களுக்கும் மத்தியில் விவாதம் நடந்தது என்று நாம் குறிப்பட்டது போல் சித்தரித்து அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். நாம் எழுதிய வாசகம் என்ன? இது குறித்து இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் விவாதங்கள் நடக்கின்றன என்று தான் எழுதினோம். இலங்கை முஸ்லிம்கள் இது குறித்து தமக்கிடையே விவாதிக்கிறார்கள் என்று நாம் எழுதியதை இஸ்மாயில் ஸலஃபியைப் போல் புரிந்து கொண்டு எழுதியுள்ளனர்.
மே மாதத்தின் இறுதி நான்கு நாட்களையும் கழித்து விட்டுப் பார்த்தால் கூட ஜூன், ஜூலை, ஓகெஸ்ட், செப்டம்பர், ஒக்டோபர் என முழுமையாக ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் நீங்களோ அல்லது உங்களுக்கென்று இலங்கையில் இருக்கும் அமைப்போ அல்லது அதன் பிரச்சாரகர்களோ வாய் திறக்கவுமில்லை, கருத்து வெளியிடவுமில்லை. ஒரு வேளை இவ்வாறான ஆய்வியல் விடயங்களில் அபிப்பிராயம் வெளியிடும் தகுதியோ திறனோ வாய்ந்த உலமாக்கள் இலங்கையில் உங்கள் அமைப்பில் இல்லை என்ற ஒரு நியாயமான காரணம் இருந்தாலும் குறைந்த பட்சம் நீங்களாவது இந்த நீண்ட காலப் பகுதியில் உங்கள் கருத்தை வெளியிட்டு இருக்கலாம் அல்லவா?
இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு, முஜீபு, அப்துர் ரஹ்மான்களுக்கு மறுப்பு என நீங்கள் வேலைப் பழுக்களுடன் இருந்தாலும் ஏற்கனவே செய்யப்பட்ட அப்பாஸ் அவர்களது ஆய்வை வெளியிடவா உங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப் பட்டது என்ற ஒரு நியாயமான கேள்விக்கு நீங்கள் பதில் கூறக் கடமைப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா?
மேலும், வழமையாக ஆளை, அவர் சார்ந்திருக்கும் அமைப்பை அடையாளப் படுத்தி எழுதும் நீங்கள்பெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு.. என்றும் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா? என்றும் செயெற்பாட்டு விணையிலும் யாரோ முகவரியும் அடையாளமும் இல்லாத சிலர் மேற்படி கருத்தை முன்வைப்பது போலவும் எழுதியுள்ளதற்கான காரணம் என்ன?! நாம் யார் , எமது அமைப்பு என்ன, எமது அழைப்பு என்ன என்பதை அடையாளப் படுத்தினால் அல்குஆன் அஸ்ஸுன்னாவை யார் சொன்னாலும் அதைப் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாழும் சகோதரர்கள் குறிப்பாக இலங்கை வாழ் கொள்கை சகோதரர்கள் எமது கருத்துகளில், வாதங்களில், நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும் உன்மையையும் பின்பற்ற ஆரம்பித்து எமது பக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரனம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.
இதுவும் அர்த்தமற்ற வாதமே. எங்கள் வேலைப்பளுவுக்கு இடையில் எப்போது இயலுமோ அப்போது தான் வெளியிடுவோம். பிறருடைய ஆய்வு என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு வெளியிடுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு எத்தனை மறுப்பு வேண்டுமானாலும் வெளியிட முடியும். நாம் பரிசீலித்து சிந்தித்து வெளியிடுவதால் கிடைக்கும் நேரத்துக்கு ஏற்பவே வெளியிட முடியும்.
குறிப்பாக இலங்கை வாழ் கொள்கை சகோதரர்கள் எமது கருத்துகளில், வாதங்களில், நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும் உண்மையையும் பின்பற்ற ஆரம்பித்து எமது பக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.
என்று எழுதியது இவர்களின் கோபத்துக்குரிய காரணம் என்ன என்பதை விளக்குகிறது. தங்க நகை கட்டுரைக்கு நாம் எழுதிய மறுப்பு இவர்களின் அறியாமையை மக்கள் புரிந்து கொள்ள காரணமாகியுள்ளது. ஆளாளுக்கு பதில் சொல்ல முடியாத கேள்விகளை இவர்களிடம் கேட்க ஆரம்பித்துள்ளனர். அதைத்தான் மேற்கண்ட வாசகம் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.
சரியான கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம். ஆட்கள் சேர்ப்பது நோக்கம் இல்லை. ஆட்கள் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு தவறான கருத்தைச் சொன்னவர்கள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
இஸ்மாயீல் ஸலபி வைத்த வாதம் போல் வாதத்தை வைக்காமல் பெண்கள் வளைந்த தங்க நகை அணியக் கூடாது என்பதை நிரூபிக்கும் வழியைப் பாருங்கள். நீங்கள் அர்த்தமற்ற கருத்தை மக்கள் மத்தியில் வைத்து பின்னர் அது தவறு என்பது நிரூபணமானால் மக்கள் உங்களை விட்டுப் போகத் தான் செய்வார்கள். எதிர்க் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள். மக்கள் நம்மை விட்டு போகிறார்களே என்று ஆத்திரப்படுவதில் அர்த்தம் இல்லை.
இதன் பின்னர் தங்களைப் பற்றி பெருமை அடிக்கும் வகையில் விரிவாக எழுதியுள்ளனர். அது பதில் சொல்லத் தேவையற்றது.
தங்க நகை அணிவது பற்றி இவர்கள் எடுத்து வைக்கும் ஆய்வுக்காகக் காத்திருக்கிறோம். பொதுவாக இவர்களுக்கு ஒரு அறிவுரையைக் கூறுகிறோம். வாதம் செய்யும் போது முக்கிய தலைப்பு குறித்த விஷயங்கள் தான் பெரும்பாலும் இடம் பெற வேண்டும். மிகக் குறைந்த அளவில் இடையிடையே தலைப்புடன் நேரடியாகத் தொடர்பு இல்லாத விஷயங்களை குறிப்பிடுவது தவறல்ல. தலைப்புக்கே வராமல் முழுக்கட்டுரையையும் சுய தம்பட்டம் அடிக்க பயன்படுத்த வேண்டாம் என்பதே அந்த அறிவுரை.
தொடர் : 4
பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறி தவறான ஃபத்வாக் கொடுக்கும் இலங்கையைச் சேர்ந்த சிலரின் அபத்தமான வாதங்களுக்கு அப்பாஸ் அலி அவர்கள் தக்க பதில் கொடுத்தார். அதை மறுத்த அந்த இலங்கைவாசி தனது முழு மறுப்பிலும் தனது வாதத்தை நிறுவ முடியவில்லை. நாம் எழுதியது குறித்து சில கேள்விகளைக் கேட்கிறாரே தவிர பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதை நிரூபிக்கவே முடியவில்லை. அப்பாஸ் எழுதிய அந்த இரண்டு தொடர்களையும், மேற்படியாரின் மூன்று தொடரையும் ஒருவர் வாசித்தால் பெண்கள் வளைந்த அல்லது வளையாத தங்க நகை அணியக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார். ஒரு ஆய்வாளர் எதிர்க்கருத்து உடையவர்களிடம் கேள்வி கேட்கலாம். ஆனால் தனது கருத்தை முதலில் அவர் நிரூபிக்க வேண்டும். இப்படிச் சொன்னது ஏன்? அப்படிச் சொன்னது ஏன் என்றெல்லாம் கேள்விகள் மட்டுமே கேட்கிறார்.
இது பதில் சொல்லத் தேவையற்றது என்ற தரத்தில் தான் அமைந்துள்ளது. அறிவின்றி மக்களை வழி கெடுக்கும் இவரை இனம் காட்டும் அவசியம் கருதி அப்பாஸ் அலி எழுதிய மறுப்பின் முதல் பாகம் வெளியிடப்படுகிறது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

பெண்கள் வளைய வடிவிலான தங்க நகைகளை அணியக் கூடாது. மற்ற வடிவங்களில் அணியலாம் என்ற கருத்தை இலங்கையில் சிலர் கிளப்பினார்கள். இக்கருத்து சரி தானா? என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்கையில் இது தவறான முடிவு என்பதை அறிந்தோம். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் இரண்டு தொடர்களாக நமது ஆய்வை இணையதளத்தில் நாம் வெளியிட்டிருந்தோம்.
நமது கருத்தை மறுத்து சகோதரர் நவ்ஃபர் என்பவர் அவரது ஆய்வுக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டுள்ளார்.
இதில் முதலாவது தொடரில் ஆய்வு சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் அவர் கூறவில்லை. உருப்படியான விமர்சனங்களும் அதில் இல்லை. அவரது இயக்கத்தைப் பற்றிய வரலாறைக் கூறும் கட்டுரையாகவே அது இருந்தது. எனவே இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தனது இரண்டாவது தொடரில் நமது ஆய்வுக்குத் தேவையில்லாத சில்லரைத் தனமான பல விஷயங்களில் நுழைந்து அவரது ஆய்வை விரும்பத் தகாத முறையில் கொண்டு சென்றுள்ளார். ஆய்வுக்குச் சம்பந்தமில்லாமல் ஒன்றுக்கும் உதவாத அவரது விமர்சனங்களுக்கு நாம் பதிலளித்து நமது ஆய்வை அலங்கோலமாக்க நாம் விரும்பவில்லை.
எனவே அவரது இரண்டாவது தொடரிலும் மூன்றாவது தொடரிலும் ஆய்வு தொடர்பாக அவர் எழுதிய விஷயங்கள் அனைத்திற்கும் இங்கு ஒன்று விடாமல் பதிலளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
இவர் நமது வாதங்களுக்குப் பதிலைத் தந்துள்ளாரா? அந்தப் பதில் உண்மையில் சரியானவையா? நாம் எழுப்பிய எந்தக் கேள்விக்கு இவர் பதிலைக் கூறவில்லை? இந்த ஆய்வில் அவர் எங்கே தடுமாறுகிறார்? எங்கே தவறு செய்கிறார்? இவர் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் கூறும் பதில் என்ன? இன்னும் பல விஷயங்களை இந்தத் தொடரில் நாம் தெளிவுபடுத்த இருக்கிறோம்.
இதைப் படிப்பதற்கு முன்னால் ஏற்கனவே நாம் வெளியிட்ட இரண்டு தொடர்களையும் படிக்குமாறு வாசகர்களுக்கு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
குழப்பம் :1
பெண்களுக்குத் தங்கம் அனுமதிக்கப்பட்டது என ஒரு ஹதீஸில் கூறிய நபி (ஸல்) அவர்கள் இன்னுமொரு ஹதீஸில் நரக நெருப்பினால் ஆன வளையம்.. தங்கத்தினால் ஆன வளையம் எனக் கூறியதன் அடிப்படையில் தங்க வளையல் என நாம் ஹதீஸின் கருத்தை கூற (அது ஆணுக்கா பெண்ணுக்கா என்பது பின்னர் விளக்கப்படும்) அதை வளையல், வளையல் அல்லாத என்று வித்தியாசப்படுத்துவதைஅறியாமையின் உச்சகட்டம் என கருத்துத் தெரிவிப்பது தான் உண்மையில் அறியாமையின் உச்சகட்டமாகும்.
இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் முதலில் பார்ப்போம்.
பெண்கள் தங்க நகை அணிவது குறித்து வாதிடும் போது வளைந்த வடிவிலான தங்க நகை கூடாது. வளைந்த வடிவம் அல்லாத தங்க நகை கூடும் என்று இவர்கள் வாதிடுவது அறியாமை என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.
அதற்குத் தான் அவர் பதில் சொல்லி இருக்கிறார்.
வளைந்த வடிவம், வளைவு இல்லாத வடிவம் என்று வகைப்படுத்தியது அறியாமை இல்லை; அவ்வாறு விளங்குவதற்கு ஹதீஸ் இடம் இடம் தருகிறது. எனவே இது அறியாமை அல்ல; அறியாமை என்று கூறுவது தான் அறியாமை என்று இவர் வாதிடுகிறார்.
3698حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسَْمَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ عَنْ أَسِيدِ بْنِ أَبِي أَسِيدٍ الْبَرَّادِ عَنْ نَافِعِ بْنِ عَيَّاشٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆனவளையத்தைஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆனவளையத்தைஅவருக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவருக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவருக்கு அணிவிக்கட்டும். மாறாக வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அபூதாவுத் (3698)
எப்படி இவர் வாதிடுகிறார்? பின் வரும் ஹதீஸில் நெருப்பினாலான வளையம் தங்கத்தாலான வளையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே வளைந்த வடிவத்தையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது தான் இவரது வாதம்.
நமது பதில்
இந்த வாதம் ஏற்கனவே இவர்கள் செய்த வாதம் தான். அது தவறு என்பதைத் தான் நாம்தக்க காரணத்துடன் விளக்கினோம். அந்தக் காரணத்தைக் கண்டு கொள்ளாமல் முன்புசொன்னதையே அப்படியே சொல்லி இருக்கிறார்.
ஆனால் உண்மையில் இச்செய்தியில் இவரது கருத்தைத் தகர்த்தெறியக்கூடிய அம்சம் மட்டுமே இருக்கிறது.
இந்தச் செய்தி குறிப்பிட்ட வடிவம் பற்றி பேசவில்லை: தங்கம் என்ற உலோகம் பற்றியேபேசுகிறது என்பதை ஆதாரத்துடன் நாம் விளக்கி இருந்தும் அதை அப்படியே கண்டுகொள்ளாமல் நழுவுகிறார்.
இது பற்றி நம்முடைய இரண்டாவது தொடரில் எழுதியதைப் பாருங்கள்!
ஏன்?இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது.
இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வெள்ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள்.
இவர் வளைந்த வடிவம் என்று எந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டினாரோ அந்த ஹதீஸ் வளைந்த வடிவம் பற்றி பேசவில்லை என்பதற்கு அழுத்தமான இந்த வாதத்துக்கு அவரால்பதில் சொல்ல முடியவில்லை.
நமது அந்த வாதத்தை இன்னும் தெளிவாக விளக்குகிறோம்.
ஒரு செய்தியில் சரியான கருத்து எது என்பதில் குழப்பம் ஏற்பட்டால் அதன் எதிர்க்கருத்தை வைத்து சரியான அர்த்தத்தைக் கண்டு பிடிக்கலாம். இது சிந்திக்கும்வழிவகைகளில் ஒன்றாகும்.
மேற்கண்ட ஹதீஸில் எதிர்க் கருத்து இல்லாமல் ஒரு கருத்து மட்டும் இருந்தால் இவர்குழம்புவது போல் குழம்ப வழி இருக்கும். ஆனால் இந்த ஹதீஸில் எதிர்க் கருத்தும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
அதாவது எது தடுக்கப்பட்டது என்று கூறுவதுடன் எது தடுக்கப்படவில்லை என்பதும் கூறப்படுகிறது.
வளைந்த வடிவத்திலான தங்கத்தைத் தடுப்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கம் என்றால்தங்க வளையத்தை அணிய வேண்டாம்; வளையம் இல்லாத வேறு வடிவத்தை அணியுங்கள்என்று தான் கூற வேண்டும்.
ஆனால் அப்படிக் கூறாமல் தங்க வளையத்தை அணிய வேண்டாம்வெள்ளியை அணிந்து விளையாடுங்கள்என்று கூறப்பட்டால் தங்கம் என்ற உலோகம் தான் கூடாது என்ற கருத்து தான் அதில் உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வளையம் என்பதற்கு எதிராக வெள்ளியைக் கூறியதன் மூலம் தங்கம் என்ற உலோகம் பற்றியே கூறப்படுகிறது என்பதை அறியலாம்.
எனவே தான் இவரது வாதத்தை அறியாமை என்று நாம் குறிப்பிட்டோம். இதற்கு அவர் பதில்சொல்ல முடியாததில் இருந்து அது உறுதியாகிறது.
இந்த ஹதீஸின் இறுதியில் இடம் பெற்றுள்ளமாறாக வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களைச் செய்து) விளையாடுங்கள்என்ற வாசகம் தங்கம் வட்டமாக இருந்தாலும் வேறு வடிவத்தில் இருந்தாலும் அது முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். வெள்ளியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் தருகிறது.
வளையமில்லாத வேறு வடிவிலான தங்கம் கூடும் என்றால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பற்றி இங்கு பேசாமல் தங்கத்திற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறுகிறார்கள்.
எனவே இவர்களின் விபரீதக் கருத்திற்கு ஆதாரமாக இவர்கள் காட்டுகின்ற இந்த ஹதீஸ் இவர்களின் வாதத்தை வேறோடு சாய்த்து விடுகிறது.
நாம் எழுப்பிய இந்தக் கேள்விக்கு மழுப்பலான பதிலை கூட ஏன் இவரால் கூற முடியவில்லை?இவர் செய்த இந்த காரியத்தை அறியாமையின் உச்சகட்டம் என்று நாம் எழுதியது தவறு என்றால்?தில்லுமுல்லு வேலை என்றுதான் கூற வேண்டும்.
குழப்பம் :2
ஹுபைராவின் மகள் கையில் மோதிரத்தை வைத்திருந்தார்கள் என்று தான் ஹதீஸில் வாசகம் உள்ளது. அணிந்திருந்தார்கள் என்று இல்லை. எனவே இந்த ஹதீஸ் தங்கம் அணிவதைப் பற்றி பேசவில்லை என நாம் எழுதியிருந்தோம்.
இதற்கு மாற்றமாக ஹுபைராவின் மகள் தங்க மோதிரத்தை அணிந்து இருந்தார்கள் என்பது தான் சரி என தனது கருத்தை நிறுவவதற்கு பின்வருமாறு அவர் கூறியுள்ளார்.
எனினும் மோதிரங்கள் என்றும் கையில் என்றும் வாக்கியம் அமைந்திருப்பதால் கையில் அணிந்திருந்தார்கள் என்ற அர்த்தமே மேலோங்கியுள்ளது.
நமது பதில்:
பெண்கள் தங்கம் அணிவதை ஹராமாக்கக் கூடிய இவர் எவ்வளவு பலவீனமான வாதத்தை எழுப்பியுள்ளார் என சற்று சிந்திக்க வேண்டும்?
மோதிரங்கள் என்றும்விரல்கள் என்றும்ஹதீஸில் வந்திருந்தால் தான் இவர் கூறுவது போல் அணிவது என்ற அர்த்தம் வரும்.
மோதிரம் என்றும்கையில் என்றும்வருவதால் அணிதல் என்ற அர்த்தம் எப்படி மேலோங்கும்?
அணிதல் என்று கூறுவது இவரது கருத்திற்கு தோதுவாக உள்ளது என்ற ஒரு காரணத்தைத் தவிர்த்து வேறு அறிவுப்பூர்வமான காரணம் இதில் என்ன இருக்கிறது?
அணிவதற்கும் அணியாமல் கையில் வைத்திருப்பதற்கும் சம அளவில் இடம்பாடுள்ள இந்த வாசகத்தை அணிவது தான் மேலோங்கியுள்ளது எனக் கூறி தனது கருத்தின் பக்கம் ஆதாரமில்லாமல் வளைக்கிறார். ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்படித் தான் யூகத்தை அடிப்படையாக வைத்து ஹலாலான ஒன்றை ஹராமாக்குவதா?
குழப்பம் :3
2434أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ حُسَيْنٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْيَمَنِ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتٌ لَهَا فِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ أَتُؤَدِّينَ زَكَاةَ هَذَا قَالَتْ لَا قَالَ أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ هُمَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه النسائي
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:
யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்து விட்டாயா?என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அப்பெண் அவ்விரண்டு காப்புகளையும் கழற்றி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு இவ்விரண்டும் சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விற்கு உரியதாகும். மேலும் அவனது தூதருக்கும் உரியாதாகும் என்று கூறினார்.
நஸயீ (2434)
மேற்கண்ட செய்தியில் கையில் காப்பு இருந்தது என்று உள்ளது. ஆனால் இதிலிருந்து காப்பை அணிந்திருந்தார்கள் என்ற கருத்தை கூறினோம்.
இதை இவர் தனது விகாரமான பாணியில் பின்வருமாறு விமர்சனம் செய்திருந்தார்.
இந்த உன்மையை ஆய்வாளர் அவர்களே தன்னையும் அறியாமல் தனது இரண்டாவது தொடரில்
யமன் நாட்டைச் சேர்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வளைந்த வடிவமானவை. வளைந்த வடிவத்தில் தங்கம் அணிவது கூடாது என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வளையமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லைஎன எழுதி மூலத்தில் وفي يد إبنتها مسكتان غليظتان من ذهبகையில் இருந்தனஎன்பதை அணிந்திருந்தாள் என மொழிபெயர்த்துள்ளார்.
பொய் சொல்பவருக்கு மாத்திரம் அல்ல,தவறான விளக்கம் கொடுப்பவருக்கும் ஞாபக சக்தி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் தான் முதல் தொடரில் எவ்வாறு பிழையான விளக்கம் கொடுத்தோம் என்பதற்கு ஏற்ப இரண்டாவது தொடரிலும் அதே விளக்கம் கொடுக்க முடியும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.
நமது பதில்:
ஆம் மேற்கண்ட ஹதீஸில் காப்புகள் கையில் இருந்தன என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த வாசகம் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். ஆனால் மேற்கண்ட செய்தி இவ்விரு கருத்துக்களுக்கும் இடம்பாடில்லாத வகையில் அணிதல் என்ற ஒரு கருத்தை மட்டும் தெளிவாகத் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
ஏனென்றால் இந்த ஹதீஸில் இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்குஅணிவிப்பதுஉனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதிலிருந்து அப்பெண் குழந்தை தங்கக் காப்பை கையில் வைத்திருக்கவில்லை. அணிந்து தான் இருந்தார் என்பது உறுதியாகிறது.
மேலும் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவ்விருகாப்புக்களைஅப்பெண்கழற்றிப் போட்டார்என்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.அணிந்தால் தான் கழற்றிப் போட்டார்கள்என்று கூற முடியும். கையில் வைத்திருந்தால் இவ்வாறு கூற முடியாது.
தடிமனான இரு காப்புகள் கையில் இருந்தன என்ற வாசகத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டுக் காட்டிய இவர் கழற்றிப் போட்டார்கள் என ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் குறிப்பிட்டுக் காட்டி இருக்கக் கூடாதா?
நடைமுறையில் உள்ள விஷயத்திற்கு மாற்றமான முடிவை எடுக்கும் போது கூடுதல் கவனத்தைக் கடைப்பிடியுங்கள் என நாம் கூறியதற்கு நானும் கடைப்பிடிக்கிறேன். நீங்களும் கடைப்பிடியுங்கள் என்று அழகாக பதிலளிப்பதை விட்டுவிட்டு அப்படியெல்லாம் கடைப்பிடிக்க முடியாது என ஆணவத்துடன் கூறியுள்ளார்.
உங்களிடம் கூடுதல் கவனத்தை எதிர்பார்ப்பது நியாயமற்றது என பொறுப்புணர்வின்றி பேசியுள்ளார்.
ஆனால் இவருடைய ஆய்வைப் பார்க்கும் போது இவரிடம் கூடுதல் கவனம் என்ன?சாதாரண ஒரு சராசரி மனிதனிடத்தில் இருக்கின்ற கவனம் கூட இல்லை என்பதே தெரிகிறது. கூடுதல் கவனம் செலுத்த மாட்டேன் என்ற இவரது அகம்பாவம் இவரை எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதை சற்று யோசியுங்கள்.
எனவே ஹுபைராவின் மகள் சம்பந்தப்பட்ட ஹதீஸில் அணிவது தான் கூறப்பட்டுள்ளது என இவர் ஹதீஸின் கருத்துக்கு மாற்றமாக முடிவு செய்ததைப் போன்று இந்த ஹதீஸில் நாங்கள் முடிவு செய்யவில்லை. ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்தோம்.
இது போன்று இவர் அந்த ஹதீஸில் எந்தச் சான்றுகளைக் கவனத்தில் கொண்டு அணிவது என முடிவு செய்தார்?.இவர் இவ்வாறு முடிவு செய்ததற்கு தனது தவறான யூகம் மட்டுமே சான்று என ஒப்புக் கொண்டுள்ளார்.
அடுத்து அவர் மேலே பின்வரும் கருத்த்கையும் பதிவு செய்து தன்னை அடையாளம் காட்டி விடுகிறார்.
பொய் சொல்பவருக்கு மாத்திரம் அல்ல,தவறான விளக்கம் கொடுப்பவருக்கும் ஞாபக சக்தி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் தான் முதல் தொடரில் எவ்வாறு பிழையான விளக்கம் கொடுத்தோம் என்பதற்கு ஏற்ப இரண்டாவது தொடரிலும் அதே விளக்கம் கொடுக்க முடியும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.
`அதாவது தவறான கருத்தைக் கூறி விட்டு அதை ஒப்புக் கொள்ளும் பண்புடைய எங்களுக்கு இந்தத் திறமை இல்லை. ஆனால் தான் தவறாக சொன்னதை நியாயப்படுத்தும் கெட்ட குணம் தன்னிடம் உள்ளதை அவரே இதன் மூலம் வெளிப்படுத்தி விட்டார்.
குழப்பம் :4
இந்த இடத்தில் ஆய்வாளர் சுட்டிக் காட்டாத ஒரு தவறும் எமது மொழி பெயர்ப்பில் உள்ளதை நாம் வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
அது,கையைத் தட்டி விட்டார்கள் என்ற வார்த்தையே ஹதீஸில் கிடையாது என்பது தான். மாறாக நஸாயியில் இடம் பெறும் அறிவிப்பில்فجعل رسول الله صلى الله عليه وسلم يضرب يدهاநபியவர்கள் அப்பெண்மணியின் கரத்தில் அடிக்கலானார்கள்என்றும் அஹ்மதில் இடம் பெறும் அறிவிப்பில்
فجعل رسول الله صلى الله عليه وسلم يقرع يدها بعصية معهநபியவர்கள் தன்னிடமிருந்த ஒரு குச்சியினால் அப்பெண்ணின் கையில் அடித்தார்கள் என்று சற்று மேலதிக விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.
எனவே ஹதீஸில் கையைத் தட்டி விட்டார்கள் என்ற கருத்து கிடையவே கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குவதுடன் இத்தவறான கருத்தின் அடிப்படையில் கையில் வைத்திருந்தார்கள் என்ற கருத்தை நிறுவ முற்பட்ட ஆய்வாளரின் விளக்கமும் தவறு என்பது நிரூபனமாகிறது.
அத்துடன் ஸஹ்றான் மௌலவி அவர்கள் மேற்படி மொழிபெயர்ப்பில் தவறு விட்டிருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் (அவர் ஹதீஸ்களில் சேர்த்திருக்கும் ஏராளமான கைச் சரக்குகளுடன் ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை!!!?)
ஆனால் மேற்படி மொழி பெயர்ப்பில் தவறு காண விளைந்த ஆய்வாளர்களது கண்களுக்கு இத்தவறு தென்படவில்லையா அல்லது தென்பட்டும் தங்களது தவறான வாதத்திற்கு இந்த தவறான பொழிபெயர்ப்பு உதவும் என்பதால் கண்டு கொள்ளவில்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்.
நமது பதில்:
ஹுபைராவின் மகளுடைய கையில் நபி (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள் என்று ஹதீஸில் கூறப்படுகிறது. மோதிரங்களை அணியாமல் கையில் வைத்திருந்தாலே தட்டிவிட முடியும். எனவே கையில் மோதிரங்களை வைத்திருந்தார்கள் என்பதே சரி என நாம் எழுதியிருந்தோம்.
தட்டி விட்டார்கள் என்றே இவர்களும் மொழி பெயர்த்திருந்தார்கள். ஆனால் மேற்கண்டவாறு நாம் வாதத்தை வைத்த உடன் இதற்குப் பதில் கூறவே முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் நாங்கள் மொழிபெயர்த்தது தவறு எனக் கூறி அந்தர் பல்டி அடித்து எப்படியாவது தங்கம் அணிவது பெண்களுக்கும் ஹராம் என நிறுவப் பார்க்கிறார்கள்.
இவர் எத்தனை பல்டிகள் அடித்தாலும் இவரால் இந்தத் தவறான கருத்தை நிறுவவே முடியாது.
மேலும் இவரது நிலைபாட்டை தகர்த் தெரியக்கூடிய ஒரு மொழிபெயர்ப்பை தவறுதல் என்று இவரே குறிப்பிடுகிறார் என்றால் சாதாரண கவனம் கூட இவரிடம் இல்லை என்பது உறுதியாகிறது.
இந்த இலட்சணத்தில் கூடுதல் கவனம் செலுத்த மாட்டேன் என இவர் அடிம்பிடிப்பது வினோதமாகவும், விசித்திரமாகவும் உள்ளது.
மேலும் இத்தவறு தங்களுக்குத் தென்படவில்லையா?அல்லது தவறு என்று தெரிந்தும் தனது கருத்திற்கு இது ஒத்துப்போவதால் கண்டு கொள்ளவில்லையா?என்று எங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறார்.
தவறு செய்தது இவர். இவரது குறையை மறைக்க அத்தவறுக்கு எங்களைக் குற்றவாளியாக ஆக்க முனைவது எவ்வளவு பெரிய அநியாயம்?எங்களது மொழி பெயர்ப்பாக இருந்தால் அதில் இவர் குதர்க்கமும் குழப்பமும் செய்வதற்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் தான் இவரது மொழியாக்கத்தையே குறிப்பிட்டு பதிலளித்திருந்தோம்.
மேலும் தட்டி விட்டார்கள் என இவர் மொழி பெயர்த்திருந்ததை நாங்கள் தவறு என்று நினைக்கவுமில்லை. தற்போது கூறவுமில்லை. ஹதீஸில் யள்ரிபு யக்ரஉ ஆகிய அரபு வினைச் சொற்கள் கூறப்பட்டுள்ளன.
இதனுடைய பொருள் அடித்தல் என்பது தான் என நீங்கள் கூறுகிறீர்கள். இவ்விரு வார்த்தைகளுக்கான பொருளை அரபு அகராதியில் சென்று பார்த்தீர்களானால் அடித்தல் என்ற அர்த்தம் இவைகளுக்கு இருப்பது போல் தட்டுதல் என்ற அர்த்தமும் இவைகளுக்கு உண்டு என்பதை சந்தேகமற உணரலாம்.
கதவைத் தட்டுவதற்கும் இவ்விரு வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே இல்லாத அர்த்தத்தை இவர் தவறுதலாக கூறியிருந்து அதை நாங்கள் சரி கண்டிருந்தால் தான் நாங்கள் தவறைக் கண்டு கொள்ளாமல் அதை ஆதரித்தோம் என்ற குற்றச்சாட்டு வரும்.
அடித்தல் தட்டுதல் இன்னும் பல அர்த்தங்களைக் கொண்டு இவ்வார்த்தைக்கு தட்டுதல் என இவரே மொழி பெயர்த்து விட்டார். இம்மொழிபெயர்ப்பு தவறில்லை. இவ்வாறு மொழிபெயர்ப்பதற்கு அரபுமொழியில் இடம் உண்டு என்பதால் அதை நாங்களும் சரி கண்டு எழுதியிருந்தோம். இப்போதும் அவ்வாறு மொழி பெயர்ப்பது தவறில்லை என்றே கூறுவோம்.
நாங்கள் வலுவான வாதத்தை எழுப்பிய பிறகு தட்டி விட்டார்கள் என்று மொழி பெயர்த்தால் பெண்கள் தங்கம் அணிவதை தடை செய்ய முடியாது என்பதை உணர்ந்த இவர்மொழிபெயர்ப்பில் நாங்கள் தவறிழைத்து விட்டோம்என்று கூறி பின்வாங்குவது சந்தர்ப்பவாதமாகத் தெரியவில்லையா?இப்படி புரண்டு பேசுபவர்களிடத்தில் உண்மை எப்படி இருக்கும் என்பதை மக்கள் நடுநிலையோடு யோசிக்க வேண்டும்.
குழப்பம் :5
1.ஹுபைறாவின் மகள் கையில் கனமான மோதிரங்கள் அணிந்திருந்ததனால் அவர் கையில் தன்னிடமிருந்த குச்சியினால் அடித்த நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ் உனது கரத்தில் நரக நொருப்பினால் ஆன மோதிரங்களை அல்லாஹ் ஆக்கிவிடுவது உனக்கு மகிழ்சியளிக்குமா?என மோதிரங்கள் அணிவதை எச்சரிக்கை செய்கிறார்களே தவிர தங்கமே வைத்திருக்கக் கூடாது எனக் கூறி அவைகளை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் படி கூறவில்லை.
நமது பதில்:
உனது கரத்தில் நரக நொருப்பினால் ஆன மோதிரங்களை அல்லாஹ் ஆக்கிவிடுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா?
இந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் ஹுபைராவின் மகளிடத்தில் கூறுவதால் அவர் தங்க மோதிரத்தை அணிந்து தான் இருந்தார் என சிரமப்பட்டு நிறுவுவதற்கு முன்வருகிறார்.
ஹுபைராவின் மகளிடத்தில் இந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹம்மாம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் சில நேரங்களில் தவறிழைப்பவராவார்.
ஹம்மாமைத் தவிர வேறு நம்பகமானவர்கள் இதை அறிவிக்கும் போது இந்த இடத்தில் இந்த வாசகத்தை அவர்கள் கூறவில்லை. ஏன் இந்த வாசகத்தை அறிவித்த ஹம்மாம் சில நேரங்களில் இந்த வாசகத்தை குறிப்பிட்டும் சில நேரங்களில் இந்த வாசகத்தைக் குறிப்பிடாமலும் அறிவித்துள்ளார்.
எனவே இந்த வாசகம் நபி (ஸல்) அவர்கள் கூறியது தானா?என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க இப்படிக் கூறியிருந்தாலும் இதன் மூலம் மோதிரங்களை அணிந்து தான் இருந்தார்கள் என்ற பொருள் எப்படி வரும்?
அல்லாஹ் உனது கையில் நெருப்பால் ஆன மோதிரங்களை அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் தான் ஹுபைராவின் மகள் மோதிரத்தை அணிந்திருந்தார் என்ற பொருள் வரும். ஆனால் இங்கு நெருப்பால் ஆன மோதிரங்களை அல்லாஹ் ஆக்கிவிடுவது என்றே கூறப்பட்டுள்ளது. ஆக்குதல் என்பதற்கும் அணிவித்தல் என்பதற்குமுள்ள வித்தியாசத்தை இவர் உணராத காரணத்தால் மிகவும் சிரமப்பட்டு அணிந்து தான் இருந்தார்கள் என நிறுவப் பார்க்கிறார்.
மோதிரத்தை அணிதல் என்பதற்கு தகத்தம என்ற வாசகம் அரபு மொழியில் இருந்தும் கூட அந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடவில்லை. அணிவிப்பதற்கும் அணிவிக்காமல் கையில் வைத்திருக்கச் செய்வதற்கும் சாத்தியமான ஆக்குதல் என்ற வாசகமே கூறப்பட்டுள்ளது. எனவே இதை வைத்து அணிந்து தான் இருந்தார் என வாதிட முடியாது.
ஒரு பேச்சிற்கு ஹுபைராவின் மகள் தங்க மோதிரங்களை அணிந்து தான் இருந்தார் என்று வைத்துக் கொண்டாலும் அப்போதும் இந்த ஹதீஸில் நாம் எழுப்பிய வாதம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பதையே இந்த ஹதீஸ் கண்டிக்கிறது என்பதே நமது வாதம். தங்கத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற தடைக்குள் அணிவதும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால் தங்கத்தை அணிவது தங்கத்தை சேமிப்பதாகும்.
இந்த அடிப்படையில் ஹுபைராவின் மகள் தங்க மோதிரத்தை அணிந்து தான் இருந்தார் என்று வைத்துக் கொண்டாலும் அது நமது வாதத்திற்கு எதிராக அமையாது.
தங்கத்தை சேமித்து வைப்பது கூடாது என்ற கருத்தையே இந்த ஹதீஸ் கூறுகிறது என்பதை இன்னொரு வகையிலும் ஆணித்தரமாக நாம் விளக்கியிருந்தோம்.
தங்கம் அணிவது மட்டும் தான் கூடாதென்றால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தங்கச் சங்கிலியை அணியாமல் கழற்றி தனது கையில் வைத்திருந்த போது அதை நெருப்புச் சங்கிலி என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்பதால் தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதை வைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். மேலும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதை விற்று ஒரு அடிமையை விடுதலை செய்த தகவல் நபியவர்களுக்கு எட்டிய பிறகே அல்லாஹ் ஃபாத்திமாவை நரகத்திலிருந்து காப்பாற்றி விட்டான் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
தங்கம் அணிவது மட்டுமே கூடாது என்ற இவர்களது கருத்து சரியாக இருக்குமேயானால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அச்சங்கிலியை அணியாமல் கழற்றி கையில் வைத்திருக்கும் போது அல்லாஹ் ஃபாத்திமாவை நரகத்திலிருந்து காப்பாற்றி விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் நரகம் என்ற இந்த எச்சரிக்கையை ஃபாத்திமா (ரலி) அவர்கள் கையில் வைத்திருந்த போது விடுக்கிறார்கள். அந்த நகையை விற்ற பிறகே இந்த எச்சரிக்கையிலிருந்து ஃபாத்திமா (ரலி) விடுபட்டதாக அறிவிக்கிறார்கள்.
இவ்வளவு தெள்ளத் தெளிவாக இந்த ஹதீஸில் தங்கத்தை வைத்துக் கொள்வது கூடாது என்ற கருத்து இருக்கும் போது இதற்குப் பதிலைக் இவர்கள் கூறாமல் அர்த்தமற்ற கேள்வி கேட்டு தப்பித்துச் செல்ல நினைக்கிறார்கள்.
ஹுபைராவின் மகள் சம்பந்தப்பட்ட நிகழ்வில் குதர்க்கம் செய்ய வாய்ப்பு இருந்ததால் அங்கு குதர்க்கம் செய்தார்கள். அந்த குதர்க்கமும் தவறு என நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் இங்கு குதர்க்கம் செய்ய முடியவில்லை என்பதால் இதற்கான பதிலைக் கூறாமல் குறுக்கீடுகளை மட்டும் செய்கிறார்கள். அந்தக் குறுக்குக் கேள்விக்கான பதிலை பின்னர் விளக்குவோம்.
எனவே ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வில் தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தே அடங்கியிருக்கிறது என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபனமாகிறது. ஹுபைராவின் மகள் தங்க மோதிரங்களை அணிந்து தான் இருந்தார்கள் என வைத்துக் கொண்டாலும் அதுவும் தங்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற பொதுவான இத்தடைக்குள் நுழைந்து கொள்ளும். எதிரானதல்ல.
மேலும் தங்க மோதிரங்களை வைத்துக் கொள்ளக் கூடாதென்றால் அதை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு ஏன் நபி (ஸல்) அவர்கள் ஹுபைராவின் மகளிடத்தில் கூறவில்லை?என்று குறுக்குக் கேள்வியை இவர்கள் எழுப்புகிறார்கள்.
தங்கம் வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் முன்னர் இருந்தது என்பதை மறுக்க இக்கேள்வி உதவாது.இதை என்ன செய்ய வேண்டும் என்ற தகவல் இங்கு சொல்லப்படவில்லையே என்ற அடிப்படையில் தான் இந்தக் கேள்வியைக் கேட்க முடியும்.
இந்தக் கேள்வியை இங்கு கேட்பதும் அர்த்தமற்றதாகும். ஏனென்றால் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் கூறப்பட்டதே அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காகத் தான். தங்கத்தை சேமிக்கக் கூடாது என்ற கட்டளையில் அதை நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலும் அடங்கியிருக்கிறது.
எனவே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய் என்று தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்பதால் அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஹுபைராவின் மகளிடத்தில் கூறவில்லை.
இவர்கள் ஹதீஸ்களைத் துண்டு துண்டாக விளங்குவதால் தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள். ஹதீஸ் முழுவதையும் படித்துவிட்டு முறையாகச் சிந்திப்பார்களானால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் தங்கச் சங்கிலியை விற்று நற்காரியத்தில் செலவு செய்த பிறகே நரகத்திலிருந்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் விடுதலை பெற்றதாக நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதிலிருந்து தங்கத்தை நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற வழிமுறை கூறப்படுகிறது.
மேலும் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு ஒரே ஹதீஸில் தான் இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. வேறு வேறு ஆதாரங்களில் இருந்தாலும் அதை ஏற்பதே சரியான நடைமுறை.
தங்கத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்ற வழிமுறை அதே ஹதீஸில் இறுதியில் கூறப்படுகிறது. மேலும் பின்வரும் வசனத்திலும் கூறப்படுகிறது.
எனவே ஹுபைராவின் மகளிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் தங்கத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் ஏன் கூறவில்லை என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِنْ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ(34)يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ(35)9
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு,அதனால் அவர்களின் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்,முதுகுகளிலும் சூடு போடப்படும்.இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்
அல்குர்ஆன் (9 : 34)
குழப்பம் :6
2.ஹுபைறாவின் மகள் நபியவர்களது மேற்படி செயலை பாத்திமா (ரழி) அவர்களிடம் கூறிய போது உடனே பாத்திமா (ரழி) அவர்கள் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி விடுகிறார்களே தவிர விற்பதற்கு ஆளனுப்பவில்லை.
எனவே தங்கம் அணிவதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள் என்பதும் இதை ஹுபைறாவின் மகள் பாத்திமா (ரழி) அவர்களிடம் சொன்ன போது அதானால் தான் பாத்திமா (ரழி) அவர்கள் மாலையைக் கழற்றி விட்டார்கள் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.
நமது பதில்:

இவர்களின் மேற்கண்ட வாதமும் தவறு. ஃபாத்திமா (ரலி) அவர்கள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றினார்கள் என்று தான் ஹதீஸில் உள்ளது. அதை அணியக் கூடாது என்பதால் தான் கழற்றினார்கள் என்று காரணம் கற்பிப்பது இவர்களின் கைச்சரக்காகும்.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியைக் கழற்றி இது அலீ (ரலி) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியது என்று கூறியதாக ஹதீஸில் உள்ளது. இந்த அடிப்படையில் அச்சங்கிலியைப் பற்றி ஹுபைராவின் மகளிடத்தில் விவரிப்பதற்காகத் தான் சங்கிலியைக் கழற்றினார்கள் என்று காரணம் கூற வாய்ப்புள்ளதே தவிர இவர்கள் கூறும் காரணத்திற்கு ஆதாரம் இல்லை.

ஹுபைராவின் மகள் நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் நடந்து கொண்ட விஷயத்தை ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கூறிய உடன் அவர்கள் அதை ஏன் விற்கவில்லை?என்ற அர்த்தமற்ற கேள்வியையும் கேட்கிறார்கள்.
இவர்கள் நினைப்பது போல் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அன்று செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்?ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியை நீண்ட காலம் கழற்றி வைத்திருந்தால் தான் அவர்கள் ஏன் செலவிடவில்லை என்ற கேள்வி வரும்.
ஆனால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியைக் கழற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து விடுகிறார்கள். கண்டனத்தைப் பதிவு செய்கிறார்கள். பிறகு அச்சங்கிலியை ஃபாத்திமா (ரலி) நல்வழியில் செலவிடுகிறார்கள். இதைக் கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி விற்றுவர ஆளனுப்பினார்கள் என ஸஹ்ரான் தவறாக மொழிபெயர்த்தார் என இவர்கள் கூறி இந்தத் தவறுக்கு ஸஹ்ரான் தான் பொறுப்பு. நாங்கள் இல்லை என்ற தோற்றத்தைக் கொண்டு வருகிறார்கள்.
இவரது அமைப்பில் இருந்து கொண்டு இல்லாதவற்றையெல்லாம் ஒருவர் கூறினால் அதைப் பார்த்துக் கொண்டு இவ்வளவு நாள் ஏன் அமைதியாக இருந்தார்?இந்தத் தவறை இதற்கு முன் ஏன் மக்களுக்கு இவர் தெளிவுபடுத்தவில்லை. ஸஹ்ரான் செய்த தவறு இவரது கருத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டாரா?
குதர்க்கம் :7
3.நபியவர்கள் வந்து பாத்திமா (றழி) அவர்களது கையிலிருந்த மாலையைக் கண்டிக்கிறார்களே தவிர அதை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் படி அறிவுறுத்தவில்லை. பாத்த்திமா (றழி) அவர்களாகவே அதை விற்று ஒரு அடிமையை வாங்கி உரிமை விடுகிறார்கள்.
நமது பதில்:
ஒரு ஹதீஸைச் சரியான அடிப்படையில் புரிவதற்கான ஒழுங்கு முறையே இவர்களுக்குத் தெரியவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியை விற்ற பிறகே நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது என நபி (ஸல்) கூறியதிலிருந்து தங்கத்தை நல்வழியில் செலவு செய்தால் தான் நரகத்திலிருந்து தப்பிக்க இயலும் என்பதைச் சந்தேகமற விளங்க முடிகிறது. இதை ஏற்றுக் கொள்ளாமல் குறுக்குக் கேள்வியை மட்டும் கேட்பது எந்த வகையில் நியாயம்?
ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் அதை நல்வழியில் செலவு செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவ்வாறு செய்தால் தான் நரகத்திலிருந்து தப்பிக்க முடியும் என நபி (ஸல்) அவர்கள் கூறியது அல்லாஹ்வின் பாதையில் தங்கத்தை செலவு செய்வது கட்டாயம் என்பதைக் காட்டவில்லையா?
தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டளையில் அதை நல்வழியில் செலவு செய்து விட வேண்டும் என்ற அம்சமும் அடங்கியிருக்கிறது.
உதாரணமாக மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை வைத்துக் கொள்வதற்கு ஆரம்ப நேரத்தில் ஒரு தடை இருந்தது. மூன்று நாட்களுக்கு மேல் இறைச்சியை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சட்டத்திலிருந்து மூன்று நாட்களைக் கடந்தால் அந்த இறைச்சியை ஏழைகளுக்குக் கொடுத்து விட வேண்டும் என்ற அம்சமும் அத்தடையினுள் அடங்கியிருக்கிறது.
இந்த அடிப்படையில் தான் தங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டளையிலிருந்து அதை நல்வழியில் செலவு செய்துவிட வேண்டும் என்ற கருத்தும் அடங்கியிருக்கிறது. எனவே நபி (ஸல்) அவர்கள் தங்கத்தை நல்வழியில் செலவு செய்துவிடு என தனியாக ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குக் கூறவில்லை.
இந்த நுட்பத்தை ஃபாத்திமா (ரலி) அவர்களும் புரிந்து கொண்டு அதை செலவு செய்து விடுகிறார்கள். ஆனால் இந்த நுட்பம் இவர்களுக்கு விளங்கவில்லை.
குதர்க்கம் :8
ஏன் தங்க மாலையை அணிவது கூடாது என்றால் அதை அணியமல் ஒரு சொத்தாக வைத்திருந்திருக்கலாமே என்ற வாதத்தை முன்வைத்தவர்களுக்கு தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்றால் அதை வேறு ஒரு (தள பாடமாக வீட்டுப் பாவனைப் பொருட்களாக) சொத்தாக மாற்றி வைத்திருக்கலாமே என்ற வாதம் எழுமே என்ற சிந்தனையும் இல்லை.
நமது பதில்:
தங்கத்தை அணிவது மட்டுமே கூடாதென்றால் அதை அணியாமல் ஒரு சொத்தாக ஃபாத்திமா (ரலி) அவர்கள் வைத்திருக்கலாமே?அதை அவர்கள் ஏன் விற்க வேண்டும்?என்ற கேள்வியை நாம் கேட்டிருந்தோம். அதற்கு எதிராகத் தான் மேற்கண்ட இந்தக் கேள்வியை இவர்கள் எழுப்பியுள்ளார்கள்.
குறுக்குக் கேள்வி கேட்பதில் தான் குறியாய் இருக்கிறார்களே தவிர நாம் கேட்ட கேள்விக்கு பதிலைக் கூற மறுக்கிறார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்த நகையை விற்க வேண்டியதின் அவசியம் என்ன?என்று நாம் கேட்டதற்கு முறையான பதிலை இவர்கள் இன்னும் கூறவில்லை. ஏன் மழுப்பலான பதிலைக் கூட இவர்கள் கூறவே இல்லை.
நமது கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. பதில் இல்லாத காரணத்தால் பெண்கள் தங்கம் அணியக் கூடாது என்ற இவர்களின் நிலைபாடும் தவறு என்பது உறுதியாகி விடுகிறது.
இப்போது இவர்கள் கேட்ட குறுக்குக் கேள்விக்கு வருவோம். தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்றால் அதை வேறு ஒரு சொத்தாக மாற்றி வைத்திருக்கலாமே என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.
தங்கத்தை வைத்திருந்தால் அதை நல்வழியில் செலவு செய்தால் தான் நரகத்திலிருந்து வெற்றியடைய முடியும் என்பதை ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸும் அல்குர்ஆன் (9 : 34)வது வசனமும் தெளிவாகக் கூறுகிறது.
தங்கத்தை வேறு பொருளாக மாற்றி வைத்துக் கொள்ளும் போது அதை நல்வழியில் செலவு செய்வது தடுக்கப்படுகிறது. தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற தடையே அதை நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது அதை வேறு பொருளாக மாற்றினால் மேற்கண்ட ஹதீஸையும் குர்ஆன் வசனத்தையும் மீறியதாக அமையும்.
தங்கத்தை மாற்றி வேறு பொருளாக வைத்துக் கொள்ளலாமே என்ற கேள்வி மிகவும் ஆபத்தானது. அபத்தமானது. நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற இறைவனுடைய உத்தரவை தந்திரத்தின் மூலம் மீறுவதற்கான வழியையே இவர்கள் காட்டுகிறார்கள்.
சனிக்கிழமை மீண் பிடிக்கக் கூடாது என்று இறைவன் உத்தரவிட்டிருக்கும் போது அதை மீறுவதற்காக வெள்ளிக்கிழமையே வலையை வரித்து ஞாயிற்றுக்கிழமை மீண் பிடித்து இறைவனுடைய கோபத்திற்கு இஸ்ரவேலர்கள் ஆளானார்கள். அதே தந்திர வேலையை தங்கம் விஷயத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்களும் செய்திருக்கலாமே?என்ற அசிங்கமான எண்ணம் இவர்களிடத்தில் வரலாமா?
ஃபாத்திமா (ரலி) அவர்கள் பொருளாசை பேராசை உள்ளவர்களாக இருந்தால் தான் இவர்கள் கூறுவது போல் அவர்கள் தங்கச் சங்கிலியை மாற்றி வேறு பொருளாக வைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதால் தான் தந்திரத்தைக் கையாள்வதை விட்டுவிட்டு நல்வழியில் செலவு செய்து விடுகிறார்கள்.
தங்கச் சங்கிலியை அணிவது தான் கூடாது. அதை அணியாமல் சொத்தாக வைத்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் நிலைபாடு. எனவே தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தங்கச் சங்கிலியை அணியாமல் சொத்தாக வைத்துக் கொண்டிருக்கலாமே?என்று நாம் கேட்டோம். ஆனால் இதற்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை.
குதர்க்கம் :9
உன்மையில் இந்த ஹதீஸ் தங்கத்தின் நகை வடிவைப் பற்றியதே அல்லாமல் தங்கதின் பன வடிவைப் பற்றியது அல்ல என குறிப்பாக இருக்கும் போது தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது எனக் கூறி பொதுவானதாக ஆக்குகிறோமே என்ற கவனமும் இல்லை. இந்தத் தவறான வாதத்தினால் அன்றிருந்த நாணய வடிவான தீனாரின் ஒன்றைக் கூட வைத்திருக்கக் கூடாது என இஸ்லாம் சட்டமியற்றியதாக ஒரு அறிவு பூர்வமற்ற கருத்தைக் கூற வேண்டி வருமே என்ற சிந்தனையும் இவர்களிடம் இல்லை.
நமது பதில்:
தங்கமே வைத்திருக்கக் கூடாது என்றால் அன்றைய காலத்தில் தங்கத்தில் இருந்த தீனாரையே வைத்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் சட்டம் இயற்றியதாக அமையுமே?என்று இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தங்கம் வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் இன்று வரை உள்ளது என நாம் கூறவில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறு கூறப்பட்டு பிறகு மாற்றப்பட்டு விட்டது என்றே கூறுகிறோம் என்பதை இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.
மேற்கண்ட இந்தக் கேள்வி குர்ஆன் ஹதீஸ்களை வைத்து எழுப்பப்பட்ட கேள்வியல்ல. மாறாக இவர்களின் மனோ இச்சை அடிப்படையில் எழுந்த கேள்வியாகும்.
தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் கருத்தை நாம் சுயமாகக் கூறவில்லை. குர்ஆன் ஹதீஸ்கள் மூலமே இதை நாம் நிரூபித்தோம். இனியும் சந்தேகமற நிரூபிப்போம்.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு,அதனால் அவர்களின் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்,முதுகுகளிலும் சூடு போடப்படும்.இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் (9 : 34)
தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்ப நேரத்தில் இருந்தது என்ற நமது கூற்றை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். தங்கம் வெள்ளியை மேல்மிச்சமாக வைத்திருக்கக் கூடாது என்ற கருத்தில் தான் நாம் இவ்வாறு கூறியிருந்தோம்.
மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட சேர்த்தல் என்பது தனது தேவையை விட மேல் மிச்சமானதை சேமிப்பது பற்றியதாகும். சேமிப்பது என்றாலே தன் தேவை போகமேல்மிச்சமானதை வைத்துக் கொள்வதையே குறிக்கும். ஒருவர் தனது தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருக்க செல்வத்தை தன் வசம் வைத்திருந்தால் அப்போது அதை கன்ஸ் சேமிப்பு என்று கூற முடியாது.
இந்த அடிப்படையில் தனது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒருவர் அந்நேரத்தில் தங்க நாணயம் என்ன?வேறு வடிவிலான தங்கத்தையே வைத்திருந்தால் கூட அது தவறில்லை. அதை இந்த வசனம் கண்டிக்கவுமில்லை. தனது தேவையை விட எஞ்சியுள்ளதையே பிறருக்குக் கொடுக்குமாறு இஸ்லாம் ஆரம்ப நேரத்திலும் கூறியது. தற்போதும் கூறுகிறது. இதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர்.உபரியானதைஎனக் கூறுவீராக! நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்குத் தனது வசனங்களை அல்லாஹ் இவ்வாறு தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன் (2 : 219)
குழப்பம் :10
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காச்சப்பட்டு,அதனால் அவர்கள் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்முதுகுகளிலும் சூடு போடப்படும் இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்ததை அணுபவியுங்கள் (என்று கூறப்படும்) அல்குஆன் (9:34)
இந்த வசனம் தங்கத்தையும்,வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகிறது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாராத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகிறது.என எழுதியுள்ளார்.
மேற்படி வனனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள அறபி வார்த்தையானيكنزونஎன்பதற்கு ஒரே அர்த்தத்தைத் தரக் கூடியசேர்த்து வைத்தல்சேகரித்து வைத்தல்சேமித்து வைத்தல்பொருள் செய்துள்ளனர்.இதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது .ஆனால் பந்தியின் இறுதியில்மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகிறது.என்பதில் தான் இவர்களது பிழையான விளக்கம் ஒழிந்துள்ளது.
சேமித்து வைத்தல் என்பதற்கும் பாவித்தல் என்பதற்குமிடையில் உள்ள சாதாரன பொருளியல் பிரயோகங்களை இவர்கள் சரியாக விளங்கவில்லை.
உதாரனமாக ஒருவர் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.அதை அப்படியே செலவளிக்கிறார். இதைப் பனப் பாவனை என்போம்.இன்னுமொருவர் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதில் நூறு ரூபாயை சேர்த்து வைக்கிறார். இதை சேமிப்பு என்போம்.
எனவே மேற்படி வசனம் தங்கம் வெள்ளியை (வெள்ளியை என்ற எமது வார்த்தையை வாசகர்கள் நன்கு ஞாபகம் வைத்திருங்கள் எமது அடுத்த தொடரில் அடுத்த ஹதீஸ் பற்றி விளக்கும் போது இது உதவியாக இருக்கும்) சேமிப்பது கூடாது என்பதையே விளக்குகிறது.
ஆனால் ஹதிஸோ பெண்களின் அண்றாட பாவனைப் பொருளான மாலை,மோதிரங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.
எனவே மேற்படி சேமித்து வைத்தல் என்பதைக் குறிக்கு ம்வசனத்திற்கும் தங்க நகைகளின் பாவனையைக் குறிக்கும் மேற்படி ஹதீஸுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகுவதுடன் யார் தங்களது வாதத்திற்கு சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் காட்டுகிறார்கள் என்பதும் இங்கு நிரூபணமாகிறது.
நமது பதில்:
9 : 34வது வசனமும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸும் தங்கத்தை சேமிப்பாக வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தைத் தருகின்றன என நாம் கூறியிருந்தோம்.
இதை மறுக்கும் விதமாக தவறான ஒரு விளக்கத்தைக் கூறுகிறார். சேமித்து வைப்பது கூடாது என்ற கருத்தை வசனம் கூறுகிறது. ஆனால் அந்த குறித்த ஹதீஸ் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூறுகிறது. தங்கத்தைச் சேமிப்பது என்பதும் அணிவது என்பதும் வெவ்வேறான விஷயம். எனவே வசனம் கூறுகின்ற பொருளை ஹதீஸ் தரவில்லை என்று வாதிடுகிறார்.
சேமித்தல் என்ற வார்த்தைக்கு சரியான பொருளை இவர் புரிந்து கொள்ளாததால் இந்த தவறான விளக்கத்தை கூறியுள்ளார். தன் தேவைக்கு அதிகமான பொருளை வைத்திருந்தாலே அது சேமிப்புத் தான். அப்பொருளை பெட்டிக்குள் பூட்டி வைத்திருந்தாலும் அல்லது வெளிப்படையாக எல்லோரும் பார்க்கும் வகையில் ஆபரணமாக செய்து அணிந்திருந்தாலும் சரியே.
இன்றைக்கும் கூட பொருளாதாரத்தைச் சேமிக்க விரும்பும் பலர் தங்க ஆபரணங்களைச் செய்து கொள்வதைப் பார்க்கிறோம். இது சேமிப்பு இல்லை என்று எவ்வாறு கூற முடியும்?
சேமிப்புப் பொருளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது. சேமிப்புப் பொருளைக் குறிப்பதற்கு கன்ஸ் என்ற வார்த்தை ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட வசனத்தில் சேமிப்பதற்கு கூறப்பட்ட யக்னிஸுன் என்ற வார்த்தையும் ஹதீஸில் கூறப்பட்ட கன்ஸ் என்ற வார்த்தையும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து வந்தவை. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக் கொண்டு,நான் தான் உனது செல்வம்;நான் தான் உனது கருவூலம்என்று சொல்லும்.
புகாரி (1403)
மேற்கண்ட ஹதீஸில் கருவூலம் என்ற வார்த்தைக்கு கன்ஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சேமிப்புப் பொருள் என்பது இதன் அர்த்தம். இவர்களின் வாதப்படி பெண்கள் அணியும் ஆபரணங்கள் சேமிப்புப் பொருளுக்குள் அடங்காது என்றால் மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட எச்சரிக்கை தங்க ஆபரணங்களுக்குப் பொருந்தாது. எனவே ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று கூற வேண்டி வரும். இவ்வாறு கூறுவதற்கு இவர் தயாரா?
தங்களது வாதத்திற்கு பொருந்தாத உதாரணத்தை வேறு கூறிக் கொள்கிறார்கள். பத்தாயிரம் ரூபாயைச் சம்பாதிப்பவர் ஐயாயிரம் ரூபாயை தன் தேவைக்கு செலவிட்டு அதைக் கரைத்து விட்டார். மீதமுள்ள ஐயாயிரம் ரூபாய்க்கு தங்க நகை வாங்குகிறார். இப்போது இவர் ரூபாய் வடிவில் சேமிக்காமல் நகை வடிவில் சேமிக்கிறார் என்று கூறுவோம். இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அந்த நகையை விற்று காசாக்க முடியும். இவர் சேமிக்கவே இல்லை என்று சாதாரண அறிவு படைத்தவன் கூட கூற மாட்டான்.
எனவே சேமித்தல் என்பதற்குள் ஆபரணங்களைப் பயன்படுத்துவது அடங்காது. இவை இரண்டும் வெவ்வேறானவை என்ற வாதம் அறிவற்ற வாதம். எனவே9 : 34வது வசனமும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுள்ளவை. ஒரே கருத்தைத் தரக்கூடியவை.
குதர்க்கம் :11
ஆனால் ஒரு நிலைப்பாடை விமர்சிக்கும் ஆய்வில்وقال أحمد بن شبيبஎன அறிவிப்பாளர் தொடர் தொடர்பற்றதாக ஆரம்பிக்கும் ஹதீஸை மேற்கோள் காட்டுகிறோமே,இது பற்றி கேள்விகள் எழுவதைத் தவிர்ப்பதற்காக அதன் அறிவிப்பாளர் தொடர் பூரனமாக விடம் பெறும் அறிவிப்பை தேடியெடுத்து மேற்கோள் காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் இவர்களிடம் காணவில்லை.!!
நமது பதில்:
9 :34வது வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் உள்ளது. ஸகாத் கடமையாக்கப்பட்டவுடன் மேல்மிச்சமாக செல்வத்தை சேமிப்பதற்கு அனுமதி தரப்பட்டது என்ற கருத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை நாம் முதல் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தோம்.
இதன் மூலம் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்து பின்பு மாற்றப்பட்டது என்ற வாதத்தை வைத்தோம்.
இந்த ஹதீஸ் சரியானது என்றாலும் நாம் சுட்டிக் காட்டிய குறிப்பிட்ட தொடர், தொடர்பு முறிந்தது என விமர்சித்துள்னர். தன்னிடத்தில் கொஞ்சம் கூட ஹதீஸ் கலையைப் பற்றி அறிவு இல்லை என்பதை இந்த விமர்சனத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
நாம் சுட்டிக்காட்டிய அறிவிப்பு தொடர்பு முறியாத முழுமையான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட அறிவிப்புத் தான். இவர் தன்னை அறிவாளிகளைப் போன்றும் பொறுப்புணர்வுள்ளவர்களைப் போன்றும் காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு தேவையற்ற விமர்சனத்தைச் செய்துள்ளனர்.
நாம் சுட்டிக் காட்டியது தொடர்பு முறிந்த அறிவிப்பு என்றால் தொடர்பு முறியாத முழுமை பெற்ற அறிவிப்பை இவர்களால் காட்ட முடியுமா?நாம் குறிப்பிட்டுள்ள அறிவிப்பாளர் தொடரில் விடுபட்ட நபர் யார் என கூற முடியுமா?தங்களிடம்ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது குற்றத்தை திணிக்க முற்படுகிறார்கள்.
குழப்பம் :12
அபூதாவுதில் இடம் பெறும் பின்வரும் செய்தியை இரண்டாவது ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக!(9:34)இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது.உங்கள் பிரச்சினையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இறைத் தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லைஎன்ற ஹதீஸையும் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது தவறை (அறியாமையை அல்ல) விளக்குவதற்காக வேண்டி முதலில் இவர் இரண்டாவதாகக் குறிப்பிட்ட ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.
மேற்படி தங்கம் வெள்ளியை சேமித்து வைத்தல் என்ற வசனம் இறக்கப் பட்ட தன் பின்புதான் ஸகாத் கடமையாக்கப் பட்டது என்ற வாதத்திற்கான ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது. மாறாக நபியவர்களின்உங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லைஎன்ற தெளிவான வாக்குமூலம் ஏற்கனவே ஸகாத் கடமையாகி இருந்தது என்பதையல்லவா உணர்த்துகிறது.
அதாவது மேற்படி இறைவசனம் இறங்கிய உடன் முஸ்லிம்களுக்கு பிரச்சனையாகி விட்டது. இந்த இடத்தில் இவர்கள் தமிழாக்கம் செய்யாமல் விட்டு விட்டفقال عمرஎன்ற வசனத்தின்فயும் சேர்த்தால் உடனே உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்போது நபியவர்களுக்கு ஸகாத் வசனம் இறங்கியது என்றிருந்தால் இவர்களின் வாதத்தில் அர்த்தமிருக்கிறது. ஆனால் ஹதீஸில் இருப்பதோஉங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லைஎன்ற ஸகாத் என்பது ஏற்கனவே கடமையாக்கப் பட்டிருந்தது என்ற கருத்தை உறுதி செய்யும் நபி (ஸல்) அவர்களது கூற்றுதானே இருக்கிறது.
இப்போது தங்களது வாதத்திற்கு சிறிது சம்பந்தமில்லாத ஆதாரத்தை எடுத்துவைப்பது மட்டுமின்றி தங்களது வாதத்திற்கு எதிரான ஆதாரத்தையே யார் எடுத்து வைக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது அல்லவா?!
நமது பதில்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! (9 : 34)
இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது. உங்கள் பிரச்சனையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இறைத்தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதை தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை.
உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தையே அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். (எனவே ஸகாத் கொடுத்து விட்டால் தங்கம் வெள்ளியைச் சேர்ப்பது குற்றமில்லை) என்று கூறினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் இறைவன் மிகப் பெரியன் என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (1417)
மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலிருந்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலைக் கூறாமல் அதிலிருந்து குறுக்குக் கேள்வியை மட்டும் கேட்கிறார். இவ்வாறு செய்வதால் இவரது வாதம் சரி என்று ஆகிவிட முடியாது. நாம் கேட்ட கேள்விக்குப் பதிலை முதலில் கூறிவிட்டு பிறகு அதிலிருந்து கேள்வியை எழுப்புவதே சரியான ஆய்வாளருக்கு அழகு.
9 : 34வது வசனம் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்று கூறுகிறது. இந்த வசனத்தை இப்படிப் புரிந்த காரணத்தால் தான் நபித்தோழர்கள் இவ்வசனம் குறித்த விளக்கத்தைத் தேடி நபியவர்களிடத்தில் வருகிறார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் இன்று இவர்கள் இவ்வசனத்திற்கு தவறாக விளக்கம் கூறுவது போல் இந்த வசனம் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை என்றோ அல்லது அதிலிருந்து நீங்கள் இக்கருத்தை புரிந்தது தவறு என்றோ அல்லது இவ்வசனம் உங்களுக்குப் பொருந்தாது. வேதமுடையவர்கள் சம்பந்தப்பட்டது என்றோ நபித்தோழர்களிடம் கூறவில்லை.
மாறாக அவ்வசனம் அப்பொருளைத் தான் தருகிறது என்பதை ஆமோதிக்கவே செய்கிறார்கள். ஆனால் இவ்வசனம் கூறுவதை தாங்கள் செயல்படுத்த வேண்டியதில்லை. இது மாற்றப்பட்டு விட்டது என்பதை உணர்த்தக் கூடிய வகையில் இவ்வசனத்தைப் பற்றி பேசாமல் பொருளாதாரத்தைச் சேமித்து வைக்கலாம் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ் வழங்கிய ஸகாத் மற்றும் வாரிசுரிமை சட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு பதிலளிக்கையில் உங்கள் செல்வங்களில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகத் தான் ஸகாத்தை அல்லாஹ் கடமையாக்கினான் என்ற வாசகத்தைக் கூறுகிறார்கள். அதாவது ஸகாத் கொடுத்தது போக மீதமுள்ள செல்வத்தை சேமித்துக் கொள்வதற்காகத் தான் ஸகாத்தே கடமையாக்கப்பட்டுள்ளது என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வாசகத்தை நன்கு கவனியுங்கள். ஸகாத் தான் செல்வத்தை தூய்மைப்படுத்தி அதைச் சேமிப்பதை அனுமதிக்கிறது என்றால் அந்த ஸகாத்துடைய சட்டம் வருவதற்கு முன்னால் செல்வங்கள் தூய்மையாக்கப்படவில்லை. இதற்கான அனுமதியும் இருக்கவில்லை என்றக் கருத்து இதன் மூலம் எவ்வளவு தெளிவாக விளங்குகிறது.
ஸகாத் சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் இருந்த நிலையையே அந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. அது மாற்றப்பட்ட சட்டம் என்பதால் அதைச் செயல்படுத்த வேண்டியதில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் தம் வாயாலேயே உணர்த்துகிறார்கள்.
மேலும் அந்த வசனத்தின் கருத்தைச் செயல்படுத்துமாறு நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறாததிலிருந்து இந்த வசனம் மாற்றப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. ஒரு சட்டத்தை மாற்றுவதாக இருந்தால் அது முந்திக் கூறப்பட்டதாக இருந்தாலே மாற்ற முடியும். எனவே அந்த வசனம் ஸகாத்துடைய வசனத்திற்கு முந்தியது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த வலுவான வாதத்திற்கு ஆதாரமாகத் தான் இந்தச் செய்தியை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த வாதத்திற்கு அவர் பதில் கூறாமல் எதிர்க் கேள்வியை மட்டும் கேட்பதிலிருந்து இவரிடத்தில் உண்மை இல்லை என்பதும் இந்த வசனம் தொடர்பாக நாம் கூறுகின்ற கருத்தே உண்மை என்பதும் தெளிவாகிறது.
இனி இவர் கேட்ட அந்தக் குறுக்குக் கேள்விக்கு வருவோம். இந்த வசனம் இறங்கிய பிறகு இதற்குரிய விளக்கத்தை நபித்தோழர்கள் கேட்கிறார்கள். அதற்கு பதிலாக ஸகாத்துடைய வசனத்தை நபி (ஸல்) அவர்கள் பதிலாகக் குறிப்பிடுகிறார்கள். எனவே இவ்வசனத்திற்கு முன்பாகவே ஸகாத்துடைய வசனம் அருளப்பட்டு விட்டது என்ற கருத்து வருகிறதே என்ற வாதத்தை வைக்கிறார்கள்.
மேலே நாம் கூறிய சரியான விளக்கத்திற்கு இந்தக் கேள்வி ஒன்றும் முரண் இல்லை. அந்த வசனம் ஸகாத் சட்டம் வருவதற்கு முன்பு உள்ளது என்பதை மேலே நாம் நிரூபித்திருக்கிறோம். அதற்கு முரண் இல்லாத வகையில் இந்த கேள்விக்கான பதிலை நாம் காண வேண்டும். பதிலை அறிந்து கொள்வதற்கு முன் ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரே வசனம் பல முறை இறங்கியதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் ஹதீஸ்களில் இருக்கின்றன. இது எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம். இனி தேவை இருக்குமானால் இதற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காக எடுத்து வைப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.
முதலில் இந்த வசனம் இறங்குகிறது. அப்போது பொருளாதாரத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற தடை விதிக்கப்படுகிறது. இந்த வசனத்தை மாற்றுகின்ற வகையில் பிறகு ஸகாத்துடைய வசனம் இறங்குகிறது. இந்நிலையில் முதலில் இறங்கிய வசனத்தை அல்லாஹ் மீண்டும் இறக்குகிறான். உடனே நபித்தோழர்கள் இவ்வசனம் குறித்து கேள்வி எழுப்ப இவ்வசனம் கூறும் சட்டம் ஸகாத்துடைய வசனத்தால் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது என பதிலளிக்கப்படுகிறது.
அந்த வசனத்தின் சட்டம் தற்போது இல்லை என்ற உண்மையை நபித்தோழர்களுக்கு விளக்குவதற்காகக் கூட இறைவன் அதை மீண்டும் அருளி இருக்கலாம்.
இவ்வாறு விளங்கிக் கொண்டால் ஸகாத்துடைய வசனம் ஏற்கனவே இருந்துள்ளதே என்று இவர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் கிடைத்து விடுகிறது. அந்த வசனம் மாற்றப்பட்டது என ஹதீஸ் கூறும் கருத்தை நாம் மறுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
குழப்பம் :13
இந்த அடிப்படையில் இவர்கள் முதலில் காட்டிய இப்னு உமர் (ரலி)யின்இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னுள்ளதாகும்என்ற கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையே இல்லாமல் போய் விடுகிறது. காரனம் நபியவர்களின் நேரடி வாக்கு மூலம் ஸகாத் என்பது இவ்வசனத்திற்கு முன் கடமையாக்கப் பட்டிருந்தது என்றிருக்க அதற்கு மாற்றமான
மேற்படி இறை வசனம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன் இறங்கியதுஎன்ற நபித்தோழரின் கூற்றுக்கு என்ன பெறுமானம் என்பதை இவர்கள் விளக்க வேண்டும். எனவே நீங்கள் விரிவாக விளக்க வேண்டியதுஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித் தோழர்கள் தான் கூற முடியும். (இது குறித்து சர்ச்சை வந்தால் பின்னர் விரிவாக விளக்குவோம்.என்பதையல்ல.
மாறாக அல்குர் ஆன் யாருக்கு இறங்கியதோ அந்த நபி (ஸல்) அவர்களது நேரடி கூற்றுக்கு மாற்றமான நபித்தோழர்களின் அபிப்பிராயங்களை எடுக்க முடியுமா என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நமது பதில்:
நாம் முதலாவது சுட்டிக் காட்டிய இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்திக்கு முதலில் இவர் பதில் கூறவில்லை. மாறாக இரண்டாவது சுட்டிக் காட்டிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிற்குப் பதில் என்ற பெயரில் குதர்க்கம் செய்து அந்தக்குதர்க்கத்தை வைத்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை ஓரங்கட்டப் பார்க்கிறார். இவரின் வாதம் தவறு என்பதை மேலே நாம் உறுதிபடுத்தி விட்டோம்.
இவர் இரண்டு தவறான வாதங்களை வைத்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை நிராகரிக்கிறார். தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஸகாத்துடைய வசனம் இறங்குவதற்கு முன்புள்ளது என்ற கருத்து இப்னு உமர் (ரலி) அவர்களின் சுயக் கருத்து என்றும் இக்கருத்திற்கு மாற்றமாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸில் அந்த வசனம் ஸகாத் அருளப்படுவதற்குப் பிந்தியது தான் என நபி (ஸல்) அவர்கள் கூறுவதால் அதற்கு மாற்றமான இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றை எடுக்க முடியாது என்றும் வாதிடுகிறார்.
இந்த வசனம் ஸகாத்துடைய வசனத்திற்குப் பிந்தியதல்ல. முந்தியது தான் என்பதை நாம் மேலே தெளிவாக நிரூபித்திருக்கிறோம். எனவே இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்று நபியவர்களின் கூற்றுக்கு எதிரானது என்ற வாதம் மண்ணைக் கவ்வுகிறது.
அடுத்து இது இப்னு உமர் (ரலி) அவர்களின் சுயக் கருத்து என்ற வாதத்திற்கு வருவோம்.
காலித் பின் அஸ்லம் கூறுகிறார்:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள்,யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்என்றார்கள்.
புகாரி (1404)
இவர்களின் விதண்டா வாதத்திற்கு எல்லையே இல்லை. நபித்தோழரின் சுயக் கருத்து என்று கூறி அநியாயமாக மேற்கண்ட ஹதீஸை ஒதுக்குகிறார்கள்.
எந்த வசனம் முந்தியது?எந்த வசனம் பிந்தியது?என்ற தகவலை ஒரு நபித்தோழர் எப்படி சுயமாகக் கூற முடியும்?நபித்தோழர் சுயமாகத் தான் கூறினார் என்றால் இறை வசனத்தில் துணிந்து பொய் கூறுகிறார் என்ற அபத்தமான கருத்தைக் கூற வேண்டியது வரும். அவ்வாறு கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.
வசனங்கள் இறங்கிய வரலாறை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றார்கள். இவர்கள் தான் இதை அறிவிக்க முடியும். இவையனைத்தயும் நபித்தோழர்களின் கூற்று எனக் கூறி இவர்கள் நிராகரிக்கத் தயாரா?
குர்ஆன் வசனங்கள் இறங்கிய காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் இதை அறிவித்தால் அதை ஏற்கக் கூடாதென்றால் இதை வேறு யார் அறிவிப்பது.?யார் அறிவித்தால் இவர்கள் ஏற்பார்கள்?
அதுமட்டுமில்லை.9 : 34வது வசனம் மாற்றப்பட்டது என்ற தகவலும் இந்த ஹதீஸில் அடங்கியிருக்கிறது. ஒரு வசனம் மாற்றப்பட்டதா?இல்லையா?என்பதை அறிஞர்கள் பல முறைகளில் முடிவு செய்வார்கள். நபித்தோழர்கள் இதைத் தெளிவுபடுத்தினால் அதை ஏற்க வேண்டும் என்பதையும் ஒரு வழிமுறையாக குறிப்பிட்டுள்ளார்கள்.
நபித்தோழர்கள் வழியாக சட்டம் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்படும் அத்தனை செய்திகளையும் நபித்தோழர்களின் சுயக் கருத்து என்று கூறி இவர்கள் ஒதுக்கி விடத் தயாரா?
மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு முரண்படுகிறது என்ற தப்பான வாதத்தை வைத்தார்கள். இந்தச் செய்தியையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் ஒரே கருத்தைத் தருவதைப் பார்க்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறிய கருத்தையே இங்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதையும் உணரலாம்.
உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதை தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை
நூல் : அபூதாவுத் (1417)
இப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் வாசகத்தைக் கவனியுங்கள்.
ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்என்றார்கள்.
புகாரி (1404)
இரண்டு செய்திகளும் ஒரே கருத்தைத் தருவதை உணரலாம். எனவே இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி சுயக் கருத்தல்ல என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
மேலும் இப்னு (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி குர்ஆன் வசனத்திற்கும் பல ஹதீஸ்களுக்கும் முறையான பதிலைத் தரக் கூடிய வகையில் இருக்கிறது.
தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தரக்கூடிய9 : 34வது வசனம் மாற்றப் பட்டதல்ல என்று கூறினால் அதை தற்போது சட்டமாக்கி செயல்படுத்துவது நம் மீது கடமையாகி விடும். ஆனால் இவ்வசனத்திற்கு இந்த செய்தி அழகான தீர்வாக அமைந்துள்ளது.
இந்த வசனத்திற்கு மட்டுமல்ல செல்வத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்துப்பட வரும் அத்தனை ஆதாரங்களுக்கும் தீர்வாக அமைந்துள்ளது. உதாரணமாக.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை நீ வைத்துக் கொள்வது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்து வைத்தால் நீ பழிக்கப்பட மாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கை தான் கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்.
இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (1875)
எஞ்சியதை வைத்துக் கொள்வது தீமையானது. தேவையான அளவுக்கு அதிகமாக வைத்தால் அது பழிக்கப்படுகின்ற செயல் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.
இதுவும்9 : 34வது வசனத்தைப் போல் மேல் மிச்சமானதை வைத்துக் கொள்ளக் கூடாது என ஆரம்பத்தில் கூறப்பட்ட சட்டத்தை நினைவூட்டுகிறது.
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி) அவர்கள்செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு (பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி கூறுங்கள்என்று கூறிவிட்டு,அங்கிருந்து விலகிப் போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான்இவர் யார்?என்று கேட்டேன். மக்கள்இவர் தாம் அபூதர் (ரலி)என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தீர்களே அது என்ன?என்று கேட்டேன். அதற்கு அவர்கள்அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்என்றார்கள். நான்,(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின்,அதை விட்டு விடுங்கள் (பெற்றுக் கொள்ளாதீர்கள்)என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் (1814)
புகாரியில் உள்ள அறிவிப்பில் பின்வரும் தகவல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள்அபூதர்ரே! உஹுது மலையை நீர் பார்த்திருக்கிறீராஎனக் கேட்டார்கள். தமது வேலை ஏதோ ஒன்றுக்காக நபி (ஸல்) என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி) பகல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்து விட்டு, ஆம்என்றேன்.உஹுது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங்களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் கேட்க மாட்டேன்;மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்க மாட்டேன்என அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அஹ்மதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பையும் இங்கே குறிப்பிடுகிறோம்.
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மதீனாவில் இருந்த போது ஒரு மனிதரைக் கண்டேன். மக்கள் அவரைக் கண்ட போது அவரை விட்டும் விலகிச் சென்றனர். நான் அவரிடத்தில் நீங்கள் யார்?என்று வினவினேன். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரான அபூதர் என்று பதிலளித்தார். மக்கள் ஏன் உங்களை விட்டும் விலகிச் செல்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர்களை எதை விட்டும் தடுத்தார்களோ அந்த செல்வக் குவியலை விட்டும் இவர்களை நான் தடுக்கிறேன். (அதனால் இவர்கள் என்னை விட்டும் விலகிச் செல்கிறார்கள்.) என்று பதிலளித்தார்கள்.
நூல் : அஹ்மத் (20478)
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸை நன்கு கவனியுங்கள். செல்வத்தை சேர்க்கக் கூடாது என்ற சட்டத்தை ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறப்பித்திருந்தார்கள் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
இச்சட்டம் மாற்றப்பட்டது என்ற தகவல் அபூதர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை என்பதால் இதுவே எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் என தவறுதலாகக் கருதி மக்களுக்குப் போதிக்கிறார்கள். இந்தச் செய்திக்கும் இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்று அழகிய தீர்வை கூறக் கூடியதாக இருக்கிறது.
எனவே மொத்தத்தில்9 : 34வது வசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மற்றும் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆகிய ஐந்து ஆதாரங்கள் செல்வத்தை சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்தது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
குழப்பம் :14
பொதுவாக இவர்கள் கூறுவது போல் அல்குர்ஆன் அத்தியாயங்களை இது மக்காவில் இறங்கியது இது மதீனாவில் இறங்கியது என ஒட்டுமொத்தமாகப் பிரிப்பதற்கு ஆதாரம் இல்லை என்பது உன்மைதான்.
ஆனால் சில அல்குர் ஆன் வசனங்களை அந்த வசனத்தில் காணப்படும் மொழி நடை,அந்த வசனம் யாரை அல்லது எந்த சமூகத்தைப் பற்றி,விளித்துப் பேசுகிறது அல்லது அந்த வசனத்தில் கூறப்படும் இடம் மற்றும் காலம் எனபதை வைத்து ஆரம்பகாலத்து மக்கா வசனமா அல்லது பிந்தைய மதீனா வசனமா என்பதைப் புரிந்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இந்த ஒரு அடிப்படையில் இவர்கள் எடுத்துக் காட்டியஅல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்ற வசனத்தை எடுத்து இதில் இவர்கள் மொழிபெயர்க்காமல் விட்டு விட்டமேலும் என்ற சொல்லைச் சேர்த்துப் பார்த்தால் இந்த இன்னுமொரு வசனத்தின் தொடர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அது என்ன வசனம் என்பதற்கு நாம் பெரிதாக அலையத் தேவையில்லை. சகோதரர் பிஜே அவர்களது (கருத்தைக் கவனத்திற் கொண்டு நிரந்தர இலக்கங்கள் உடைய வசனங்களை சேர்த்தும் பிரித்தும் செய்யப்பட்ட) அல்குர் ஆன் மொழியாக்கத்தையே எடுத்துக் கொள்வோம்.
அதில் மேற்படி வசனத்திற்கு முந்தைய வசனத்துடன்விசுவாசிகளே யூத கிருஸ்தவ மதகுருமார்களில் அதிகமானவர்கள்என்ற வசனத்துடன் இணைத்தே பொருள் செய்யப் பட்டிருப்பதைக் காணலாம்.
எனவே மேற்படி தங்கம் வெள்ளி பற்றிக் குறிப்பிடும் வசனம் மதீனாவில் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் எதிர் நோக்கிய,இஸ்லாத்திற்கு தடையாக இருந்த யூத,கிருஸ்தவ மதகுருமார்களைப் பற்றியது என்பது தெளிவாகிறது.
மேற்படி வேதங் கொடுக்கப்பட்டவர்களையும் இந்த வசனம் குறிக்கிறது என்பதை பின்வரும் நபித்தோழர்களுக்கிடையில் நடை பெற்ற புஹாரியில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உறுதி செய்கிறது.
صحيح البخاري جزء 2 – صفحة 509
حدثنا علي سمع هشيما أخبرنا حصين عن زيد بن وهب قال : مررت بالربذة فإذا أنا بأبي ذر رضي الله عنه فقلت له ما أنزلك منزلك هذا ؟ قال كنت بالشأم فاختلفت أنا ومعاوية في { الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله } . قال معاوية نزلت في أهل الكتاب فقلت نزلت فينا وفيهم
ஸைத் பின் வஹப் கூறுகிறார்:
நான் றபதா பகுதியைக் கடந்து சென்ற போது அங்கே அபூ தர் (ரலி) அவர்களை சந்தித்தேன். அவரிடம்என்ன இங்கிருக்கிறீர்கள்?எனக் கேட்டேன். அதற்கவர்நான் ஷாமில் இருந்தேன் நானும் முஆவியா (ரலி) அவர்களும்தங்கம் வெள்ளியை சேமித்து வைப்போருக்குஎனும் வசனம் தொடர்பாக கருத்து முரண்டாடு கொண்டோம் அவர்அது வேதங் கொடுக்கப் பட்டவர்கள் சம்மந்தமாக இறங்கியதுஎன்றார் நான்இல்லை அது அவர்கள் சம்பந்தமாகவும் முஸ்லிம்கள் சம்பந்தமாகவுமே இறங்கியதுஎன்று கூறினேன். .
மேற்படி சம்பவத்தினால் நாம் சொல்லவருவது குறித்த (9:34)வசனம் யூத நஸாறாக்கள் பற்றியது முஸ்லிம்கள் பற்றியதல்ல என்பது எமது வாதமல்ல. மாறாக நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எதிர் கொண்ட யூத கிருஸ்தவர்களைப் பற்றியும் இவ்வசனம் குறிப்பதால் இந்த வசனம் மதீனாவில் இறங்கியது என்பதையே தெளிவு படுத்த விரும்புகிறோம். ஏனினில் குறித்த சம்பவத்தில் வேதங்கொடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் இவ்வசனம் இறங்கியது என்பதில் இரு நபித்தோழர்களும் உடன்படுகிறார்கள். முஸ்லிம்கலையும் குறிக்கின்றதா இல்லையா என்பதில் தான் கருத்து முரண்பாடு கொள்கிறார்கள்.
அத்துடன்ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள்தான் கூற முடியும்.என கொட்டை எழுத்தில் எழுதியுள்ள இவர்கள் ஒரு வசனம் யார் குறித்து இறங்கியது என்பதில் ஒண்றுக்கு இரண்டு நபித்தோழர்களின் கருத்தை கன்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். கொள்ள வேண்டும்.
நமது பதில்:
இந்த வசனம் மதீனாவில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களைப் பற்றியது என்று கூறி எனவே இந்த வசனம் மதீனாவில் இறங்கியது என்ற பிழையான வாதத்தை வைக்கிறார்.
இவருடைய மனதில் படுவது தான் மார்க்கம். அதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அதை எப்படியாவது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்?மேற்கண்ட வாதத்தை இவர் எழுப்பியதன் மூலம் இதையே கூற வருகிறார்.
இந்த வசனம் முஸ்லிம்களையும் யூத கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. எனவே இவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸை அநியாயமாக மறுத்ததைப் போல் இவர்கள் குறிப்பிட்ட அபூதர் (ரலி) முஆவியா (ரலி) ஆகிய இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றிய செய்தியை நாம் மறுக்கவில்லை.
ஆனால் மதீனாவில் வாழ்ந்த யூத கிரிஸ்தவர்களைக் குறிக்கிறது என்று இவர்கள் ஆதாரமில்லாமல் எழுதியிருப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது.
மதீனாவில் மட்டும் தான் யூத கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்களா?மக்காவிலோ அபீசீனியாவிலோ பிற பகுதிகளிலோ இவர்கள் வாழவில்லையா?ஒரு பேச்சிற்கு மதீனாவில் வாழ்ந்த யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றியே இது பேசுகிறது என்று வைத்துக் கொண்டாலும் இதனால் மதீனாவில் இறங்கியது என எப்படிக் கூற முடியும்?ஏன் இவ்வசனம் மதீனாவில் உள்ள இவர்களைப் பற்றி மக்கா வாழ்க்கையின் போது பேசியிருக்கலாமே?
இவர்களின் வாதப்படி இவ்வசனம் மதீனாவில் தான் இறங்கியது என்பதை ஏற்றுக் கொண்டாலும் இந்த வாதம் இவ்வசனம் ஸகாத்துடைய வசனத்திற்கு முந்தியது என்ற நமது நிலைபாட்டிற்கு எதிரானதல்ல. ஏனென்றால் ஸகாத்துடைய சட்டமும் மதீனாவில் தான் இறங்கியது. மதீனாவில் இவ்வனம் இறங்கிய பிறகு இதை மாற்றி ஸகாத்துடைய வசனம் இறங்கியது என்று புரிவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.
9 : 34வது வசனம் முந்தியது. ஸகாத்துடைய வசனம் பிந்தியது என்ற நமது நிலைபாட்டை தகர்ப்பதற்காகத் தான் இவ்வசனம் மதீனாவில் இறங்கியது எனவும் ஸகாத்துடைய வசனம் மக்காவில் இறங்கியது எனவும் நிறுவ முயற்சிக்கிறார்கள்.
ஆனால் உண்மை இதற்கு மாற்றமாக உள்ளது.9 : 34வது வசனம் மதீனாவில் இறங்கியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை மேலே தெளிவாக விவரித்து விட்டோம்.
அடுத்து ஸகாத்துடைய வசனம் மக்காவில் இறங்கியது என்ற இவர்களின் வாதம் எந்த அளவிற்குச் சரி என்பதை பார்ப்போம். ஸகாத் மக்கா வாழ்க்கையின் போது கடமையாக்கப்படவில்லை. மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது என்பதற்கு ஹதீஸில் தெளிவான ஆதாரங்கள் உள்ளது.
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸகாத் அருளப்படுவதற்கு முன்னால் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஸகாத் அருளப்பட்ட உடன் (நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுமாறு) அவர்கள் எங்களுக்கு ஏவவுமில்லை. அதை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கையில் எங்களைத் தடுக்கவும் இல்லை.
நஸாயீ (2460)
மேலுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்பாகவே நோன்பு கடமையாக்கப்பட்டுவிட்டது என்ற கருத்தை தெளிவாகக் கூறுகிறது.
நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகே ஸகாத் கடமையாக்கப்பட்டது என்பதை இதிலிருந்து அறிந்து சந்தேகத்திற்கிடமின்றி உணரலாம்.
நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது என்றால் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குறிப்பிட்ட காலம் கழிந்த பிறகே நோன்பு கடமையாக்கப்படுகிறது. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்;நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது,தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டு விட்டனர். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்;விரும்பாதவர் விட்டு விட்டனர்.
புகாரி (2002)
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் கூட நோன்பு கடமையாக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலம் ஆஷூரா நாளில் நோன்பு வைக்கிறார்கள். மக்களையும் நோன்பு நோற்குமாறு பணிக்கிறார்கள். இதற்குப் பிறகு நோன்பு கடமையாக்கப்படுகிறது. நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகே ஸகாத்தும் கடமையாக்கப்படுகிறது.
எனவே ஸகாத் மக்கா வாழ்க்கையில் கடமையாக்கப்பட்டது என்ற வாதம் தவறு. மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது என்பது மேற்கண்ட இரு ஹதீஸ்கள் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.
மேலும் இவர் அந்த வசனம் யூத கிறிஸ்தவர்களையும் குறிக்கும் என்பதற்கு ஆதாரமாக நபித்தோழர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் காட்டினார். இவ்வசனம் யூதக் கிறிஸ்தவர்களையும் குறிக்கும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் நபித்தோழரின் சுயக் கூற்றாக இருக்க வாய்ப்பே இல்லாத இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய ஹதீஸை நபித்தோழரின் சுயக் கருத்து எனக் கூறி அதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என இவர் வாதிட்டார். அப்படிப்பட்ட இவர் தனது கூற்றிற்கு நபித்தோழர்களுக்கிடையே நடந்த உரையாடலை எப்படி ஆதாரமாகக் காட்டலாம்?இவர் ஒரு நிலைபாட்டில் இருக்க மாட்டார். தடுமாறக் கூடியவர் என்பதையே இவரின் இச்செயல்பாடு காட்டுகிறது.
அதுமட்டுமின்றி இவர் குறிப்பிட்ட செய்தி தனது கருத்துக்கு ஆதாரம் எனக் கருதி இதைக் கூறியுள்ளனர். ஆனால் இதில் அவரது நிலைபாட்டிற்கு எதிரான அம்சமே உள்ளது.
தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் அருளப்படவில்லை என்பது இவரின் நிலைபாடு.
9 : 34வது வசனம் முஸ்லிம்களையும் குறிக்கும் என அபூதர் (ரலி) அவர்கள் கூறியதற்கான அடிப்படைக் காரணம் இப்படிப்பட்ட சட்டம் இஸ்லாத்தில் சொல்லப்பட்டது தான் என்பதை நிறுவுவதற்காகும். ஆனால் அச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்ற தகவல் அபூதர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. இதை நாம் விரிவாக ஏற்கனவே விவரித்து விட்டோம்.
இவர் சுட்டிக் காட்டிய செய்தியில் இவரின் நிலைபாட்டிற்கு எதிரான அம்சமே இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதே நமது நோக்கம்.
மக்காவில் ஜகாத் கடமையாக்கப்பட்டது என்ற கருத்தில் சில ஆதாரங்கள் உள்ளன. அதுகுறித்து ஸஹ்ரான் அவர்களுக்கு எழுதப்பட்ட மறுப்பில் தெளிவு படுத்தியுள்ளோம்.
அதையும் கீழே தருகிறோம்
இப்னு உமர் (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவர் ஹதீஸையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒன்றை ஏற்று ஒன்றை மறுக்கக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்.
குழப்பம் :15
ஆனால் ஸகாத் எப்போது கடமையாக்கப் பட்டது என்பதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக மக்காவாழ்க்கையில் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் சிலரை அபூ ஸீனியாவுக்கு ஹிஜ்றத் அனுப்பிய போது அங்கு ஜஃபர் பின் அபூதாலிப் அவர்களை நஜ்ஜாஷி மன்னர் விசாரனைக்கு உட்படுத்திய போது நபியவர்கள் எதை உங்களுக்கு ஏவுகிறார்?என வினவிய போது ஜஃபர் (ரழி) அவர்கள் அளித்த அவர்தொழுகையையும் ஸகாத்தையும் நோன்பையும் எங்களுக்கு ஏவுகிறார்என்ற பதிலில் நிச்சயம் குறித்த இறை வசனத்தின் முன்பு தான் ஸகாத் கடமையாக்கப் பட்டிருந்தது என்பது சந்தேகமற உறுதியாகிறது.
பார்க்க:
مسند أحمد بن حنبل جزء 5 – صفحة 290
22551 – حدثنا عبد الله حدثني أبي ثنا يعقوب ثنا أبي عن محمد بن إسحاق حدثني محمد بن مسلم بن عبيد الله بن شهاب عن أبي بكر بن عبد الرحمن بن الحرث بن هشام المخزومي عن أم سلمة ابنة أبي أمية بن المغيرة زوج النبي صلى الله عليه وسلم قالت : لما نزلنا أرض الحبشة . وأمرنا أن نعبد الله وحده لا نشرك به شيئا وأمرنا بالصلاة والزكاة والصيام ..
ஆக,இவர்கள் சுற்றிச் சுற்று சொல்ல வந்த தங்கம் வெள்ளியை வைத்திருப்பது ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டிருந்தது ஸகாத் கடமையாக்கப்பட்டதன் பின் அதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்ற எடுகோலே பிழை என்றாகி விட்ட பின் அதன் அடிப்படையில் இவர்கள் எழுத்திய வாதங்கள்,சொன்ன விளக்கங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை என்றாகி விட்டது.
நமது பதில்:
ஸகாத் மக்கா வாழ்க்கையில் தான் கடமையாக்கப்பட்டது என்பதற்கு இவர்கள் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்த்தால் ஸகாத் மக்கா வாழ்வின் போதே கடமையாக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல.
இந்த செய்தியில் ஜஃபர் (ரலி) அவர்கள் ஸகாத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அதனுடன் சேர்த்து நோன்பையும் குறிப்பிடுகிறார்கள். நோன்பு மதீனாவில் தான் கடமையாக்கபட்டிருக்கும் போது அதை அவர்கள் அப்போது குறிப்பிடுகிறார்கள் என்றால் ரமளான் நோன்பை அவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக மக்கா வாழ்க்கையிலேயே நபி (ஸல்) அவர்கள் கடைப்பிடித்து வந்த ஆஷுரா மற்றும் உபரியான இதர நோன்பையே குறிப்பிடுகிறார்கள் என்பதை அறியலாம்.
இதே போன்று தான் அவர்கள் ஸகாத்தைக் குறிப்பிட்டதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஸகாத்தும் நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது என்பதை முன்பே பார்த்தோம்.
எனவே ஜஃபர் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட ஸகாத் என்பது கடமையான தர்மத்தைப் பற்றியதல்ல. மாறாக உபரியான தர்மமாகும். ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்காமல் தர்மம் செய்து விட வேண்டும் என்ற சட்டம் இருந்தது என நாம் நிரூபித்திருக்கிறோம்.
ஸகாத் என்ற வார்த்தை கடமையான தர்மத்திற்கு மட்டுமின்றி உபரியான தர்மங்களுக்கும் யன்படுத்தப்பட்டிருக்கின்றது.
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனேஎன்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.
அல்குர்ஆன் (41 : 6)
மறுமை நாளை நம்பாத இணை வைப்பவர்கள் ஸகாத்கொடுக்க மாட்டார்கள் என்றால் தர்மம் செய்ய மாட்டார்கள் என்று பொருள். ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற போது இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஸகாத்தைக் கொடுக்க மாட்டார்கள் எனக் கூறுவது பொருத்தமில்லை. எனவே ஸகாத் என்பது சாதாரண தர்மம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.
உபரியான தர்மம் என்ற இதே பொருளில் தான் ஜஃபர் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட ஸகாத் என்ற வாசகத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவர்களின் வாதப்படி ஸகாத்துடைய சட்டம் முந்தியது. இவ்வசனம் பிந்தியது என்று கூறினால் தங்கம் வள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என இவ்வசனம் கூறும் சட்டம் மாற்றப்படவில்லை. ஏனென்றால் இது தான் பிந்தியது. எனவே இவ்வசனத்தின் அடிப்படையில் தற்போது யாரும் செல்வத்தை சேமித்து வைக்கக் கூடாது என்று கூற வேண்டிய அபத்தம் ஏற்படும். ஆனால் இவர்கள் இவ்வாறு கூறுவதில்லை. இவர்களே ஏற்றுக் கொள்ளாத அபத்தமான ஒரு விஷயத்தையே இவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே ஸகாத்துடைய வசனம் இறங்கிய பிறகே9 : 34வது வசனம் இறங்கியது என்ற இவர்களின் வாதம் அடிபட்டுப் போகிறது. ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்பு தான் அந்த வசனம் இறங்கியது என்பதும் அவ்வசனத்தின் கருத்தை ஸகாத்துடைய சட்டம் மாற்றி விட்டது என்பதும் உறுதியாகிறது.
இது குறித்து ஸஹ்ரான் அவர்களுக்கு அளித்த பதிலையும் இங்கே நினைவு படுத்த விரும்புகிறோம்.
அடுத்து ஹஸன் அவர்களின் தந்தை இதை எனக்கு வாங்கித் தந்தார் என்று ஃபாதிமா (ரலி) கூறுவதால் ஹஸன் பிறந்த பிறகு தான் இதைக் கூறியிருக்க வேண்டும் என்பது சரியான வாதமே.
ஜகாத் என்பது மக்காவில் கடமையாகி விட்டது என்பதும் ஓரளவுக்குச் சரியானதே. இது குறித்து ஹதீஸ் மட்டுமின்றி குர்ஆனிலும் ஆதாரம் உள்ளது. ஆனால் பொதுவாக இயன்றதை தர்மம் செய்தல் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.
நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதம்,யார் யாருக்கு வினியோகிக்க வேண்டும் என்ற விபரம்,அரசின் மூலம் திரட்டுதல்,ஜகாத் நிதி திரட்டுவோருக்கு ஜகாத்தில் இருந்தே வழங்குதல் போன்றவை மக்காவில் அருளப்படவில்லை. அரசாங்கம் இல்லாத காலத்தில் இது போன்ற கட்டளையைப் பிறப்பிக்க முடியாது.
ஜகாத் என்பது இந்தப் பொருளிலும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப் படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்!இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறதுஎன்று (முஹம்மதே!) கூறுவீராக!அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள்.மறுமையையும் மறுப்பவர்கள்.
திருக்குர் ஆன் 41:6,7
ஜகாத் முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய மார்க்கக் கடமை என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் ஜகாத் கொடுக்காத முஷ்ரிக்குகளுக்கு (இணை வைப்பவர்களுக்குக்) கேடு என்று கூறப்படுகிறது. சாதாரணமான தர்மத்தைத் தான் இது குறிக்க முடியும். துவக்க காலத்தில் ஜகாத் எனும் சொல் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்த பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தை வைத்துக் கொள்வதைத் தடுத்தார்கள் என்றால் அது வரை இப்போது சட்டமாக உள்ள ஜகாத் கடமையாக இருக்கவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஜகாத் கடமையாவதற்கு முன்னுள்ள நிலை என்ற இப்னு உமர் அவர்களின் கூற்றையும் நாம் மறுக்க முடியாது,இப்னு உமர் ஹிஜ்ரத் செய்யும் போது பத்து வயதுடையவர்களாக இருந்தனர். மதீனா வந்த பிறகு தான் மார்க்கத்தைப் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைகிறார்கள். எனவே மதீனா வந்த பின் ஜகாத் பற்றிய கட்டளை அருளப்பட்டிருந்தால் தான் அவர்களால் இது பற்றிக் கூற முடியும்.
குழப்பம் :16
இன்னுமொரு விடயத்தையும் இங்கு மேலதிகமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மேற்படி (9:34)இறை வசனத்தில் தங்கம் வெள்ளியை சேமித்து அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதவர்களுக்கான தண்டனைஅவை அந்நாளில் நரக நொருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அதனால் அவர்களின் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்,முதுகுகளிலும் சூடு போடப்படும்என்பதாகும்.
ஆனால் குறித்த தௌபான் (ரலி) அவர்களது ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஹுபைறாவின் மகள் மற்றும் பாத்திமா(ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்கும் எச்சரிக்கை செய்யப் பட்ட தண்டனையோ அதே வடிவிலான நரக நொருப்பு அணிவிக்கப் படும் என்பதாகும். .
எனவே இவ்வாறு வித்தியாசமான முறையில் சொல்லப் பட்டிருக்கும் தண்டனைகளைக் கவனித்திருந்தாலே மேற்படி இறை வசனத்திற்கும் ஹதீஸுக்குமிடையில் முடிச்சுப் போட்டிருக்கமாட்டார்கள் என்பதையும் இங்கு இறுதியாக ஞாபகமூட்டிக் கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் எமது அடுத்த ஹதீஸ் பற்றிய தவறான கருத்துளுக்கு பதில் சொல்வோம் எனக் கூறி முடித்துக் கொள்கிறோம்.
நமது பதில்
தங்களது நிலைபாட்டைச் சரிகாணுவதற்காக எல்லையில்லாமல் உளற ஆரம்பித்து விட்டார். அந்த வசனத்தில் சொல்லப்பட்ட பழுக்கக் காய்ச்சப்பட்டு ஊற்றப்படும் என்ற தண்டனையும் ஃபாத்திமா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸில் சொல்லப்பட்ட அந்த நகைகள் நெருப்பாக மாறும் என்பதும் வெவ்வேறான தண்டனை. எனவே இவ்விரண்டு ஆதாரங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்ல என்பதே இவரது உளறல்.
அந்த வசனத்தில் பழுக்கக் காய்ச்சப்பட்டு என்று பொருள் செய்த இடத்தில் யுஹ்மா அலைஹா என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் நேரடிப் பொருளே சூடாக்குதல் என்பதாகும். இதன் நேரடிப் பொருளில் மொழிபெயர்த்தால் அந்த தங்கம் வெள்ளி சூடாக்கப்பட்டு உறுப்புக்களில் அவைகளைக் கொண்டு சூடு போடப்படும் என்பது பொருள்.
ஒரு ஆபரணத்தை நன்கு சூடாக்கினால் அவை நெருப்பாக மாறும். இதைத் தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே சூடாக்கப்படும் என்பதும் நகைகள் அதே வடிவில் நெருப்பு மாலையாக இருக்கும் என்பதும் வேறுவேறானவை அல்ல. இவ்விரண்டும் ஒரே மாதிரியான தண்டனை தான் என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்குக் கூட விளங்கும்.
தங்கம் நெருப்பாக மாற்றப்பட்டு அதன் மூலம் சூடு போடப்படும் என்ற அம்சம் வசனத்திலும் ஹதீஸிலும் இருப்பதே இவையிரண்டும் ஒரே விஷயத்தைப் பற்றியவை என்பதற்குப் போதுமானதாகும்.
இவரது வாதம் தவறு என்பதை இன்னொரு வகையிலும் நாம் புரிந்து கொள்ளலாம். தங்கத்தை உருக்கி சூடுபோடுதல் என்பதும் வடிவம் மாற்றப்படாமல் அதே பொருளை நெருப்பாக மாற்றி சூடு போடுதல் என்பதும் வெவ்வேறானவை. எனவே இத்தண்டனைகளுக்குக் கூறப்பட்ட சட்டங்களும் வெவ்வேறானவை என்று வாதிடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் இவ்விரு தண்டனைகளும் ஒரே சட்டத்திற்குக் கூறப்பட்டுள்ளன. ஸகாத்தைக் கொடுக்காதவர்களுக்கு இவ்விரு தண்டனைகளும் தரப்படும் என ஹதீஸில் உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து புரியலாம்.
பொன்,வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு,மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி,உலோகப் பாளமாக மாற்றி,அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம் (1803)
மேலுள்ள ஹதீஸில் பொன் வெள்ளி பழுக்கக் காய்ச்சப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்.
யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்து விட்டாயா?என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
நஸாயீ (2434)
இந்தச் செய்தியில் ஸகாத்தைக் கொடுக்காவிட்டால் காப்புகள் நெருப்பாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இவ்விரு தண்டனைகளும் ஸகாத் கொடுக்காமல் இருத்தல் என்ற ஒரு அம்சத்திற்காகத் தான் கூறப்பட்டுள்ளது.
இவர்களின் வாதப்படி இவ்விரு தண்டனைகளுக்கும் வித்தியாசம் இருப்பதால் இந்த இரண்டு செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. இவை ஒரு விஷயத்தைப் பற்றி பேசவில்லை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேறு வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன என இவர்கள் கூறுவார்களா?
எனவே இவர்களின் இந்த உளறல் தவறு என்பது நிரூபிக்கப்படுவது மட்டுமல்லாமல்9 : 34வது வசனமும் ஸவ்பான் (ரலி) அரிவிக்கும் ஹதீஸும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற ஒரே அம்சத்தைப் பற்றி பேசுபவை என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.
தொடர்-5
இறைவன் பெயரால்…..
வளைய வடிவில் உள்ள தங்க ஆபரணங்களை பெண்கள் அணிவது ஹராம் என்ற கருத்தை இலங்கையில் சிலர் கூறி வந்தனர். இவர்கள் ஆதாரமாகக் கருதும் செய்தியின் உண்மை நிலையையும், இஸ்லாம் இவ்வாறு கூறவில்லை என்பதையும் விளக்கி இரண்டு தொடர்களாக நமது இணையதளத்தில் நம் ஆய்வை வெளியிட்டிருந்தோம்.
இலங்கையைச் சார்ந்த நவ்ஃபர் என்ற சகோதரர் இவ்விரு தொடர்களுக்கும் தனது மறுப்பை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். இவர் வெளியிட்ட முதல் தொடரில் ஆய்வு சம்பந்தமான எந்த அம்சமும் இல்லை. எனவே அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்பதை முன்னரே விளக்கியுள்ளோம்.
இவரது இரண்டாவது தொடருக்கான முழுமையான பதில் சில தினங்களுக்கு முன்னால் நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இது வரை இதற்கான எந்தப் பதிலும் இவரிடமிருந்து வரவில்லை.
மூன்றாவது தொடரில் இவர் எழுப்பியிருந்த வாதங்களுக்கு உரிய பதிலை இப்போது காண்போம்.

குழப்பம் : 1

தங்க நகை அணியக் கூடாது என்று கூறும் நாம் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைக்கவில்லை என்பதையும் இவர்கள் தான் நாம் கூறிய ஹதீஸ்களில் இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் எடுத்து வைத்து ஆய்வைத் தொடக்கியிருக்கிறார்கள் என்பதையும் நாம் எமது சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்.
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நமது பதில் :
பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கு பல ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாக எடுத்து வைத்தது போலவும், அவற்றில் இரண்டு ஹதீஸ்களுக்கு மட்டும் நாம் மறுப்பு எழுதிவிட்டு மற்ற ஹதீஸ்களைக் கண்டு கொள்ளாதது போலவும் தோற்றத்தை இவர் ஏற்படுத்துகிறார்.
இன்னும் பல ஹதீஸ்கள் இவர்களது வாதத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது என ஒரு போலி பிரம்மிப்பை ஏற்படுத்தும் இவர் அந்த ஹதீஸ்கள் எவை? எவை? என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன எனக் கூறும் இவர் அவற்றைப் பட்டியல் போடப் போகிறார் என்று பார்த்தால் கடைசி வரை அந்த ஆதாரங்களில் ஒன்றைக் கூட குறிப்பிடவில்லை.
தற்போது இவருக்கும், நமக்கும் இந்த விஷயத்தில் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருப்பதால் இன்னும் ஹதீஸ்கள் உள்ளன என்று ஜாலம் செய்யாமல் அந்த ஹதீஸ்களை எடுத்துக் காட்டி தனது வாதத்தை நிலை நாட்ட வேண்டும். தனது கூற்றை மெய்ப்பிக்க வேண்டும்.
குழப்பம் : 2
இந்த இடத்தில் அறபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்குதல் என ஒரு குற்றச் சாட்டு வைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக சற்று விரிவாகவே விளக்க வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படுகிறது.
முந்தைய ஹதீஸை விளக்கும் போது அப்பெண்ணின் கையை நபி (ஸல்) அவர்கள் அடிக்கலானார்கள் (فجعل رسول الله يضرب يدها) என நிகழ்காலத் தொடர்வினையில் ( أفعال الشروع)மொழிபெயக்க வேண்டிய இடத்தில் கையைத் தட்டிவிட்டார்கள் என இறந்த கால வினையில் தவறாக செய்யப்பட்டிருந்த மொழி பெயர்ப்பை, இவர்களது இலக்கண அறிவை!! ஒரு புறம் வைத்துவிட்டு, இந்த வாக்கியத்தை வைத்து வாதங்கள் எழுப்பியிருந்ததன் மூலம் யார் அரைகுறை இலக்கண அறிவுடன் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
நமது பதில்
இவரது இலக்கண அறிவும் சிந்திக்கும் திறனும் எந்த லட்சணத்தில் உள்ளன என்பதற்கு இந்த வாதமும் ஒரு சான்றாக உள்ளது.
நமது இலக்கண அறிவைக் குறை காணும் முயற்சியில் ஈடுபட்டு தனது இலக்கண அறிவின் இலட்சணத்தை இங்கே வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது மேற்கண்ட சொல்லுக்கு அடித்தார்கள் என்று சென்ற கால வினையாகப் பொருள் கொள்ளாமல் அடிக்கலானார்கள் என்று நிகழ்காலமாக மொழி பெயர்க்க வேண்டும் என்பது இவரது வாதம். அடித்தார்கள் என்பது எப்படி இறந்த காலத்தைக் குறிக்குமோ அது போல் அடிக்கலானார்கள் என்பதும் இறந்த காலத்தைத் தான் குறிக்கும். சாதாரண அறிவு உள்ள ஒவ்வொருவரும் இதை அறிந்து கொள்வார்கள். ஆனால் இலக்கண மேதைக்கு இது கூட தெரியவில்லை.
நிகழ்காலத் தொடர் வினையில் இவ்வாசகத்தைக் கூறுவதென்றால் நபி (ஸல்) அவர்கள்அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூற முடியும். இறந்த கால வினையை நிகழ்கால வினை என்று இவர் கூறியிருப்பது இவரது இலக்கண அறிவின் அவலட்சணத்தைக் காட்டுகிறது.
தட்டலானார்கள் என்பதும் தட்டிவிட்டார்கள் என்பதும் இறந்த காலம் என்ற ஒரே காலத்தையே குறிக்கிறது என்பதால் தட்டிவிட்டார்கள் என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம். இதில் இலக்கணப் பிழை ஒன்றும் இல்லை.
நிகழ் காலத்துக்குரிய சொல்லாக இருந்தாலும் ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அதைப் பேசினால் தான் நிகழ் காலமாகப் பொருள் கொள்ள வேண்டும். ஒரு செயல் நடந்து முடிந்த பின் பிற்காலத்தில் அதைச் சொல்லிக் காட்டினால் நிகழ்காலமாகப் பொருள் கொள்வது அறியாமையாகும்.
ஒருவர் இன்னொருவரை அடித்துக் கொண்டிருக்கும் போது தான் அடிக்கிறார் என்று கூற முடியும். ஒருவர் இன்னொருவரை அடிப்பதைப் பார்த்தவர் பிறிதொரு சமயத்தில் மற்றவரிடம் பேசினால் அடித்தார் என்று தான் என்று தான் கூறுவாரே தவிர அடிக்கிறார் என்று கூற மாட்டார். இலக்கண அறிவு இல்லாதவர் கூட தெரிந்திருக்கும் சாதாரண விஷயம் கூட இவருக்குத் தெரியவில்லை.
இந்தச் செய்தியை அறிவிக்கும் ஸவ்பான் (ரலி) அவர்கள் நடந்து முடிந்த சம்பவத்தை ஒரு தாபியீக்கு எடுத்துரைக்கிறார்கள். அப்படியானால் இவ்வாசகத்தை நிகழ்காலத் தொடர்வினையில் அவர்கள் எவ்வாறு கூறியிருக்க முடியும்?
இவரது மொழியாக்கத்தை ஆய்வு செய்யப் புகுந்தால் இவரது இலக்கணப் பிழைக்கு ஏராளமான உதாரணங்களை நம்மால் கூற முடியும். இது ஆய்வைத் தாண்டிய விஷயம் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.
குழப்பம் : 3
இந்த இலக்கண விளக்கத்தில் நிறைந்து காணப்படும் தவறுகளை ஒவ்வொன்றாக அலசுவோம்.
முதலில், ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும் என்ற இவர்களது கருத்து தவறாகும். காரணம் இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள நூலிலேயே அதே பாடத்திலேயே ஹபீப் என்பது போன்ற வடிவில் உள்ள சொற்கள் மாத்திரமல்ல ஏனைய فعول மற்றும் مفعالமற்றும் مفعيل மற்றும் مفعل என்ற வடிவில் உள்ள சொற்கட்டமைப்புகளுக்குங் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டியதில்லை என தெளிவுபடுத்தப்பட்டிருப்பது வெறுமனே அறபு மென் பொருளில் இருந்து மூல நூலாசிரியரின் கூற்று எது விரிவுரையாளரின் கூற்று எது என்று வித்தியாசப்படுத்தாமல் (ومِن فَعِيلٍ) بمعنى مفعول (كَقَتِيْلٍ) بمعنى مقتول وجريح.
மென் பொருளில் காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கூட களையாமல் !!رجل جريحامرأةஅப்படியே வெட்டி,ஒட்டியிருக்கும் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.!!
அவ்வாறே அடுத்த பந்தியின் ஆரம்பத்தில் மீண்டும் அதே தவறை ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும் என எழுதியுள்ளார்!!.
நமது பதில் :
மூல நூலாசிரியரின் கருத்து எது? விரிவுரையாளரின் கருத்து எது? என்பது ஒரு பிரச்சனையே அல்ல. இலக்கணத்தில் நாம் கூறும் விதி உள்ளதா என்பது தான் பிரச்சனை. நமது வாதத்தை மறுப்பதாக இருந்தால் இந்த விதி அரபு இலக்கணத்தில் இல்லை என்று கூறி மறுக்க வேண்டும். இந்த விதி மூலத்தில் இல்லை; விரிவுரையில் உள்ளது என்று கூறுவது கோமாளித்தனமாகும் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை.
தவறான ஒரு தவறான சட்டம் குறிப்பிட்ட மத்ஹப் நூலில் 200 ஆம் பக்கத்தில் உள்ளது என்று நாம் விமர்சித்த போது 200ஆம் பக்கத்தில் உள்ளதாகக் கூறுவது தவறு. 210ஆம் பக்கத்தில் தான் அப்படி உள்ளது என்று மத்ஹப்வாதிகள் பதில் கூறியது போல் இவரும் பதில் அளிக்கிறார். விரிவுரையில் இருந்தால் என்ன? மூலத்தில் இருந்தால் என்ன? அப்படி ஒரு விதி இருக்கிறதா? இல்லையா என்பது தான் பிரச்சனை.
ஹபீப் என்ற வடிவத்துக்கு இந்த இலக்கண விதி உள்ளது என்று நாம் கூறியதை மறுக்கப் புகுந்த இவர் இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள நூலிலேயே அதே பாடத்திலேயே ஹபீப் என்பது போன்ற வடிவில் உள்ள சொற்கள் மாத்திரமல்ல ஏனைய فعول மற்றும் مفعال மற்றும்مفعيل மற்றும் مفعل என்ற வடிவில் உள்ள சொற்கட்டமைப்புகளுக்குங் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டியதில்லை என தெளிவுபடுத்தப்பட்டிருப்பதுஎன்று கூறுகிறார். அதாவது தனக்கு எதிராக தானே வாதிடுகிறார்.
நவ்பர் பொய் சொல்கிறார் என்று நாம் கூறும் போது நவ்பரும் இன்னும் பலரும் பொய்சொல்லியிருக்கிறார்கள் என்று பதில் கூறுவது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் இவரது பதில் அமைந்துள்ளது. ஹபீப் என்ற சொல்லுக்கு மட்டுமின்றி இன்னும் பல சொற்களுக்கும் இந்த விதி உண்டு என்று இவர் கூறுவதன் மூலம் நாம் எடுத்துக் காட்டிய இலக்கண விதியை ஒப்புக் கொள்கிறார்.
ஹபீப் என்ற வடிவமைப்புடைய சொற்களூக்கு நாம் கூறிய இலக்கண விதி உண்டா இல்லையா என்பது தான் பிரச்சனை. அது போல் இன்னும் பல சொற்களுக்கு அது போன்ற விதி இருப்பதால் ஹபீப் என்ற வடிவமைப்புக்கு அந்த விதி இல்லை என்று ஆகிவிடுமா?
ஹபீப் என்ற வார்த்தைக்கு என்ன சட்டம் என்பதைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். مفعل مفعيل مفعال فعول ஆகிய அமைப்புகளைப் பற்றி நாம் பேசவில்லை. நமது ஆய்வு ஃபயீல் என்ற அமைப்புடன் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால் ஃபயீல் அமைப்பைப் பற்றி பேசியிருந்தோம்.
வெட்டி ஒட்டுதல் என்ற வார்த்தையையும் பய்ன்படுத்தியுள்ளார். ஒரு வாக்கியத்தில் இல்லாத ஒன்றை நாமாக எழுதி நுழைப்பது தான் வெட்டி ஒட்டுதல் என்று சொல்லப்படும். ஒரு நூலில் இருப்பதை அப்படியே எடுத்துப் பயன்படுத்துவது வெட்டி ஒட்டுதல் ஆகாது.
அரபு மூலத்தைப் பய்ன்படுத்தும் போது அதைக் கம்போஸ் செய்யாமல் சிரமத்தைக் குறைப்பதற்காக மூல நூலில் உள்ளதை காப்பி செய்து பயன்படுத்துவது அனைவரும் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு வழிமுறை தான்.
இவர் தனது ஆய்வில் அரபியில் குறிப்பிடும் வார்த்தைகள் கூட வேறு நூல்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டவையே.
மூல நூலில் சில வேளை எழுத்துப் பிழை இருந்தால் அதைக் கவனிக்காமல் பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். رجل جريحامرأة என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் (இடைவெளி) விடாமல் கம்போஸ் செய்திருப்பதால் جريح امرأةஎன்பது جريحامرأة என்று உள்ளது. இது விவாதத்துக்கு உரிய விஷயமே இல்லை.
மொழி பெயர்க்க என்று எழுதும் இடத்தில் மொழிபெயக்க என்று இவர் தமிழில் பிழை விட்டது போல் அரபியில் கம்போஸ் செய்பவர்களுக்கும் பிழை ஏற்படும். இது போன்ற எழுத்துப் பிழைகளை விவாதமாக்குவதில் இருந்தே இவரது விசாலமான அறிவு புலப்படுகிறது.
குழப்பம் : 4
முதலில் எனது ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் அது ஆணை மாத்திரம் குறிக்கும் எனக் குறிப்பிட்டவர் அதற்கு முந்தைய வரிகளில் எனது ஹபீபைப் பார்ர்த்தேன் எனக் குறிப்பிட்டால் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்ற குழப்பம் ஏற்படும் எனவும் எழுதி தனக்குத்தானே முரண்பட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம்.
எனவே, இவர்கள் தவறாக விளங்கியுள்ளது போல் வெறுமனே ஹபீப் என்ற என்ற சொல் ஆணை மாத்திரம் தான் குறிக்கும் என்றிருந்தால் நான் ஹபீபை பார்த்தேன் எனக் கூறும் போது ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று எவ்வாறு குழப்பம் ஏற்படும். எனவே இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஏற்கனவே ஒரு ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் ஹபீப் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது ஆணை மட்டும்தான் குறிக்கும் என்ற இவர்களது இலக்கண விளக்கம்!! தவறு என்று நிரூபணமாவதுடன் ஹபீப் எனும் பதம் குறித்த ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் வெறுமனே பயன்படுத்தும் போது ஆண், பெண் இருவரையும் உள்ளடக்கும் என்பதும் தெளிவாகப் புரிகிறது.
எனவே இவர்கள் குறிப்பிட்டது போல் இலக்கண விதிப்படி ஹபீப் என்ற வார்த்தைக்கு ஆண் என்ற கருத்து மாத்திரம் தான் இருக்கும் என்றிருந்தால் ஆணைக் குறிக்குமா பெண்ணைக் குறிக்குமா என்று குழப்பம் ஏற்படும்என்ற பேச்சுக்கே இடம் கிடையாதல்லவா?!
நமது பதில் :
இவருக்கு கொஞ்சமாவது புரிந்து கொள்ளும் திறன் உள்ளதா என்று சந்தேகிக்கப்படும்அளவுக்கு இவரது இந்த வாதம் அமைந்துள்ளது. ஒருவரது வாதத்தை மறுக்க முன்வருபவர் அந்த வாதத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை விளங்காமல் சம்மந்தமில்லாமல் உளறுவது தான் இவரது ஆய்வாக உள்ளது.
ஹபீப் என்ற வார்த்தை ஆணையும் பெண்ணையும் குறிக்கும் என்று பொத்தாம் பொதுவாக இவர் எழுதியிருந்தார். இவ்வாறு பொத்தாம் பொதுவாக கூறுவதற்கு அரபு இலக்கணத்தில் ஆதாரம் இல்லை என்று கூறி இதனை நாம் மறுத்திருந்தோம்.
பெண் என அறியப்பட்ட ஒருவரை வர்ணிக்கும் போது தான் ஹபீப் (நேசமானவர்) என்ற வார்த்தை பெண்ணைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும். வர்ணிக்கப்படுபவர் ஆணா?பெண்ணா? என்ற விவரம் கூறப்படாமல் இருந்தால் அப்போது ஹபீப் என்ற வார்த்தை பெண்ணைக் குறிக்காது. ஆணை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
எனவே ஹபீப் என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு அது பெண்ணைத் தான் குறிக்கிறது என வாதிடுவது தவறு. அந்த வார்த்தை யாரைப் பார்த்து கூறப்பட்டதோ அந்நபர் பெண்ணாக இருக்கிறார் என்பது உறுதியானாலே ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது என்று கூற முயும் எனக் கூறி இதற்கான ஆதாரத்தை அரபு இலக்கணத்தில் காட்டினோம்.
ஹபீப் என்ற வார்த்தை இடம்பெற்ற ஹதீஸில் பொத்தாம் பொதுவாக நேசமானவர் என்றே கூறப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கின்ற எந்த அம்சமும் அந்த ஹதீஸில் இல்லாததால் இந்த இலக்கண விதியின் அடிப்படையில் ஹதீஸில் சொல்லப்பட்ட ஹபீப் என்பது பெண்ணைக் குறிக்காது. ஆணை மட்டுமே குறிக்கும் என்று கூறியிருந்தோம். இதில் எந்த முரண்பாடும் இல்லை. குழப்பமும் இல்லை.
நாம் கூறிய இலக்கண விதி இல்லை என்றோ அல்லது தவறு என்று இவரால் மறுக்க முடியவில்லை. ஹபீப் என்று பொதுவாகக் கூறினாலும் அது பெண்ணைக் குறிக்கும் என்று வாதிடும் இவர் அதற்கான இலக்கண ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு எடுத்துக் காட்ட முடியாததால் நாம் எழுதிய வாசகத்தில் குதர்க்கம் செய்து முரண்பாட்டைக் கொண்டு வர முயற்சித்துள்ளார். பொய்யான இந்த முரண்பாட்டை வைத்து இவர்களது கருத்து உண்மை என்பதை நிறுவ முயற்சிக்கிறார்.
எனவே ஹபீப் என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் பெண்ணையும் குறிக்கும் என்ற இவர்களின் வாதத்திற்கு நாம் குறிப்பிட்டுக் காட்டிய இலக்கண விதி சாவுமணி அடிக்கிறது.
முதலில் எனது ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் அது ஆணை மாத்திரம் குறிக்கும் எனக் குறிப்பிட்டவர் அதற்கு முந்தைய வரிகளில் எனது ஹபீபைப் பார்ர்த்தேன் எனக் குறிப்பிட்டால் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்ற குழப்பம் ஏற்படும் எனவும் எழுதி தனக்குத்தானே முரண்பட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம்என்று கூறுகிறார்.
இதில் எந்த முரண்பாடும் இல்லை. வெறுமனே ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் அது ஆணை மட்டுமே குறிக்கும் என்பதை முதலில் நாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு தான் இலக்கண விதியும் கூறுகிறது. இதுவே நமது நிலைபாடு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு முடிவு எடுத்தால் தான் எந்தக் குழப்பமும் ஏற்படாது.
ஆனால் இவ்வாறு முடிவு எடுக்காமல் இவர்கள் கூறுவது போல் ஹபீப் என்ற வார்த்தை ஆணையும் குறிக்கும் பெண்ணையும் குறிக்கும் என்று முடிவெடுத்தால் அப்போது தான் இந்தக் குழப்பம் வரும். ஹபீபைப் பார்த்தேன் என்றால் இங்கு ஹபீப் என்பது ஆணா?பெண்ணா? என்ற குழப்பம் வருகிறது.
ஹபீபைப் பார்த்தேன் என்ற வாசகத்தில் உள்ள ஹபீப் என்பது ஆணை மட்டுமே குறிக்கும் என்று சட்டம் வகுத்து விட்டால் இங்கு ஆணா? பெண்ணா? என்ற குழப்பம் வராது. இதில் என்ன முரண்பாடு உள்ளது.
இடம் பொருள் ஏவலை வைத்து முரண்பாடில்லாமல் இவ்வாறு விளங்குவதை விட்டு விட்டு அங்கு ஒரு துண்டையும் இங்கு ஒரு துண்டையும் எடுத்துப் போட்டு முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கிறார்.
எனவே ஹபீப் என்று பொதுவாகக் கூறினால் அது ஆணை மட்டுமே குறிக்கும் என்ற சட்டம் இயற்றப்பட்டதின் நியாயமான காரணத்தை விளக்குவதற்காகவும் அவ்வாறு சட்டம் கூறாவிட்டால் ஏற்படும் விளைவை விவரிப்பதற்காகவுமே குழப்பம் ஏற்படும் என்று நாம் கூறியிருந்தோம்.
ஹபீப் என்ற வார்த்தை பொதுவாகவே ஆணையும் பெண்ணையும் குறிக்கும் என்பது இவர்களின் வாதம். இந்த வாதத்தால் குழப்பம் ஏற்படும் என்பதை அரபு இலக்கணத்தை ஆதாரமாகக் காட்டி நாம் கூறியிருந்தோம்.
இவர் தனது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் குழப்பம் ஏற்படும் என்று நாம் கூறியதை முறையான அடிப்படையில் மறுத்து குழப்பம் ஏற்படாது என நிரூபித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிரூபிக்காமல் நாம் கூறிய வாசகத்தில் குதர்க்கத்தை மட்டும் செய்துள்ளார்.
எனவே நாம் நாடாத அர்த்தத்தை நமது வார்த்தைகளில் திணித்து அதன் மூலம் நமது வாதம் தவறு எனவும் இவரது வாதம் சரி எனவும் நிறுவுவதற்கு இவர் எடுத்த முயற்சி இவருக்கே எதிராகத் திரும்புகிறது.
குழப்பம் : 5
அடுத்து இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள, அரைகுறயாக மொழி பெயர்த்துள்ள இலக்கண விதியில் இவர்கள் மொழிபெயர்க்காமல் விட்டு விட்ட சில வரிகளையும் நாம் மொழிபெயர்க்கிறோம்
1.ولو قال : ومن فعيل كقتيل إن عرف موصوفه غالباً التاء تنخذف لكان أجود
(விரிவுரையாளர் கூறுகிறார் ) :(மூல நூலாசிரியர்) பஈல் எனும் அமைப்பில் கொல்லப்பட்டவர் என்பது போன்று செயற்பாட்டு பெயரில் (ஹபீப் என்பது போல்) இடம் பெறும் சொற்களின் மூலம் நாடப்படுவது ஆணா பெண்ணா என்பது அறியப்பட்டால் இறுதியில் இடம் பெறும் தா التاء நீங்கிவிடும் என்று கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
2.இதன் காரனமாகவே மூல நூலாசிரியர் தனது ஷறஹுல் காபியாஎனும் நூலில்வர்ணனையை நோக்காகக் கொண்டு வர்ணிக்கப்படுபவர் யார் என்று அறியப்பட்டால் இறுதியில் இடம் பெறும் தா நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நமது பதில் :
நமக்கு மறுப்பு சொல்வதாக எண்ணிக் கொண்டு தன்னையே இவர் மறுத்துக் கொள்கிறார். இவர் எடுத்துக் காட்டும் ஆதாரத்தின் மூலம் நமது ஆதாரத்தில் ஒன்றை அதிகமாக்கியுள்ளார். எப்படி என்று பார்ப்போம்.
ஃபயீல் என்ற அமைப்பில் உள்ள சொற்களின் மூலம் நாடப்படுவது ஆணா? பெண்ணா?என்பது அறியப்பட்டால் இறுதியில் உள்ள தா நீங்கிவிடும். அதாவது பெண்ணைக் குறிப்பதற்காக ஹபீப் என்ற சொல்லின் இறுதியில் தாவைச் சேர்த்து ஹபீபா என்று கூறாமல் ஹபீப் என்றே கூற வேண்டும் என்ற விதியை எடுத்துக் காட்டி இதைத் தன்க்குரிய ஆதாரமாகக் காட்டுகிறார்.
இவர் குறிப்பிட்டுள்ள இவ்விதி நாம் ஏற்கனவே கூறிய கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் இவரது கருத்தைத் தரைமட்டமாக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.
நாடப்படுபவர் பெண் என அறியப்பட்டால் தா நீங்கிவிடும். நாடப்படுபவர் பெண் என அறியப்படாவிட்டால் அப்போது தாவை நீக்கக் கூடாது என்று இவ்விதி கூறுகிறது.

இந்த விதியை நன்கு கவனித்தால் ஹபீப் என்ற வார்த்தையை மட்டும் வைத்து பெண் என்று தீர்மானிக்க முடியாது. அதன் மூலம் பெண் நாடப்படுகிறார் என்பது அறியப்பட்டால் தான் அது பெண்ணைக் குறிக்கும். அவ்வாறு அறியப்படாவிட்டால் ஹபீப் எனக் கூறாமல் ஹபீபா என்று தான் கூற வேண்டும் என்று தான் இவர் எடுத்துக் காட்டிய இலக்கண விதி கூறுகிறது. அதாவது எந்த இலக்கண விதியை வைத்து ஹபீப் என்ற சொல்லுக்கு பெண் என்று பொருள் கொள்ளக் கூடாது என்று நாம் வாதிட்டோமே அதே விதியைத்தான் இவர் எடுத்துக் காட்டும் ஆதாரமும் கூறுகிறது.

ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் நீ என்னுடைய ஹபீப் என்று கூறினால் இங்கே ஹபீப் என்பது பெண்ணைக் குறிக்கிறது என்று அர்த்தம். இங்கே ஹபீபா என்று கூற வேண்டியதில்லை. ஹபீப் என்று கூறினாலே போதுமானது.

இந்த உதாரணத்தில் ஹபீப் என்பது பெண்ணைக் குறிக்கிறது என நாம் முடிவு செய்தது ஹபீப் என்ற வார்த்தையை வைத்து அல்ல. அது பெண்ணைப் பார்த்து கூறப்பட்டதாலே இங்கு இது பெண்ணைக் குறிக்கிறது என்று அறிந்து கொள்கிறோம்.
நாடப்படுபவர் பெண் தான் எனத் தெரியாவிட்டால் அப்போது பெண்ணைக் குறிப்பதாக இருந்தால் ஹபீப் எனக் கூறாமல் ஹபீபா என்று தான் கட்டாயம் கூற வேண்டும். இதைத் தான் இவ்விதி கூறுகிறது.
நமது கருத்தும் அதற்கு நாம் எடுத்துக் காட்டும் ஆதாரமும் ஒன்றுடன் ஒன்று பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
ஆனால் இவரது வாதமும் அதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் ஒன்றுக் கொன்று சம்மந்தமில்லாமல் இருக்கிறது.
இவரது வாதம் என்ன? ஹபீப் என்ற சொல் ஆணைக் குறிக்கிறதா பெண்ணைக் குறிக்கிறதாஎன்பது தெளிவுபடுத்தப்படாத இடங்களிலும் பெண்ணைக் குறிக்கும் என்பது தான் இவரது வாதம். (அப்படி வாதிட்டால் தான் பெண்கள் தங்க நகை அணியத் தடை என்று சமாளிக்க முடியும்) இவரது இந்த வாதத்தை நிரூபிக்கும் வகையில் இலக்கண ஆதாரத்தை இவர் காட்டவே இல்லை. தனக்கு எதிராகவே ஆதாரத்தைக் காட்டி இருக்கிறார். எனவே பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இவர் எடுத்து வைத்த வாதம் நொறுங்கிப் போகிறது.
தனது ஹபீபிற்கு நெருப்பால் ஆன வளையத்தை அணிவிக்க விரும்புபவர் தங்கத்தால் ஆன வளையத்தை அணிவிக்கட்டும் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்பது பெண்ணையே குறிக்கிறது என்ற வாதத்தை முன்வைத்து பெண்கள் தங்கம் அணிவது ஹராம் என இவர்கள் கூறுகிறார்கள்.
மேலுள்ள இலக்கண விதியின் படி ஹதீஸீல் கூறப்பட்ட ஹபீப் என்ற வார்த்தையின் மூலம் பெண் நாடப்பட்டிருப்பது அறியப்பட்டாலே அது பெண்ணைக் குறிக்கிறது என வாதிட முடியும். ஆனால் ஹதீஸில் எந்தப் பெண்ணைப் பற்றியும் கூறப்படவில்லை. வெறுமனே பிரியத்திற்குரியவர் என்று தான் கூறப்பட்டுள்ளது.
ஹபீப் என்பது பெண்ணைத் தான் குறிக்கிறது என இவர்கள் வாதிடுவதாக இருந்தால் முதலில் ஹபீபின் மூலம் நாடப்படுவது பெண் தான் என்பதை அந்த வாக்கியத்தில் இருந்து நிரூபிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு நிரூபிக்கவில்லை. இந்தத் தவறான வாதத்தின் அடிப்படையில் பெண்கள் தங்கம் அணியக் கூடாது என இவர்கள் வாதிட்டதும் தவறு என்பது தெளிவாகிறது.
எனவே ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்ற வார்த்தையின் மூலம் பெண் நாடப்படுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் இவ்வார்த்தை ஆணை மட்டுமே குறிக்கிறது என்பது உறுதியாகிறது. .
நாம் சொல்வதை எப்படி இவர் புரிந்து கொள்ளமல் இருக்கிறாரோ அது போல் தான் எடுத்து வைக்கும் ஆதாரத்தையும் அதன் கருத்தையும் கூட புரியாதவராக இருக்கிறார். புரிந்து கொள்ளும் திறன் குறைந்தவராகவே இவரைக் காண முடிகிறது. இல்லாவிட்டால் தன் கருத்தை மறுக்கும் ஆதாரங்களை எல்லாம் தனது ஆதாரமாகக் காட்டுவாரா?
குழப்பம் : 6
எனவே மேற்படி இலக்கண விதிகளின் சுருக்கத்தை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1. ஹபீப் எனும் பதம் ஏற்கனவே ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் பயன்படுத்தப்பட்டால் அது ஆணையும் பெண்ணையும் குறிக்கும்.
2.ஹபீப் எனும் வார்த்தை மூலம் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்பது (ஏதோ ஒரு வகையில்) அறியப்பட்டாலும் ஹபீபா என தாசேர்க்காமல் ஹபீப் என்றே குறிப்பிட வேண்டும்.
நமது பதில் :
இவர் முதலில் குறிப்பிடுகின்ற விதிக்கு எந்த ஆதாரத்தையும் இவர் அரபு இலக்கணத்திலிருந்து காட்டவில்லை. இவரது குதர்க்கத்தையே இதற்கு ஆதாரமாகக் காட்டினார்.
இவர் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விதிக்கு இலக்கணத்தில் ஆதாரம் உண்டு. ஆனால் இவ்விதிக்கும் இவரது வாதத்திற்கும் சம்பந்தம் இல்லை. மாறாக இது அவருக்கு எதிரான விதி என்பதையும் நமது கருத்திற்கே ஆதாரமானது என்பதையும் முன்பு விவரித்திருக்கிறோம்.
குழப்பம் : 7
மேற்படி இரு இலக்கண விதிகளைப் பின்வரும் இரு முறைகளிலும் நிரூபிக்க முடியும்.
1.அறபு இலக்கண விதிகளுக்குக் கூட அடிப்படையாக அமைந்த ஜாஹிலிய்யாக் கால கவிதைகளில் மிகச் சிறந்த கவிதையாகக் கொள்ளப்படும் உம்ற உல் கைஸ் (أمرأ القيس)எனும் கவிஞனின் கிஃபா நப்கி(قفا نبك) எனும் கவிதையை எடுத்துக் கொள்வோம்.
குறித்த கவிதையில் ஜாஹிலிய்யாக் கால கவிஞன் தனது காதலி உனைஸா பற்றியும் அவளுடன் தான் நடாத்திய காதல் லீலைகள், காமக் களியாட்டங்கள் பற்றியும் விரிவாக வர்ணிக்கிறான்.
மேற்படி கவிவரிகளைப் பின்வருமாறு ஆரம்பிக்கிறான்
قفا نبك من ذكرى حبيـب ومنـزلِ *** بسقط اللوى بين الدخـول وحومـلِ
மேற்படி கவி வரியில் ஏற்கனவே பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் பயன்படுத்தப்படாமல் காதலியைக் குறிக்க (தான் நேசிக்கும் பெண்ணைக் குறிக்க)ஹபீப்எனும் வார்த்தையே பயன்படுத்தப் பட்டுள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகவே விளங்குகிறது.
2.அவ்வாறே இலக்கியவாதிகளாலும், வரலாற்றாசிரியர்களாலும் குறிப்பிடப்படும் ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) அவர்களது பிரபல்யமான கவி வரிகள்:
منع النوم بالعشاء الهموم***وخيال إذا تغور النجوم
من حبيب أصاب قلبك منه***سقم فهو داخل مكتوم
மேற்படி கவி வரிகளில் இடம் பெறும் ஹபீப் எனும் வார்த்தை நேசித்த பெண்ணையே குறிக்கிறது என்பதை மேற்படி கவிதைக்கு விரிவுரை எழுதிய அப்துர் ரஹ்மான் அல் பர்கூகி என்பவர் يريد حبيبته التي يشب بها கவிஞர் தான் நேசித்த பெண்ணையே நாடுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
ஆக அறபு இலக்கணத்தையும் அரைகுறையாகப் புரிந்து கொண்டு அறபு இலக்கிய அறிவுமில்லாமல் ஹபீப் எனும் பதம் ஆணை மாத்திரம் தான் குறிக்கும் என்ற இவர்களது அடிப்படை வாதமே தவறு என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.
நமது பதில் :
வழக்கம் போல் இந்த இடத்திலும் தனக்கு எதிரான ஆதாரத்தியே தனது ஆதாரம் என்று வாதிடுகிறார்.
முதல் கவிதையில் இம்ரஉல் கைஸ் என்ற கவிஞன் தனது காதலி உனைஸாவுடன் தான் நடாத்திய காதல் லீலைகளையும் காமக்களியாட்டங்களையும் விவரிக்கிறான் என்று கூறுகிறார்.
உனைஸா என்பவள் பெண் என்பதில் இவருக்கும் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை. அவள் பெண்ணாக இருப்பதால் தான் இவன் அவளுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டு காமக்களியாட்டங்களை நடத்த முடிகிறது.
இந்தக் கவிதையில் வெறுமனே ஹபீப் என்ற வாசகத்தை மட்டும் வைத்து பெண் என்று இவர் முடிவு செய்யவில்லை. உனைஸா, காதல் லீலை, காமக்களியாட்டம், இன்னும் ஹா என்ற பெண்பால் பிரதிப் பெயர்ச்சொல்லைக் கூறியிருப்பது ஆக இத்தனை சான்றுகளை வைத்தே ஹபீப் என்பது இங்கு பெண்ணைக் குறிக்கிறது என்று முடிவு செய்கிறோம்.
இதே போன்று தான் இரண்டாவதாக இவர் குறிப்பிட்ட கவிதையும் அமைந்துள்ளது. ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் பாடியதாக இவர் குறிப்பிட்டுக்காட்டிய அடிகளுக்குப் பிறகு لَمْ تَفُتْهَا شَمْسُ النَّهَارِ بِشَيْءٍ … غَيْرِ أَنَّ الشَّبَابَ لَيْسَ يَدُومُ என்ற அடி வருகிறது. இந்த அடியில் ஹா என்ற பெண்பால் பிரதிப் பெயர்ச்சொல் வந்துள்ளது. இதனடிப்படையில் முன்னால் கூறப்பட்ட ஹபீப் என்பது பெண்ணையே குறிக்கிறது எனக் கூற முடியும். இங்கே ஹபீப் என்பது பெண்ணைக் குறித்து கூறப்பட்டிருப்பதால் தான் அதனுடைய பிரதி பெயர்ச் சொல் ஆண்பாலில் வராமல் பெண்பாலில் வந்துள்ளது.
உண்மையில் இக்கவிதை வரிகள் இவரது நிலைபாட்டிற்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.
நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கின்ற ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிப்பதாக இருந்தால் அதற்கானப் பிரதி பெயர்ச்சொல் இக்கவிதையில் வந்ததைப் போல் ஹா என்று பெண்பாலாக வந்திருக்கும். ஆனால் ஹதீஸில் அவ்வாறு வரவில்லை. மாறாக ஹபீபைக் குறிக்க ஹு என்ற ஆண்பால் பிரதி பெயர்ச்சொல்லே வந்துள்ளது. எனவே ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்ற வார்த்தை ஆணை மட்டுமே குறிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
அதாவது ஹபீப் என்று முதலில் கூறி விட்டு பின்னர் அவள் என்று கூறப்பட்டால் அதைவைத்து ஹபீப் என்பது பெண்ணைத் தான் குறிக்கிறது என்று கருதலாம். ஹபீப் என்று கூறி விட்டு அதைத் தொடர்ந்து எதுவும் கூறப்படாமல் இருந்தால் அல்லது அவன் என்று ஆண்பால் கூறப்பட்டால் ஹபீப் என்பது பெண்ணைக் குறிக்காது. இவர் எடுத்துக் காட்டிய இரண்டு கவிதைகளிலும் ஹபீப் என்பதைத் தொடர்ந்து அவள் என்று கூறப்பட்டுள்ளது. அதை ஆதாரமாக வைத்து பெண்ணைத் தான் அந்தக் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹபீப் குறிக்கிறது என்று முடிவு செய்ய முடியும். ஆனால் நாம் விவாதித்துக் கொண்டிருக்கின்ற ஹதீஸில் ஹபீப் என்று கூறிவிட்டு அதைத் தொடர்ந்து அவன் என்று கூறப்படும் போது அது பெண்ணைக் குறிக்கவே முடியாது. இவர் காட்டும் ஆதாரத்துக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.
இந்தக் கவிதையில் ஹபீப் என்ற வார்தையின் மூலம் பெண் நாடப்பட்டுள்ளார் என்பது எவ்வாறு சந்தேகத்திற்கு இடமின்றி வெட்ட வெளிச்சமாகிறதோ அது போன்று ஹதீஸில் கூறப்பட்ட ஹபீபின் மூலம் பெண் தான் நாடப்பட்டுள்ளார் என்று இவர் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க வேண்டும்.
ஆனால் இவர் அவ்வாறு நிரூபிக்காமல் பெண் தான் நாடப்பட்டுள்ளார் என்று இவர் மனோஇச்சையின் அடிப்படையில் கூறுகிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
ஹபீப் என்ற வார்த்தை பெண்ணைக் குறிக்காது என்று நாம் பொத்தாம் பொதுவாகக் கூறவில்லை. பெண்ணைக் குறிப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் இவ்வார்த்தை கூறப்பட்டால் அப்போது பெண் என்று முடிவு செய்யலாம். எந்த ஆதாரமும் இன்றி வெறுமனே ஹபீப் என்று மட்டும் கூறப்பட்டால் அப்போது பெண்ணைக் குறிக்காது. ஆணை மட்டுமே குறிக்கும் என்றே கூறுகிறோம். இதைத் தான் மேலே இவர் சுட்டிக்காட்டிய கவிதை வரிகள் கூறிக் கொண்டிருக்கின்றன.
குழப்பம் : 8
இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை வாசகர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். நாம் இங்கு குறிப்பிட விரும்புவது அறிஞர்களுடைய சட்டம் சம்பந்தமான கூற்றுகளை அல்ல. மாறாக அறபு மொழி சம்பந்தப் பட்ட ஒரு சொல்லை பிஜே அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் அவர்களும் அரைகுறையாக இலக்கணத்தை விளங்கியிருந்தார்களா அல்லது அறபு இலக்கணத்தை பிஜே அவர்களை விடவும் நன்கு விளங்கியிருந்தார்களா என்பதைக் காட்டுவதற்காகவே, குறித்த ஹதீஸை அறிஞர்கள் ஆணுக்குரியதாக விளங்கினார்களா அல்லது பெண்ணுக்குரியதாக விளங்கினார்களா என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.
1. குறித்த ஹதீஸ் இடம் பெறும் கிரந்தங்களில் ஒன்றான ஸுனன் அபீ தாவுத் எனும் கிரந்தத்தில் இந்த ஹதீஸை இமாம் அபூதாவுத் அவர்கள் باب ما جاء في الذهب للنساء பெண்கள் தங்கம் அணிவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்.
2. குறித்த ஹதீஸ் இடம் பெறும் மற்றுமொரு கிரந்தமான ஸுனன் அல் பைஹகி அல்குப்றா எனும் கிரந்தத்தின் ஆசிரியர் இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸையும் பெண்கள் தங்கம் அணிவது கூடாது என வலியுறுத்தும் சில ஹதீஸ்களையும் باب سياق أخبار تدل على تحريم التحلي بالذهب தங்கம் அணிவது கூடாது என்பதைக் காட்டும் ஹதீஸ்கள் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்.
3. குறித்த ஹதீஸ் இடம் பெறும் ஸுனன் அபீதாவுத் கிரந்தத்தின் முக்கிய விரிவுரை நூலான ஔனுல் மஃபூத் கிரந்தத்தின் ஆசிரியர் முஹம்மத் ஷம்ஸுல் ஹக் அல் அளீம் ஆபாதி அவர்கள் இந்த ஹதீஸின் ஹபீப் எனும் வார்த்தையை விளக்கும் போது,
حبيبه ) أي محبوبه من زوجة أو ولد أو غيرهما ) அதாவது தனது நேசத்துக்குரிய மனைவி பிள்ளை பேண்றவர்களுக்கு. என விளக்கமளித்துள்ளதையும் பார்க்கிறோம்.
4.குறித்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது பிரபல்ய அறபு மொழிப் பண்டிதர் முஹம்மத் அல் அமீன் அஷ்ஷின்கீதி (ரஹ்) அவர்கள் தனது அழ்வாஉல் பயான் எனும் அல்குர்ஆன் விரிவுரையில் ( 2ற 355, 356 ) சிலர் இந்த ஹதீஸில் ஹபீப் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது ஆணையே குறிக்கிறது, பெண்ணைக் குறிக்குமென்றால் ஹபீபா என இடம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுவது தவறு என்றும் ஹபீப் எனும் வார்த்தை அறபு மொழியில் பெண்ணைக் குறிக்க பரவலாக பயன்படுத்தப்படும் என்பதை ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) அவர்களது கவி வரிகளையும் குதையிர் அஸ்ஸா (كثير عزة) எனும் கவிஞனின் வரிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளதையும் காண்கிறோம்.
நமது பதில் :
ஹதீஸில் உள்ள ஹபீப் என்ற வார்த்தை பெண்ணை மட்டுமே குறிக்கிறது என்ற இவர்களின் வாதத்தை ஹதீஸிலிருந்து நிரூபிக்க முடியவில்லை. அரபு இலக்கணத்தின் மூலமாகவும் நிரூபிக்க முடியவில்லை.
எனவே இப்போது தங்கள் வாதத்தை நிலைநாட்ட சில அறிஞர்களின் கூற்றின் பக்கம் தாவியுள்ளனர். அறிஞர்களின் சட்டம் சம்பந்தமான கூற்றுக்களை இங்கே குறிப்பிடவில்லை என்ற பொய்யை வேறு சொல்லிக் கொள்கிறார்.
ஹபீப் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதில் தான் பெண்கள் தங்கம் அணியலாமா? கூடாதா? என்ற முடிவு அடங்கியிருக்கிறது. எனவே இந்த வார்த்தையை அந்த அறிஞர்கள் புரிந்தது போன்று தான் நாமும் புரிய வேண்டும் என்று கூறினால் அவர்கள் கூறும் சட்டத்தையே நாமும் கூற வேண்டும் என்பதே இதன் பொருள்.
அறிஞர்கள் கூறும் சட்டங்கள் எப்படி ஆதாரங்களுடன் இருந்தால் மட்டும் ஏற்கப்படுமோ அது போல் அவர்கள் செய்யும் அர்த்தம் அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில்அமைந்திருக்க வேண்டும். சட்டங்களில் எப்படி அறிஞர்கள் தவறிழைக்க வாய்ப்பு உள்ளதோ அது போல் அர்த்தம் செய்வதிலும் தவறிழைக்க வாய்ப்பு உண்டு.
எனவே எந்த அறிஞராக இருந்தாலும் அவர் செய்யும் அர்த்தம் சரியானதாக இருக்கவேண்டும். அரபு இலக்கண விதி கூறுவதற்கு முரணாக ஒரு அறிஞர்கள் அர்த்தம்செய்திருந்தால் அதுவும் நிராகரிக்கப்பட வேண்டும். இந்தச் சாதாரண உண்மை கூடதெரியாமல் அறிஞர்களுக்கு எந்த இலக்கண வரம்பும் கிடையாது; அவர்கள் விருப்பம் போல் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவீனமான வாதத்தை முன் வைக்கிறார்.
மேலும் அறிஞர்கள் விளங்கியது போன்று ஹபீப் என்ற பதத்தை நாம் விளங்க வேண்டும் என்ற வாதம் மத்ஹப் கொள்கையின் பக்கம் அழைத்துச் செல்லக் கூடியதாகும்.
அறிஞர்கள் ஹதீஸ்களைத் தவறுதலாகப் புரிந்து தவறான சட்டத்தை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதால் தான் அவர்களின் சட்ட சம்பந்தமான கூற்றுக்களை இவர்கள் உட்பட நாமும் ஆதாரமாக எடுப்பதில்லை.
அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்புகளில் தவறான முடிவை எடுப்பது சாத்தியம் என்றால் ஹதீஸில் கூறப்பட்ட ஒரு வார்த்தையைத் தவறுதலாக அவர்கள் விளங்கிவிடுவதற்கும் சாத்தியம் இருக்கத் தான் செய்கிறது.
ஒரு அரபுச் சொல் சம்பந்தப்பட்ட சட்டத்தை அரபு இலக்கணத்தைச் சுட்டிக் காட்டியே விளக்க வேண்டும். இதை விட்டுவிட்டு அரபு இலக்கணத்தை பீஜே அரைகுறையாக விளங்கினாரா? அல்லது அறிஞர்கள் விளங்கினாரா? என்ற கேள்வி ஆய்விற்கு அப்பாற்பட்டிருப்பதுடன் முட்டாள்தனமானது.
தங்களுடைய வாதங்கள் தோற்றுப் போகும் போது அசத்தியவாதிகள் கேட்கும் கேள்வியையே இவரும் கேட்டுள்ளார்.
அறிஞர்கள் செய்யும் அர்த்ததை நாமும் செய்ய வேண்டும் என்றால் மாற்றமாகவும் அறிஞர்கள் அர்த்தம் செய்துள்ளார்களே? அதை என்ன செய்யப்போகிறார்?
இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
قال أبو محمد هذا مجمل يجب أن يخص منه قول رسول الله صلى الله عليه وآله وسلم إن الذهب حرام على ذكور أمتي حلال لإناثها لأنه أقل لمعان منه ومستثنى بعض ما فيه
தனது ஹபீபிற்கு (நேத்திற்குரியவருக்கு) நெருப்பால் ஆன வளையத்தை அணிவிக்க விரும்புபவர் தங்கத்தால் ஆன வளையத்தை அணிவிக்கட்டும் என்ற ஹதீஸில் நேசத்திற்குரியவர் என்று மூடலாகவே கூறப்பட்டுள்ளது. தங்கம் அணியக் கூடாது என்று இதில் கூறப்படுகின்ற சட்டம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? என்ற விபரம் கூறப்படவில்லை.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராம். பெண்களுக்கு ஹலால் என்று வித்தியாசப்படுத்திக் கூறிவிட்டதால் ஹதீஸில் கூறப்பட்ட தங்கம் அணியக் கூடாது என்ற சட்டம் பெண்களைக் குறிக்காது. ஆண்களை மட்டுமே குறிக்கும் என்ற கருத்தில் இப்னு ஹஸ்ம் மேற்கண்ட அரபு வாசகத்தைக் கூறியுள்ளார்.
ஹபீப் என்ற வார்த்தை பெண்களை மட்டுமே குறிக்கிறது என இவர்கள் விளங்கியது போல் இப்னு ஹஸ்ம் விளங்கவில்லை. மாறாக இது ஆணையும் பெண்ணையும் குறிக்கின்ற மூடலான வார்த்தை என்றும் இந்த இடத்தில் அது ஆணை மட்டுமே குறிக்கும் என்றே கூறுகிறார். இப்னு ஹஸ்ம் அரபு மொழியில் திறன் பெற்ற சிறந்த அறிஞராவார். எனவே இவர் ஹபீப் என்ற வார்த்தையை விளங்கியது போல் இவர்கள் விளங்குவார்களா?
இப்படி தேவையில்லாத விஷயங்களில் நுழைந்து இவர்களுக்கு எதிரான ஆதாரங்களை இவர்களே நமக்கு எடுத்துத் தருகிறார்கள்.
குழப்பம் : 9
அத்துடன் குறித்த ஹதீஸ் பெண்களைத் தான் குறிக்கிறது என்பதை அறபு சமுதாய ஆண்கள் குறிப்பாக நபித்தோழர் சமூக ஆண்கள் இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் மாலை, காப்பு ஆகிய ஆபரனங்களை அணியும் வழக்கம் இருந்த்ததில்லை என்பதையும் ஆபரணங்கள் அணியும் வழக்கு அன்றிருந்த பெண்களிடம் தான் இருந்தது என்பதையும் அத்தியாயம் அஸ்ஸுஹ்ருஃப் (அலங்காரம்) பதினெட்டாம் வசனமான,
( أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين) ஆபரணங்களில் வளர்க்கப்படும், வழக்கை தெளிவாக எடுத்துரைக்கவும் முடியாத பெண்களையா (அவர்கள் அல்லாஹ்வுக்கென ஆக்குய்கிறார்கள்) என்ற வசனம் உறுதி செய்கிறது.
எனவே மேற்படி இலக்கண மற்றும் இலக்கிய சான்றுகளுடன் நோக்கும் போது கீழ் வரும் இவர்களது வார்த்தைகளுக்கு எந்த வித பெறுமானமும் கிடையாது.
நமது பதில் :
இந்த வாதமும் அறியாமையின் மீது எழுப்பப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றை அனுமதித்தால் அது அன்றைய அரபுகளிடம் வழக்கத்தில் இருக்க வேண்டும் என்பது உலகில் யாருமே இதுவரை கண்டு பிடிக்காத அற்புதக் கண்டு பிடிப்பாக உள்ளது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அன்றைய மக்களிடம் வழக்கத்தில் உள்ளதா இல்லையா என்று பார்த்து சட்டம் சொல்ல மாட்டார்கள். வழக்கத்தில் இருக்கலாமா கூடாதாஎன்பதைத் தான் அவர்கள் பார்ப்பார்கள். வழக்கத்தில் உள்ளபடி நடக்கலாம் என்றால் தூதருக்கு ஒரு வேலையும் இல்லை. அன்றைய அரபுகளிடம் வழக்கத்தில்இல்லாவிட்டாலும் அனுமதிக்கப்பட்டவைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்சொல்லியாக வேண்டும்.
செருப்பு போட்டு இறைவனை வணங்கும் வழக்கம் அந்த மக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தும் செருப்பு அணிந்து தொழலாம் என்று அனுமதிக்கவில்லையா? நபிகள்நாயகம் காலத்தில் இந்த வழக்கம் இல்லாததால் இது ஹதீஸ் இல்லை என்று இவர்கூறினாலும் கூறுவார்.
நபிகள் நாயகம் காலத்தில் வழக்கத்தில் இருப்பதோ இல்லாமல் இருப்பதோ பிரச்சனை இல்லை. அனுமதி அளித்தார்களா இல்லையா என்பது தான் பிரச்சனை.
(நபிகள் நாயகம் காலத்தில் ஆண்கள் நகை அணியும் வழக்கம் இருந்தது என்பது தனி விஷயம்)
குழப்பம் : 10
அடுத்து இன்னுமொரு இலக்கண ரீதியான தவறான ஒரு விளக்கத்தையும் தொடர்ந்து எழுதுகிறார்கள்.
அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும் ஹா என்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல் ஹுஎன்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.
அதாவது இந்த இடத்தில் அவளுக்கு என பெண்பால் பிரதிப் பெயர்ச் சொல்லுக்கு அறபியில் பயன்படுத்தும் ஹா பயன்படுத்தப்படாமல் அவனுக்கு என்பதைக் குறிக்கும்ஹூ என்பது பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஹதீஸ் ஆணையே குறிக்கிறது என்பது இவர்களது (தவறான) விளக்கமாகும்!!.
காரணம் அறபு மொழியில் ஒரு சொல்லின் கருத்தைக் கவனத்திற் கொண்டு அதன் பிரதிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்துவதும் அல்லது அந்த சொல்லின் கட்டமைப்பைக் கவனத்திற் கொண்டும் அதன் பிரதிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்துவதும் சர்வ சாதாரணமாகும்.
உதாரணமாக, ஸூறா யூஸுபின் وجاءت سيارة فأرسلوا واردهم என்ற பத்தொன்பதாவது வசனத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பிரயாணக் கூட்டம் வந்தது என சொல்லின் கட்டமைப்பைக் கருத்திற் கொண்டு அஃறினையாக (அறபு மொழியில் பெண்பால் ஒருமையில்) பயன்படுத்திய அல்லாஹ் அதே தொடரில் அவர்கள் தங்களது தண்ணீர் பிடித்துவருபவரை அனுப்பினார்கள் என அந்த சொல் குறிக்கும் கருத்தைக் கவனத்திற் கொண்டு ஆண்பால் பன்மையில் பயன் படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.
நமது பதில் :
ஒரு வார்த்தையின் கருத்தைக் கவனித்து அதற்குரிய பிரதிப் பெயர்ச்சொல்லைக் குறிப்பிடுவதும் அவ்வார்த்தையின் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு அதனுடைய பிரதிப்பெயர்ச்சொல்லைக் குறிப்பிடுவதும் அரபுமொழியில் இருக்கத் தான் செய்கிறது. இதை நாம் மறுக்கவில்லை.
ஆணைக் குறிக்கின்ற ஒரு வார்த்தையைப் பெண்ணைக் குறிக்க பயன்படுத்துவதாக இருந்தால் நாடப்படுபவர் பெண் தான் என்பதை உணர்த்தும் வகையில் வாக்கியத்தில் ஏதாவது சான்று இருக்க வேண்டும்.
இது போன்ற ஒரு வார்த்தையின் பிரதிப் பெயர்ச்சொல் பெண்பாலாக வந்திருந்தால் அவ்வார்த்தை பெண்ணையே குறிக்கிறது என முடிவு செய்வதற்கு இந்த பெண்பால் பிரதி பெயர்ச்சொல்லே போதுமான சான்றாகிவிடும்.
ஆனால் ஹதீஸ் இந்தச் சான்றுக்கும் இடம் தராமல் அமைந்துள்ளது என்பதே நமது வாதம்.
இவர்கள் சுட்டிக்காட்டிய ஒரு கவிதை வரியை இவர்களின் இக்கேள்விக்கு பதிலாகத் தருகிறோம்.
مَنَعَ النَّوْمَ بِالْعِشَاءِ الْهُمُومُ … وَخَيَالٌ إِذَا تَغَارُ النُّجُومُ
مِنْ حَبِيبٍ أَصَابَ قَلْبَكَ مِنْهُ سَقَمٌ … فَهُوَ دَاخِلٌ مَكْتُومٌ
அள்வாஉல் பயான் நூலின் ஆசிரியர் இக்கவிதையில் கூறப்பட்ட ஹபீப் என்பது பெண்ணைத் தான் குறிக்கிறது என்பதை இவர்களைப் போன்று ஆதாரமில்லாமல் கூறவில்லை.
وَمُرَادُهُ بِالْحَبِيبِ أُنْثَى ; بِدَلِيلِ قَوْلِهِ بَعْدَهُ :
لَمْ تَفُتْهَا شَمْسُ النَّهَارِ بِشَيْءٍ … غَيْرِ أَنَّ الشَّبَابَ لَيْسَ يَدُومُ
மாறாக ஹபீபின் பிரதிபெயர்ச்சொல் ஹா என்று பெண்பாலாக வந்திருப்பதையே ஹபீப் என்ற வார்த்தை பெண்ணைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரமாகக் காட்டினார்.
இக்கவிதையில் இந்த ஆசிரியர் ஆதாரத்துடன் நிரூபித்ததைப் போன்று இவர்கள் நிரூபிக்கவில்லை. நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸில் இல்லை என்பதை உணர்த்தவே மேற்கண்டவாறு எழுதியிருந்தோம். இதை இவர் புரிந்து கொள்ளாமல் வேறொரு இலக்கண விதிக்குத் தாவிவிட்டார்.
குழப்பம் : 11
அடுத்து ஆய்வாளர்!! அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும் கும் என்ற் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும்குன்ன என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை. என வாதிட முற்படுவதும் தவறாகும்.
காரணம் இந்த ஹதீஸ் பெண்களுக்குத் தங்க நகையை வழங்குபவர்கள், அன்பளிப்புச் செய்பவர்கள், அணிவித்து விடுபவர்கள் ஆண்கள் என்பதைக் கருத்திற் கொண்டு கூறப்பட்டதாகும் என்ற விபரம் ஹதீஸிலேயே தெளிவாக உள்ளதால் ஆண் பால் முன்னிலைப் பண்மையைக் குறிக்கும் பிரதிப் பெயர்ச் சொல்லான கும் அறபி வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.
அத்துடன் பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பே ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதுடன் عليكم என்ற வார்த்தையில் தொக்கி நிற்கும் ஏவல் பயன் படுத்துங்கள் (அணியுங்கள் ) என்பதல்ல அணிவியுங்கள் என்பதே என்ற விபரத்தையும் ஹதீஸின் ஆரம்பவரிகளான அணிவிக்கட்டும் என்ற பதம் உணர்த்துகிறது.
நமது பதில் :
மாறாக வெள்ளியை உங்களுக்கு ஏவுகிறேன் என்ற வாக்கியத்தில் கூறப்பட்ட உங்கள் என்பது ஆண்களைத் தான் குறிக்கும் என்பதை இவர் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் ஹதீஸில் பயன்படுத்துங்கள் என்ற வார்த்தை இல்லை என்று கூறுகிறார்.
இவர்களது அமைப்பில் முன்னால் பிரச்சாரராக இருந்த ஸஹ்ரான் பயன்படுத்துங்கள் என்றே மொழிபெயர்த்திருந்தார். ஆனால் இதை இவர்கள் மறுக்கிறார்கள்.
ஹதீஸில் உங்களுக்கு வெள்ளியை ஏவுகிறேன் என்பதைத் தொடர்ந்து எனவே அதன் மூலம் விளையாடிக் கொள்ளுங்கள் என்றும் கூறப்படுகிறது.
وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا
உங்களுக்கு என்ற வார்த்தை ஆண்களைக் குறிக்கும் என்றால் விளையாடிக் கொள்ளுங்கள் என்ற கட்டளையும் ஆண்களையே குறிக்கிறது. வெள்ளியை வைத்து விளையாடிக் கொள்ளுங்கள் என்ற வாசகம் ஆண்கள் வெள்ளியை அணிந்து கொள்ளலாம் என்பதையே காட்டுகிறது.
எனவே வெள்ளியை மட்டுமே ஆண்கள் அணிந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து தங்கம் அணியக் கூடாது என்ற தடை இந்த ஹதீஸில் ஆண்களுக்குத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் ஹபீப் என்ற வார்த்தை ஆணையே குறிக்கிறது என்பதும் மேலும் தெளிவாகிறது.
ஹபீப் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் ஆணையே குறிக்கிறது என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம். ஒரு ஆணுக்குத் தங்க ஆபரணத்தை அணிவிக்கக் கூடாது என்றால் அதைத் தானும் அணிந்து கொள்ளக் கூடாது. தான் எதை அணியலாமோ அதை அடுத்த ஆணுக்கு அணிவிப்பதில் தவறில்லை.
அணிவதற்கும் அணிவிப்பதற்கும் இடையே பொருள் ரீதியில் ஒரு வித்தியாசம் இருந்தாலும் இவ்விரண்டிற்கும் உரிய சட்டம் ஒன்று தான். எனவே உங்களுக்கு வெள்ளியை ஏவுகிறேன் என்ற வாசகம் அணிவதைக் குறிக்கவில்லை. அணிவிப்பதையே குறிக்கிறது என தேவையற்ற வித்தியாசத்தை காண்பிக்கக் கூடாது.
குழப்பம் : 12
மேற்படி ஹதீஸ் பெண்கள் தங்க நகை அணிவது பற்றித் தான் பேசுகிறது என்பதைத் தக்க சான்றுகளுடன் ஏற்கனவே நிரூபித்து விட்டோம்.
ஆனால் இல்லை இந்த ஹதீஸ் பெண்கள் தங்க நகை அணிவது பற்றிப் பேசவில்லை என தவறாக வாதிட முற்பட்டவர் கூறும் முடிவைப் பாருங்கள்.
ஆண்கள தங்க நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. என்ற வார்த்தையின் படி ஆண்கள் ஹதீஸில் கூறப்பட்ட வெள்ளி நகைகளான காப்பு!!, மாலை!!! மற்றும் வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்கள் செய்து) விளையாடுங்கள் என்ற வழிகாட்டலும் ஆண்களையே குறிக்கிறது என்ற இவர்களது ஆய்வின் முடிவின் படி கொலுசு!!, காதணி என்பதெல்லாம் ஆண்கள் அணிந்து திருநங்கைகள் போல் திரியலாம் என்பது தான் இவர்களது ஆய்வின்!!!? சுருக்கம்.
நமது விளக்கம் :
இவர் ஹதீஸின் அடிப்படையில் வாதிடாமல் மனோ இச்சை அடிப்படையில் வாதிடுகிறார்என்பது இந்த வாதத்தில் இருந்து உறுதியாகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஒன்றைஅனுமதித்து இருக்கிறார்களா இல்லையா என்பது தான் நாம் கவனிக்க வேண்டியவை.இதைச் செய்தால் திரு நங்கைகள் போல் திரிய வேண்டிய நிலை வரும் என்றுவாதிடுவதில் இருந்து இது உறுதியாகிறது. நபிகள் நாயகம் அவர்கள் ஒன்றைஅனுமதித்தாலும் இவரது மனோ இச்சைக்கு ஒப்ப இருந்தால் தான் ஏற்றுக் கொள்வார்போலும்.
ஏனென்றால் தங்க வளையத்தை அதாவது மோதிரத்தை ஆண்கள் அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள் பக்கமாக அமையும்படி) வைத்துக் கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து) கொண்டார்கள். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் தமது தங்க மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள்.
புகாரி (5865)
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தமது கையில் தங்க மோதிரம் அணிந்திருப்பதைக் கண்ட போது, அதைக் கழற்றச் செய்து தூக்கியெறிந்தார்கள். பிறகுஉங்களில் ஒருவர் (நரக) நெருப்பின் கங்கை எடுத்து, அதைத் தமது கையில் வைத்துக் கொள்கிறார் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு அந்த மனிதரிடம், உமது மோதிரத்தை(க் கழற்றி) எடுத்து நீ (வேறு வகையில்) பயனடைந்துகொள்என்று கூறப்பட்டது. அவர், இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீசியெறிந்துவிட்டதை அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு போதும் நான் எடுக்க மாட்டேன்என்று சொல்லி விட்டார்.
முஸ்லிம் (4243)

நபிகள் நாயகம் ஸல் அவர்களும் அவர்களின் தோழர்களும் வெள்ளி மோதிரம் அதாவது வளைந்த வடிவிலான நகை அணிந்துள்ளார்களே அவர்கள் திருநங்கைகள் என்று இவர் கூறாமல் கூறுகிறார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, அதை ஊதி விடுவீராக!என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய் விட்டன. நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கின்ற (தம்மை இறைத் தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலமாவாகவும் அமைந்தார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி (3621)
இன்னும் சில அறிவிப்புகளில் தங்கக் காப்புகளை நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்தவாறு கனவு கண்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தம்மை திருநங்கையாக கனவில் கண்டார்கள் என்று இந்த அறிவாளி கூறினாலும் கூறுவார்.
மேலும் சொர்க்கவாசிகளுக்கு அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மறுமையில் தங்கக் காப்புகளும் வெள்ளிக்காப்புகளும் அணிவிக்கப்படும் என்று குர்ஆன் கூறுகிறது.
அவர்களுக்கு நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள ஆசனங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.
அல்குர்ஆன் (18 : 31)
அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான்.
அல்குர்ஆன் (76 : 21)
இந்த உலகத்தில் மனிதன் எதையெல்லாம் விரும்புகின்றானோ அந்த இன்பங்கள் மறுமையில் கிடைக்கும் என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தான் இறைவன் சொர்க்கத்து பாக்கியங்களை விவரிக்கின்றான். அப்படியானால் சொர்க்கத்தில் அனைவரும் திரு நங்கைகளாகி விடுவார்களா?
மேலும் கழுத்து மாலையைச் சிறுவர்களுக்கு அதாவது ஆண் குழந்தைகளுக்கு அணிவித்துவிடும் வழமை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்துள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (பனூ கைனுகா கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குள் செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) பொடிப் பையன் எங்கே? என்று மும்முறை கேட்டார்கள். பிறகு அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களுடைய புதல்வர் ஹசன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தமது கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹசன் (ரலி) அவர்களும் இவ்வாறு தமது கையை விரித்த படி நபி (ஸல்) அவர்களை அணைத்திட அவர்களை நோக்கி வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை அணைத்துக் கொண்டு, இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.
புகாரி (5884)
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பில் ஃபாத்திமா (ரலி) அவர்களே இதை ஹசன் (ரலி) அவர்களுக்கு அணிவித்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே கழுத்து மாலையை ஆண்கள் அணியும் வழக்கமும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.
அப்படியானால் ஹஸன் ரலி திரு நங்கை என்று சொல்லப் போகிறாரா?
நபி (ஸல்) அவர்களின் போதனை அன்றைய காலத்திற்கு மட்டுமல்ல எல்லாக் காலத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியவை. ஹதீஸில் கூறப்பட்ட தங்க வளையம் (மோதிரம்) தங்கக் காப்பு தங்கச் சங்கிலி இவை மூன்றையும் நமது காலத்தில் ஆண்கள் அணிவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதைத் தான் இந்த ஹதீஸ் கண்டிக்கிறது. இந்த அளவிற்குக் கச்சிதமாக இந்த ஹதீஸ் ஆண்களுக்குப் பொருந்துவதால் இது பெண்களை மட்டுமே குறிக்கிறது என்ற இவர்களின் வாதம் அடியோடு சாய்கிறது. 
அதுமட்டுமின்றி தற்காலத்தில் நடைமுறையிலும் இம்மூன்று ஆபரணங்கள் ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவான அணிகலன்களாகவே உள்ளன.
எனவே இவற்றை அணிந்தால் இவர்கள் கூறுவது போல் பெண்களுக்கு ஒப்பாகும் நிலை ஏற்படாது. திருநங்கைகள் போல் திரிய வேண்டிய நிலையும் ஏற்படாது.
இதைப் புரிந்து கொள்ளாத இவர்கள் நமது ஆய்வை விகாரப்படுத்தும் விதத்தில் கொலுசு காதணி போன்றவற்றை அணியலாம் என்று நாம் கூற வருவது போல் பொய்யான தோற்றத்தைச் சித்தரிக்கிறார்கள்.
இவ்வாறு நாம் கூறவில்லை. கொலுசு காதணி ஆகிய ஆபரணங்கள் ஹதீஸில் கூறப்படவில்லை. அத்துடன் இவை பெண்களுக்கு மட்டும் உரிய அணிகலன்களாக இருக்கின்றன.
பெண்களுக்கு ஒப்பாக நடக்கக் கூடாது என்று மார்க்கம் உத்தரவிட்டுள்ளது. எனவே வெள்ளியில் அணிகலன்களைச் செய்து விளையாடுங்கள் என்ற கட்டளையை இதற்கு முரண் இல்லாத வகையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஆபரணத்தை ஆண் அணியும் போது அது வெள்ளியாக இருந்தாலும் பெண்ணுக்கு ஒப்பாக நடக்கும் சூழ்நிலை உருவானால் அதை அவன் அணியக் கூடாது. அதே நேரத்தில் பெண்ணுக்கு ஒப்பாகாத வகையில் வெள்ளியில் அவன் எந்த வகையான ஆபரணத்தையும் அணியலாம். உதாரணமாக மோதிரம் சங்கிலி காப்பு பிரஸ்லெட் (கைச் சங்கிலி) போன்றவை.
இவ்வாறு முறையான அடிப்படையில் புரிவதை விட்டுவிட்டு அநாகரீகமாகச் சிந்தித்து அச்சிந்தனையை நமது சிந்தனை போல் காட்டுகிறார்கள்.
குழப்பம் : 13
உன்மையில் இந்த இடத்தில் குறித்த அறிவிப்பாளரான அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் என்பவர் இமாம் புஹாரி அவர்களின் ஸஹீஹுல் புஹாரியின் அறிவிப்பாளர்களில் ஒருவராவார். இவர் அறிவிக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் புஹாரியில் மாத்திரமே இடம்பெறுவதைப் பார்க்கிறோம். ஏன் அதில் சில ஹதீஸ்களை இவர்களே தங்களது பேச்சுகளிலும் எழுத்துகளிலும் பயன் படுத்தியுள்ளார்கள். எனவே ஆழம் தெரியாமல் காலை விட்ட இவர்கள் குறித்த அறிவிப்பாளர் பலவீனமானவர் தான் என்பதை திட்டவட்டமாக அறிவிக்கட்டும். அப்போது இது பற்றி மேலதிகமாக நாம் விரிவாக விளக்குவோம். குறித்த விடயம் நேரடியாகவே எமது தலைப்புடன் சம்பந்தப் படாததால் இந்த இடத்தில் இந்த அளவுடன் மட்டும் சுருக்கிக் கொள்கிறோம்.
அடுத்து ஆய்வாளர்!! இவ்வாறு கூறுகிறார்
ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆனணக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா எனற் சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது.
மேற்படி வாதமும் தவறானது. காரணம் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் ஹபீப் எனும் வார்த்தையே பெண்களைக் குறிக்கும் என்பதை நாம் நிரூபித்து விட்டதால் இந்த அறிவிப்பும் அதே கருத்தை வலியுறுத்துவதால் இரண்டு அறிவுப்புகளுக்குமிடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என்பதே உண்மையாகும்.
நமது பதில் :
ஹபீபதஹு (தனது பிரியமானவளுக்கு) என பெண்பாலில் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் என்பவரை நாம் குறை கூறியிருந்தோம். ஆனால் இவரது அறிவிப்புக்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்பது இவரது நிலைபாடு.
இவர் பலவீனமானவர் தான் என திட்டவட்டமாக நாம் அறிவிக்க வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கிறார்.
அப்துர் ரஹ்மானைப் பொறுத்தவரை இவரது நம்பகத்தன்மையில் குறை இல்லை. எனவே தான் இமாம் அலீ பின் மதீனீ அவர்கள் இவரை சதூக் அதாவது நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இதில் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் ஒரு அறிவிப்பாளர் ஆதாரத்திற்குத் தகுதியானவர் என்றால் அவரிடம் நம்பகத்தன்மை இருப்பதுடன் அவர் சரியான மனனத்தன்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
இவர் சரியான நினைவாற்றல் உள்ளவர் என்று எந்த அறிஞரும் இவருக்குச் சான்றளிக்கவில்லை. மாறாக இவரது நினைவாற்றலில் குறை கூறும் விதமாகவே இமாம்களின் விமர்சனம் அமைந்துள்ளது.
இமாம் யஹ்யா பின் முயீன் இவரது செய்தியில் பலவீனம் உள்ளது என்று கூறுகிறார். இமாம் இப்னு அதீ இவரது செய்தியை எழுதிக் கொள்ளலாம். ஆனால் ஆதாரமாக எடுக்க முடியாது என்று கூறுகிறார். இமாம் இப்னு ஹிப்பான இவர் தனது அறிவிப்புக்களில் மோசமான தவறுகளைச் செய்யக் கூடியவர் என்று கூறுகிறார். இமாம் தஹபீ அவர்கள் இவரைப் பலவீனமானவர்களின் பட்டியலில் கொண்டு வந்துள்ளார்.
இவர் ஒரு ஹதீஸில் கூடுதலாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்ட போது அதை இமாம் தாரகுத்னீ அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
எனவே இமாம் புகாரி அவர்களைத் தவிர்த்து பல அறிஞர்கள் இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றே கூறியுள்ளனர். இவர் விஷயத்தில் இமாம் புகாரி அவர்கள் மட்டும் அறிஞர்களுக்கு மாற்றமான முடிவை எடுத்துள்ளார் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறுகிறார்கள்.
சில பலவீனமான அறிவிப்பாளர்கள் புகாரியில் இருப்பது போல் இந்த அறிவிப்பாளரும் புகாரியில் இடம் பெற்றுள்ளார். இவர் தொடர்பாக அறிஞர்கள் கூறிய விமர்சனங்களின் சுருக்கத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறும் போது இவர் நம்பகமானவர் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
எனவே இவர் ஒரு விஷயத்தைத் தனித்து அறிவித்தால் அதை ஏற்கக் கூடாது என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். குறிப்பாக நம்பகமானவர்கள் ஒருவாறு அறிவித்திருக்க இவர் அதற்கு மாற்றமாக அறிவித்தாலோ அல்லது கூடுதலான வார்த்தைகளைக் குறிப்பிட்டாலோ இவர் மாற்றமாகவும் வேறுபட்டும் அறிவித்திருப்பதே இவர் தவறிழைத்துள்ளார் என்பதை உறுதி செய்யும்.
ஹபீப் என்ற வாசகம் இடம் பெற்ற ஹதீஸை அசீத் என்பவரிடமிருந்து அப்துர் ரஹ்மானாகிய இவரும் அப்துல் அஸீஸ் மற்றும் ஸுஹைர் ஆகிய மூவர் அறிவிக்கிறார்கள். அப்துல் அஸீஸ் ஸுஹைர் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மானை விட உறுதியானவர்கள்.
இவ்விருவரும் இவர் கூறியது போன்று ஹபீபா என பெண்பாலில் கூறாமல் ஹபீப் என்று ஆண்பாலிலேயே கூறியுள்ளனர். (ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்பது ஆணையே குறிக்கிறது என்பதை மேலே நாம் நிரூபித்திருக்கிறோம்.)
அப்துர் ரஹ்மான் இவ்விருவருக்கும் மாற்றமாக அறிவித்துள்ளார். தகவலில் தவறு செய்தது போல் அறிவிப்பாளர் தொடரிலும் தவறு செய்துள்ளார்.
மற்ற இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉம், நாஃபிஉவிடமிருந்து அசீதும் அறிவிப்பதாக கூறுகின்றனர். ஆனால் அப்துர் ரஹ்மான் இவர்களுக்கு மாற்றமாக சனதையே மாற்றி அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து அவரது மகன் அறிவிப்பதாக அல்லது அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அவரது மகன் அறிவிப்பதாக சந்தேகத்துடன் கூறி முரண்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பாளர் தொடரில் இவருக்கு ஏற்பட்ட இத்தடுமாற்றங்கள் இவர் இச்செய்தியைச் சரியான அடிப்படையில் அறிவிக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்கிறது.
அசீத் இச்செய்தியைக் கேட்டது இப்னு அபீ மூசாவிடமா? அல்லது இப்னு அபீகத்தாதாவிடமா? என்ற சந்தேகம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. இப்னு அபீ மூசாவும் இப்னு அபீ கத்தாதாவும் நம்பகமானவர்களாக இருந்தால் இந்தச் சந்தேகத்தால் இந்தச் செய்திக்கு எந்தப் பாதிப்பும் வராது.
ஆனால் இப்னு அபீ மூசாவைப் பொறுத்த வரை அவர் நம்பகமானவர் என்று அறிஞர்கள் உறுதி செய்யவில்லை. எனவே இவர் பலவீனமானவர் ஆவார். இச்செய்தியை அறிவித்தவர் இப்னு அபீ கத்தாதா என்ற நம்பகமானவரா? அல்லது இப்னு அபீ மூசா என்ற பலவீனமானரா? என்ற சந்தேகம் வந்துள்ளதால் இதனடிப்படையிலும் இச்செய்தி நம்பகத்தன்மையை இழக்கிறது.
மொத்தத்தில் இச்செய்தி தவறானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது. எனவே இதை வைத்து பெண்கள் தங்கம் அணியக் கூடாது என இவர்கள் வாதிட்டது தவறாகும்.
குழப்பம் : 14
அடுத்து எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. என்ற இவரது கூற்றுக்கும் எந்தவித அர்த்தமுமில்லை. நாம் தங்க வளையல் நகை பெண்கள் அணியக் கூடாது என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைத்த ஹதீஸ்ளுக்கு இவர்கள் அளித்த விளக்கங்கள் தான் தவறு என்பதால் பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற பொதுவான ஹதீஸை வளையல் நகை கூடாது என்ற குறிப்பான ஹதீஸுடன் சேர்த்தே அமுல்படுத்த வேண்டும் என்பது தான் உன்மையும் யதார்த்தமுமாகும்.
நமது பதில் :
நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கின்ற அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி வளையம் காப்பு மாலை ஆகிய மூன்று மட்டும் கூடாது என்று கூறுவதாக இவர் சொல்கிறார். எனவே இதை குறிப்பான செய்தி என்றும் பெண்களுக்கு தங்கம் ஹலால் என்ற செய்தி பொதுவானது என்றும் கூறி பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் இந்த ஹதீஸ் குறிப்பானதில்லை. இந்த மூன்று மட்டுமே பெண்களுக்கு ஹலால் என்ற கருத்து ஹதீஸில் இல்லவே இல்லை. மாறாக பொதுவாக எந்த வடிவத்திலும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்ற கருத்தையே இந்த ஹதீஸ் கூறுகிறது.
காணரம் நபி (ஸல்) அவர்கள் இந்த மூன்று வடிவங்களைக் கூறி தமது பேச்சை முடித்துக் கொள்ளவில்லை. எதை அணியலாம் என்ற வழிகாட்டலையும் சேர்த்துக் கூறுகிறார்கள். அதாவது தங்கத்திற்கு மாற்றுவழியாக வெள்ளியை உங்களுக்கு ஏவுகிறேன் என்று கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ள இந்த மாற்றுவழி தங்கம் முழுவதும் கூடாது என்பதையே காட்டுகிறது. இவர்கள் கூறுவது போல் குறிப்பிட்ட மூன்று வடிவங்கள் மட்டுமே தடை என்றால் இம்மூன்று அல்லாத வேறு வடிவங்களில் தங்கத்தை அணியலாம் என்று கூறியிருப்பார்கள்.
எனவே இது குறிப்பான ஹதீஸ் என்ற இவர்களின் வாதம் தவறு. இவர்கள் கருத்துப்படி பெண்கள் தங்கம் அணியக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸ் தந்தால் பெண்கள் தங்கம் அணிவதை அனுமதிக்கின்ற ஹதீஸ்களுடன் இது மோதவே செய்கிறது.
நமது கருத்துப்படி இது ஆண்கள் தங்கம் அணிவதையே தடுக்கிறது என்று கூறினால் மற்ற எந்த ஆதாரத்துடன் இச்செய்தி மோதும் நிலை ஏற்படாது. மாறாக மற்ற ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது.
குழப்பம் : 15
எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.
அதாவது, ஏதோ அறிவுபூர்வமான வாதம் ஒன்றை முன்வைப்பது போல் தங்கம் பெண்களுக்கு ஹலால் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்ற வரட்டுத் தத்துவம் தான் அது.
இந்த வாதத்தின் அபத்தத்தை அறிய பின்வரும் நபிமொழியைக் கவனியுங்கள்
صحيح مسلم جزء 3 – صفحة 1634 
وحدثني زيد بن يزيد أبو معن الرقاشي حدثنا أبو عاصم عن عثمان ( يعني ابن مرة ) حدثنا عبدالله بن عبدالرحمن عن خالته أم سلمة قالت :قال رسول الله صلى الله عليه وسلم : من شرب في إناء من ذهب أو فضة فإنما يجرجر في بطنه نارا من جهنم
யார் தங்க, வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துகிறாரோ அவர் நரக நெருப்பை தனது வயிற்றில் வார்த்துக் கொள்கிறார்.
அறிவிப்பாளர்: உம்மு ஸலமா(ரழி)
ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்
ஆக பெண்களுக்கு தங்கம் அனுமதி என்பதால் அது எந்த வடிவில் இருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறும் இவர்கள் பெண்களுக்குத் தங்க வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிப்பதற்கும் அனுமதிப்பார்களா அல்லது அந்த ஹதீஸ் பொதுவானது இந்த ஹதீஸ் பாத்திர வடிவங்களைப் பற்றி குறிப்பானது எனக் கூறி பாத்திர வடிவங்கள் கூடாது என்று கூறப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எனவே குழப்பங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்ற பேரில் ஹதீஸின் போதனைகளுக்கெதிராக மனோ இச்சைப்படி வாதம் எழுப்புபவர்கள் முஃதஸிலா வகையறாக்களை விட சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
ஆனால் எம்மைப் பொறுத்தவரை அனைத்தும் நபி(ஸல்) அவர்களது ஹதீஸ்கள் தான்,வழிகாட்டல் தான் என்ற அடிப்படையில் பொதுவாக இடம் பெற்றுள்ள பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப் பட்டுள்ளது என்ற ஹதீஸை ஏற்றுக்கொள்வதுடன், முன்னர் குறிப்பிட்ட பாத்திர வடிவ ஹதீஸை வைத்து பெண்களுக்கு தங்கம் பாத்திர வடிவில் இருந்தால் கூடாது என்றுதான் அது தொடர்பான குறிப்பான ஹதீஸ் இடம் பெற்றிருப்பதால் கூறுகிறோம். அப்படித் தான் சகல அறிஞர்களும் இயக்க, மத்ஹபு வேறுபாடுகளுக்கும் அப்பால் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் இதே முறையில் விளங்க வேண்டிய, அமுல் படுத்த வேண்டிய வளையல் நகை ஹதீஸ்களுக்கு மாத்திரம் தவறான விளக்கங்கள் கொடுக்க முற்பட்டு தடுமாறுகிறார்கள்.
ஆக இவர்களது இரண்டாவது தொடரின் அடிப்படை வாதமான ஹபீப் என்ற பதத்திற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம் என்ற வாதத்தின் பலவீனத்தை இவர்களே உணர்ந்ததன் காரனமாக புதிதாக இரண்டு ஹதீஸ்களை எடுத்து வைத்துள்ளார்கள்.
நமது பதில் :
தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகுவது கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது. இந்தச் செய்தி தங்கம் அணிவதைப் பற்றிப் பேசவில்லை. மாறாக தங்கப் பாத்திரத்தில் பருகுவதைப் பற்றியே பேசுகிறது. மேலும் இத்தடை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுவான தடையாகவும் உள்ளது.
ஆனால் எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸில் தங்கத்துடன் சேர்த்து பட்டும் கூறப்பட்டுள்ளது. பட்டை அணியத் தான் முடியும். அதில் யாரும் உண்ணவோ பருகவோ மாட்டார்கள். எனவே இந்த ஹதீஸ் தங்கத்தையும் பட்டையும் அணிவதைப் பற்றியே பேசுகிறது என்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
மேலும் இச்செய்தியில் தங்கம் ஆண்களுக்கு ஹராம் என்றும் பெண்களுக்கு ஹலால் என்றும் வெவ்வேறு சட்டம் கூறப்படுகிறது. ஆனால் தங்கப் பாத்திரத்தில் பருகக் கூடாது என்ற கட்டளை ஆண் பெண் இருபாலருக்கும் உரியது.
எனவே இந்த ஹதீஸ் தங்கம் அணிவது தொடர்பானது. இவர்கள் சுட்டிக்காட்டிய செய்தி தங்கப் பாத்திரத்தில் பருகுவது தொடர்பானது. இவ்விரண்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசும் இரு செய்திகளில் ஒன்றை இன்னொன்றிலிருந்து எப்படி விதிவிலக்கு செய்ய முடியும்?
இரண்டும் ஒரே அம்சத்தைப் பற்றி பேசும் போது அதில் ஒன்று பொதுவானதாகவும் மற்றொன்று குறிப்பானதாகவும் இருந்து அவையிரண்டும் முரண்பட்டாலே பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்குச் செய்ய முடியும்.
ஆனால் இங்கு இவை இரண்டும் ஒரே அம்சத்தைப் பற்றி பேசவில்லை. ஒன்று குறிப்பாகவும் இன்னொன்று பொதுவானதாகவும் அமையவில்லை. இவை இரண்டும் முரண்படவும் இல்லை. இந்நிலையில் பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்கு செய்ய வேண்டிய அவசியம் இங்கு ஏற்படவே இல்லை. இதைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்குத் தர வேண்டும் என்ற விதியில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்விதி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிற்கும் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று கூறும் ஹதீஸிற்கும் பொருந்தவில்லை என்பதே நமது நிலைபாடு.
காரணம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி குறிப்பானதில்லை. பொதுவானது தான் என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம்.
குழப்பம் : 16
யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.
இங்கு இவர்கள் குறிப்பிட்டுள்ள முதலாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை என்ன,எந்த கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இல்லாமல் இவர்கள் வெறுமனே குறிப்பிட்டுள்ளதால் நாமும் அவை பற்றிய விரிவான விளக்கத்துக்குள் நுழையாமல் இரு ஹதீஸ்களுக்கும் சேர்த்தே ஒரு பொதுவான விளக்கத்தை அளிக்கிறோம்.
மேற்படி இரு ஹதீஸ்களும் கூறுவதன் சுருக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தங்க வளையல் நகைகளை அணிந்துள்ளார்கள் என்பதுதான்.
மேற்படி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தங்க நகைகள் அணிந்துள்ளார்கள் என்ற செய்தி தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்று இவர்கள் தங்களது முதல் தொடரிலே எடுத்துவைத்த (தவறான) வாதத்துடன் முரண்படுகிறதே என்று இவர்களிடம் நாம் கேட்டால் இது தடை நீக்கப் பட்டதற்கு பிந்தைய காலத்துக்குரியது என்ற பதிலைத் தான் சொல்வார்கள்.
அதே போல் தான் நாமும் மேற்படி ஹதீஸ்கள் பெண்களுக்கு தங்கம் பொதுவாக அனுமதிக்கப் பட்டிருந்த, வளையல் நகை தடை செய்யப்படுவதற்கு முன்னுள்ள காலத்துக்குரியது என்று கூறுகிறோம்.
இது தொடர்பாக மேலதிக வாதங்களை முன்வைத்தால் சட்டக் கலையில் இரு ஆதாரங்கள் முரண்படும் போது எவ்வாறு அணுக வேண்டும் என்ற தலைப்பில் விரிவாக விளக்குவோம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
நமது பதில் :
பெண்கள் தங்கம் வைத்திருப்பது கூடாது என்ற கருத்தை தற்போதும் நாம் கூறுவது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஆரம்பத்தில் இருந்து பின்பு மாற்றப்பட்டு விட்டது என்றே கூறுகிறோம்.
தங்கம் வளையமாக இருந்தாலும் பெண்கள் அதை அணியலாம் என்று மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இரு ஹதீஸ்கள் கூறுகிறது. இந்த அனுமதி முன்னர் பிறப்பிக்கப்பட்ட தடைக்குப் பிந்தியது என்றே பதில் கூறுவோம். இவ்வாறு பதில் கூறுவதற்கு நமக்குத் தார்மீக உரிமை உள்ளது.
ஏனென்றால் தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பது கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தை நாம் யூகமாகக் கூறவில்லை. மாறாகத் தக்க ஆதாரங்களுடன் தெளிவாக முந்தைய தொடரில் விவரித்திருக்கிறோம். எனவே இவ்வாறு பதிலளிப்பதற்கு நமக்கு உரிமை உண்டு.
ஆனால் ஆரம்பத்தில் பெண்கள் தங்கம் அணிவதற்கு அனுமதி இருந்தது. பின்னர் இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு தங்கம் அணியக் கூடாது என்று கூறப்பட்டது என்று இவர்கள் கூறுவதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்டவில்லை.
நமது வாதத்திற்கு ஒரு நபித்தோழரின் அபிப்பிராயத்தைக் காட்ட முடிந்தது. ஆனால் இவர்களின் இந்த வாதத்திற்கு இதைக் கூட காட்ட முடியாது? ஏனென்றால் அப்படி ஒரு சட்டத்தை இஸ்லாம் பிறப்பிக்கவே இல்லை.
எனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் வளைய வடிவில் தங்க நகை அணிந்துள்ளார்கள் என்ற கருத்தைத் தரக்கூடிய இரு ஹதீஸ்களும் பெண்கள் வளைய வடிவில் தங்கம் அணியக் கூடாது என்ற சட்டம் வருவதற்கு முந்தியது என்ற இவர்களின் வாதம் ஆதாரமற்றது. உண்மைக்குப் புறம்பானது.
குழப்பம் : 17
அடுத்து இவர்கள் கூறும் ;மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் முதல் தொடரில் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள்.
இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.
தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
என்ற கூற்றுகளுக்குக்கு எமது இரண்டாம் தொடரிலேயே தக்க பதில் எழுதியுள்ளோம்.
அத்துடன் தங்கம் கூடும் என்றால் அதன் அனைத்து வடிவமும் கூடுமாக இருக்க வேண்டும் என்ற இவர்களது வரட்டுத் தத்துவத்திற்கும் தங்கத்தின் பாத்திர வடிவம் பற்றிய ஹதீஸைக் குறிப்பிட்டு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டோம்.
எனவே, இத்தகைய தடுமாற்றங்கள் இவர்களுக்கு ஹறாம் ஹலால் விடயத்தில் அதுவும் ஒரு நிலைப்பாடு தொடர்பாக ஆய்வு செய்த வேளையில் இடம் பெற்றுள்ளது எமக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.
நமது பதில் :
இவர்கள் வெளியிட்ட மூன்று தொடர்களில் இரண்டாம் தொடரில் நாம் எழுதிய நியாயமான வாதங்களுக்குத் தவறான விளக்கங்களை கூறியிருந்தார்கள். அதில் உள்ள அபத்தங்களை நமது முதல் தொடரில் விளக்கி இருக்கிறோம்.
பாத்திர வடிவ ஹதீஸிற்கும் இவர்களது வாதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் பாத்திர வடிவ ஹதீஸைப் போன்று இவர்கள் வாதிடும் குறித்த அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அமையவில்லை என்றும் முன்னரே இத்தொடரில் தெளிவாக விளக்கி விட்டோம்.
எனவே இவர்கள் விருப்பு வெறுப்புகளை மறந்துவிட்டு இறையச்சத்தை முன்னிறுத்தி தயங்காமல் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் இவ்வாறு பலவீனமான வாதங்களை முன்வைத்து பெண்களுக்கு ஹலாலன தங்க ஆபரணங்களை ஹராமாக்கிவிட வேண்டாம் என்ற அறிவுரையோடு நமது இத்தொடரை நிறைவு செய்கிறோம். 

பெண்கள் தங்க நகை அணிவது குறித்து ஸஹ்ரான் என்ற அறிஞரும் மறுப்பு எழுதி இருந்தார். அந்த மறுப்புக்குரிய நமது பதில் வருமாறு:
ஸஹ்ரானுக்கு மறுப்பு

பெண்கள் தங்க நகை அணியலாமா என்ற கருத்தை மறு ஆய்வு செய்து நாம் ஒரு இரண்டுதொடர்களை வெளியிட்டிருந்தோம். அது குறித்து நவ்பர் அவர்கள் வெளியிட்டமறுப்புக்குரிய நமது பதிலை நவ்பருக்கு மறுப்பு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம். அது போல் ஸஹ்ரான் அவர்களும் ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளார். நவ்பர் அவர்களின் மறுப்பில் இருந்தது போன்ற வரட்டு வாதமும் தற்பெருமையும் இல்லாமல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இவரது மறுப்பு அமைந்துள்ளது. எனவே அந்த மறுப்பை முழுமையாக வெளியிட்டு நம்முடைய விளக்கத்தை முன் வைக்கிறோம்.
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? எனும் பீஜேயின் ஆய்வு பற்றி எனது நிலைப்பாடு.
சில க்கு முன்னால் அறிஞர்களான பீஜேஅப்பாஸ் அலி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை www.onlinepj.com எனும் இணையதளத்தில் படிக்கும் சந்தர்ப்பம் அல்லாஹ்வின் அருளால் எனக்குக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.பெண்கள் தங்க நகைகளை அணிவது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களால் தடைசெய்யப்பட்ட விடயம் என்று தக்க சான்றுகளுடன் பிரச்சாரம் செய்துவரும் பிரச்சாரகர்களுல் நானும் ஒருவன். இக்கருத்தை ஆய்வில்லாமல் கண்மூடித்தனமாக நாம் கூறவில்லை.
மூன்று நபிமொழிகளை முன்னிருத்தியே இக்கருத்தைக் கூறியிருக்கின்றேன். பெண்கள் தங்க நகைகள் அணிவது ஹராம் எனும் நிலைப்பாடிற்கு சான்றாக முன்வைக்கும் செய்திகளில் இரு செய்தியை மேற்குறித்த அறிஞர்கள் ஆய்வு ரீதியாக விமர்சனம் செய்திருந்தனர். இவ்வாறு ஆய்வு ரீதியாக விமர்சனம் செய்வது ஆரோக்கியமானதும் வரவேற்கத்தக்கதும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. குறித்த இரு அறிஞர்களின் ஆய்விற்கு பதிலளிப்பதற்கு முன்னால் சில அடிப்படையான தகவல்களை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். இந்த ஆக்கத்தை பதிப்பிக்கும் நான் வெளிநாட்டுப் பணத்திற்காக தஃவா செய்யும் ஒரு தாயியோ அல்லது ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றுக்களை குர்ஆன்ஸுன்னாவுக்கு அடுத்து துணை ஆதாரங்களாக சமர்ப்பிக்கும் ஸலபிஸ வழிகேட்டு அழைப்பாளனோ அல்ல என்பதனையும் யார் எக்கருத்தைக் கூறினாலும் ஆதாரங்கள் வலுவாக அமைந்தால் விமர்சனங்களை கவனத்தில் கொள்ளாது கருத்தை ஏற்கும் மனோ பக்குவம் படைத்தவன் என்பதையும் தாழ்மையுடன் ஆரம்பத்தில் கூறிக் கொள்கின்றேன். அறிஞர் பீஜே அவர்களது ஆய்வுக்கு நான் மறுப்பு எழுதுவதால் சத்தியத்தை விட்டு திசை மாறிய பலவேஷத்தில் உள்ளவன் என்றோ தொடர்புள்ளவன் என்றோ தப்பாக என்னை எண்ணி விட வேண்டாமென இரு அறிஞர்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? எனும் முதலாம் தொடரில் ஆரம்பத்திலேயேஅறிஞர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் கூறும் கருத்தும் அதை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் வாதங்களும் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை முன்னரே சிலரால் சொல்லப்பட்டவை தான்.அதைத் தான் இலங்கையைச் சேர்ந்த சிலரும் எடுத்து வைக்கின்றனர்.
ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால் இந்தக் கருத்து முன்னரே சொல்லப்பட்டவை அதைத் தான் இவர்கள் சொல்லுகின்றார்கள் எனக் குறிப்பிடுவது ஒரு ஆய்வாளருக்கு அழகானதல்ல என்பது எனது கருத்தாகும். ஏனெனில் அறிஞர் பீஜே அவர்கள் கூட கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஸகாத் தொடுக்கத் தேவையில்லை எனக் கூறிய போது இதை யாராவது சொல்லியிருக்கின்றார்களா? இல்லையா? என்றெல்லாம் நாம் பார்க்கவில்லை சொல்லியிருந்தால் என்ன? சொல்லாவிட்டால் தான் என்ன? வருடா வருடம் என்பதற்கு ஸஹீஹான செய்தி இருக்கா? இல்லை என்றவுடன் அறிஞர் அவர்களின் கூற்றே சத்தியமானது என முடிவெடுத்தோம்.அதையே பிரச்சாரமும் செய்து வருகின்றோம். அதே போன்று அல் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமானஹதீஸ்கள் முரண்படும் எனும் கருத்தையும் பீஜே அவர்களும் அப்பாஸ் அலி(தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்)அறிஞர்கள் ஆய்வு ரீதியாக குறிப்பிட்ட போது கண்மூடித்தனமாக எதிர்க்காமலும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமலும் ஆய்வுக்குட்படுத்தி அதை ஏற்றிருக்கின்றேன். இன்னும் சொல்லப் போனால் நபிகளார்(ஸல்)அவர்கள் சூனியம் செய்யப்படவில்லை என பீஜே அவர்கள் குறிப்பிடும் கருத்து அறிஞர் அவர்களுக்கு முன்னரே சிலரால் சொல்லப்பட்டவையாக இருந்தும் அறிஞரின் கருத்தை ஆய்வுக்குட்படுத்தி ஏற்றுக் கொண்டோமே தவிர மதனிகளும் மக்கிகளும் உமரிகளும் குறிப்பிடுவது போன்று இது முஃதஸிலாக்களின் கருத்து அதைத் தான் பீஜே வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை கூறுகின்றார் என நாம் கூறவில்லை கூறவும் மாட்டேன். அவ்வாறு கூறுவது அர்த்தமற்றதும் அறியாமையின் உச்ச கட்டமுமாகும்.
நாம் முன்வைக்கும் தவ்பானின் மேற்குறித்தஹதீஸை முதலில் இரு அறிஞர்களும் ஆதாரபூர்வமானது என ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன் காரணமாகவே குறித்த செய்தியை பலவீனம் எனக் குறிப்பிடாமல் அதை ஏற்றுக் கொண்டு வாதங்களை மாத்திரம் முன்வைத்துள்ளார்கள்
அவர்களது வாதம்:பாத்திமா (ரலி)அவர்களின் கரத்தில் தங்க மாலை இருப்பதைக் கண்ட நபிகளார் (ஸல்) அவர்கள் பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டார்கள் என்று தவ்பானின் செய்தியில் இடம் பெறுகின்றது. பாத்திமாவின் கரத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது.வைத்திருக்கத் தான் முடியும். இந்தஹதீஸிலிருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத் தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை. தங்கம்வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது எனும் சட்டம் ஸகாத் கடமையானதன் பின் மாற்றப்பட்டு விட்டது. ஆகவே மேற் குறித்த பாத்திமாவின் நிகழ்வு ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வு.
எமது பதில்:அறிஞர் பீஜே அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! இவ்வாதத்தை அவர் வேன்டுமென்று எடுத்து வைத்திருக்க மாட்டார் என நான் நல்லெண்னம் கொள்கின்றேன். அறிஞர்களுக்கு ஆய்வில் சில நேரங்களில் தவறுகள் நிகழுவது இயல்பானதே! அதடிப்படையில் இதனை நான் நோக்குகின்றேன். எமக்கு முன் வாழ்ந்த அறிஞர்களில் சிலர் இச்செய்திக்கு விளக்கமளிக்கும் போது, பீஜே அவர்கள் கூறுவதைப் போன்று இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டதாக அவர்களும் கூறியுள்ளார்கள். ஆனால் அறிஞர் பீஜே அவர்களின் ஆய்வுக்கு மறுப்பாக இதை நாம் ஒருக்காலும் குறிப்பிட மாட்டோம். பாத்திமா (ரலி) அவர்களின் இந்நிகழ்வு ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நடைபெற்றது என அறிஞர் அவர்கல் குறிப்பிடுவது தவறானதாகும். ஏனெனில் பாத்திமாவின் (ரலி) அவர்கள் சம்பந்தப்படும் இந்த ஹதீஸை கவனமாக நாம் கவனித்தால் இவ்வாதத்தை எடுத்து வைக்க முடியாது. இச்செய்தியில் ஹுபைராவின் மகள் (ஹிந்த்)க்கு பாத்திமா (ரலி) அவர்கள் தன்னிடமிருந்த தங்க மாலையை சுட்டிக்காட்டி கூறும் போது பின்வரும் வாசகத்தைப் பயன்படுத்துகின்றார்கள். இதை ஹஸனின் தந்தை (அலி ரலி)அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் ஹஸனின் தந்தை என பாத்திமா (ரலி)கூறுவதாக இருந்தால் ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்ததன் பின்பே கூறியிருக்க முடியும்.ஹஸன் (ரலி)அவர்கள் எப்போது பிறந்தார்கள் என நாம் தேடிப் பார்த்தால் நபிகளார் (ஸல்)அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற மூன்றாம் ஆண்டு பிறந்திருக்கின்றாரகள்.(பார்க்க:உஸுதுல் காபாஃ லிப்னு ஹஜர்)எமது சக்திக்கேற்ப நாம் தேடிய வகையில் எந்தஹதீஸ் கிரந்தத்திலும் ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு ஸகாத் கடமையாக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களைக் காண முடியவில்லை. ஆனாலும் முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்ற பிரபலமான ஒருஹதீஸின் ஊடாக ஸகாத் கடமையாக்கப்பட்டது மக்காவில் தான் என்பதை சந்தேகமின்றிப் புரிந்து கொள்ளலாம்.
மக்காவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள் தொடர்ச்சியான துன்பங்களைக் கொடுத்து வந்தனர்.அதனால் அபீஸீனியாவுக்கு சில முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த நிகழ்வு நாம் அனைவரும் அறிந்ததே!அபீஸீனியாவில் வாழும் போது மன்னர் நஜ்ஜாஷி முஸ்லிம்களை விசாரனைக்கு அழைத்தார்.அந்நேரத்தில் முஸ்லிம்களின் சார்பில் ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)அவர்கள் முன் வந்து சில விடயங்களை மன்னருக்கு விளக்கினார்கள்.விளக்கும் போது முஹம்ம்த் எங்களுக்கு தொழுகையையும் ஸகாத்தையும் ஏவுகின்றார் என்று கூறியதாக முஸ்னத் அஹ்மதில் ஆதாரபூர்வமாக இடம் பெற்றுள்ளது. (பார்க்க:முஸ்னத்(அஹ்மத்: 1674) மக்காவில் வாழ முடியாமல் முஸ்லிம்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது நடைபெற்ற நிகழ்வே மேற்குறித்த நிகழ்வாகும். அப்படியாயின் ஹஸன் (ரலி) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அதாவது மக்காவில் வைத்தே ஸகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன் இந்நிகழ்வு இடம் பெற வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப்போனால் ஹஸன் (ரலி) அவர்கள் மக்காவில் பிறக்கவில்லை என்பதும் குறித்த நிகழ்வு மதீனாவில் தான் இடம் பெற்றிருக்கின்றது என்பதை நிரூபணம் செய்கின்றது.
ஆகவே பாத்திமா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை இரு அறிஞர்களும் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினால் ஒரு வேளை இந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும். இஸ்லாத்தை தூய வடிவில் மக்களுக்கு முன் வைக்கும் இந்த அறிஞர்கள் எனது சுருக்கமான பதிலுக்கு தங்களது ஆய்வை இணையத்தில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். அத்தோடு குறித்த பதிலில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டால் அவற்றை உடன் எனக்கு சுட்டிக் காட்டுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.தாங்கள் வெளியிட்ட முதலாம் தொடருக்கான எனது பதிலே இதுவாகும்.எல்லாம் வல்ல அல்லாஹ் ஆய்வுசெய்யும் இது போன்ற அறிஞர்களை இச்சமூகத்தில் தொடர்ந்தும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழவைப்பானாக!
இது தான் ஸஹ்ரான் மவ்லவி அவர்களின் வாதம்.
இவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியா என்பதைப் பிறகு ஆராய்வோம். இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொள்வதால் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்ற கருத்து நிரூபணமாகாது. மேற்கண்ட ஹதீஸ் எதைப் பற்றிக் கூறுகிறது என்பதில் சந்தேகத்தைத் தான் இந்த வாதம் ஏற்படுத்துமே தவிர இத்னால் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்ற கருத்து நிரூபணமாகாது. இது குறித்து நாம் கேட்ட கேள்விகள் அப்படியே உள்ளன.
நாம் கேட்டதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
இந்த ஹதீஸ் தங்க நகை அணிவது பற்றிய ஹதீஸ் அல்ல. ஹுபைராவின் மகளுடைய கையில் மோதிரங்கள் கனமான மோதிரங்கள் இருந்தன என்று தான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். கையில் இருந்தன என்று மொழியாக்கம் செய்யாமல் அணிந்திருந்தனர் என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர். இந்தச் சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தம் செய்ய இடம் இருந்தாலும் இந்த இடத்தில் கையில் வைத்திருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டி விட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால் தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டி விடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்தும்.
அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா ரலி அவர்களிடம் ஹுபைராவின் மகள் சொல்கிறார். இதை கேட்ட ஃபாத்திமா ரலி அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழட்டி விடுகிறார்கள். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள்.கழுத்தில்தங்க மாலையைஅணிந்திருக்கும் போது வரவில்லை. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது என்ன?
பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
என்று தான் கூறினார்கள். ஃபாத்திமாவின் கரத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது. வைத்திருக்கத் தான் முடியும். இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத்தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக்கூடாது என்ற கருத்தைத் தரவில்லை.
அடுத்து ஃபாத்திமா ரலிஅம்மாலையைக் கழட்டிவிற்று விடச் சொன்னார்கள் என்பதும் இவர்களின் கைச்சரக்காகும்.
ஏற்கனவே அவர்கள் கழட்டி விட்டார்கள் எனும் போது மீண்டும் ஏன் கழட்ட வேண்டும் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லை. மூலத்தில் இப்படி கூறப்படவே இல்லை என்பதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. முதலில் கழட்டியதாகத் தான் மூலத்தில் உள்ளது. இரண்டாம் தடவை கழட்டியதாக இல்லை. ஆனாலும் பெண்கள் தஙக நகை அணியக் கூடாது என்பதை எப்படியாவது நிறுவ வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை நுழைத்து தங்க நகை அணிவது தான் தவறு என்று காட்ட முயற்சித்துள்ளனர்.
தங்க நகையை அணிவது தவறு என்றால் ஃபாதிமா ரலி அதை விற்கத் தேவை இல்லை. அனியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றி பேசவே இல்லை.
எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்தச் செய்தி அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.
இந்த வாதங்களை மறுக்க மேற்கண்ட கேள்விகள் பயன்படாது என்பதை முதலில் தெரிவிக்கிறோம். பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் அந்தக் கருத்தைக் கூறும் தெளிவான ஹதீஸை எடுத்துக் காட்டித் தான் வாதம் செய்ய வேண்டும்.
ஃபாத்திமா (ரலி) சம்மந்தப்பட்ட ஹதீஸ் தங்கத்தை அணிவதைத் தடை செய்யவில்லை. தங்கம் வைத்திருப்பதைத் தான் தடை செய்கிறது. என்பதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை.
பாத்திமா (ரலி) தொடர்பான ஹதீஸில் மூன்று முடிவுகள் நம் முன்னே உள்ளன.
இது தங்க நகை அணிவது பற்றியது முதல் நிலை. இந்தக் கருத்துக்கு அந்த ஹதீஸில் இடம் இல்லை என்பதை நாம் தெள்வு படுத்தி விட்டோம். அதற்கு மறுப்பு இல்லாததால் அந்த முடிவை எடுக்க முடியாது.
அப்படியானால தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து என்பது உறுதியாகின்றது. இப்போது இது குறித்து இரண்டில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். ஸஹ்ரான் அவர்களும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.
தங்கத்தை அறவே வைத்துக் கொள்ளக் கூடாது என்பது முன்னர் இருந்த நிலை. இப்போது அது மாற்றப்பட்டு விட்டது என்று நாங்கள் முடிவுக்கு வந்து விட்டோம்.
இதை ஸஹ்ரான் அவர்கள் மறுத்து மாற்றப்படவில்லை என்று வாதிட்டால் தங்கத்தை வைத்திருக்கவே கூடாது என்று ஸஹ்ரான் அவர்கள் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால ஹதீஸை மறுத்த குற்றம் சேரும்.
ஒரு ஹதீஸில் எதிர்க் கேள்வி கேட்பதுடன் ஒரு ஆய்வாளரின் கடமை முடிந்து விடாது. அவரது நிலைபாடு என்ன என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
இது விஷயத்தில் ஸஹ்ரான் அவர்களின் நிலை என்ன என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.
அடுத்து ஹஸன் அவர்களின் தந்தை இதை எனக்கு வாங்கித் தந்தார் என்று ஃபாதிமா (ரலி) கூறுவதால் ஹஸன் பிறந்த பிறகு தான் இதைக் கூறியிருக்க வேண்டும் என்பது சரியான வாதமே.
ஜகாத் என்பது மக்காவில் கடமையாகி விட்டது என்பதும் ஓரளவுக்குச் சரியானதே. இது குறித்து ஹதீஸ் மட்டுமின்றி குர்ஆனிலும் ஆதாரம் உள்ளது. ஆனால் பொதுவாக இயன்றதை தர்மம் செய்தல் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.
நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதம், யார் யாருக்கு வினியோகிக்க வேண்டும் என்ற விபரம், அரசின் மூலம் திரட்டுதல், ஜகாத் நிதி திரட்டுவோருக்கு ஜகாத்தில் இருந்தே வழங்குதல் போன்றவை மக்காவில் அருளப்படவில்லை. அரசாங்கம் இல்லாத காலத்தில் இது போன்ற கட்டளையைப் பிறப்பிக்க முடியாது.
ஜகாத் என்பது இந்தப் பொருளிலும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப் படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.
திருக்குர் ஆன் 41:6,7
ஜகாத் முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய மார்க்கக் கடமை என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் ஜகாத் கொடுக்காத முஷ்ரிக்குகளுக்கு (இணை வைப்பவர்களுக்குக்) கேடு என்று கூறப்படுகிறது. சாதாரணமான தர்மத்தைத் தான் இது குறிக்க முடியும். துவக்க காலத்தில் ஜகாத் எனும் சொல் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்த பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தை வைத்துக் கொள்வதைத் தடுத்தார்கள் என்றால் அது வரை இப்போது சட்டமாக உள்ள ஜகாத் கடமையாக இருக்கவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஜகாத் கடமையாவதற்கு முன்னுள்ள நிலை என்ற இப்னு உமர் அவர்களின் கூற்றையும் நாம் மறுக்க முடியாது, இப்னு உமர் ஹிஜ்ரத் செய்யும் போது பத்து வயதுடையவர்களாக இருந்தனர். மதீனா வந்த பிறகு தான் மார்க்கத்தைப் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைகிறார்கள். எனவே மதீனா வந்த பின் ஜகாத் பற்றிய கட்டளை அருளப்பட்டிருந்தால் தான் அவர்களால் இது பற்றிக் கூற முடியும்.
இப்னு உமர் (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவர் ஹதீஸையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒன்றை ஏற்று ஒன்றை மறுக்கக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்.
இந்த விளக்கத்தில் ஸஹ்ரான் மவ்லவி அவர்களுக்கோ வேறு யாருக்குமோ உடன்பாடு இல்லை என்றால் அது மாற்றப்படவில்லை என்பதில் உறுதியாக இருந்தால் இந்தச் சட்டம் மாற்றப்படவில்லை என்று அறிவித்து யாரும் எந்தத் தங்கத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளிக்க வேண்டும்.
ஆனால் எப்படி தீர்ப்பளித்தாலும் பெண்கள் தங்க அணியக் கூடாது என்ற வாதம் முற்றிலும் தவறு என்பதில் ஐயம் இல்லை.