பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது

கேள்வி-பதில்: பெண்கள்

பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது?

காரணங்களை சரியாகக் கண்டுபிடிப்பதில் காட்டும் திறமையை தீர்வு காண்பதிலும் காட்டவேண்டும். இந்தக் கருத்து கணிப்பிலிருந்து எந்த உண்மை தெரிய வருகிறதோ, அந்த உண்மைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். அதுதான் பெண்களைப் பாதுகாக்கும்.

உறவினர்கள் என்றபோதும், குடும்ப நண்பர்கள் என்றபோதும், அண்டை வீட்டார் என்றபோதும், ஆண்களை ஆண்களாகக் கருதி நாம் நடக்கவேண்டும். நம் வீட்டுப் பெண்களை மேற்படி ஆண்கள் தனிமையில் சந்திக்கும் எல்லா வாசல்களையும் அடைக்க வேண்டும். மாமா, சித்தப்பா என்ற போலி உறவுகளைக் கற்பித்து அவர்களுடன் நெருங்கிப் பழகவிட்டால் ஆண்கள் தங்களது புத்தியைக் காட்டி விடுவார்கள்.

தந்தை, உடன்பிறந்த சகோதரர்கள் போன்ற உறவுகளைத் தவிர மற்ற ஆண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

ஒரு ஆணுடன் ஒரு பெண் தனித்து இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதற்கு ஒற்றை வரியில் தீர்வு சொல்லிவிட்டார்கள். அதுதான் ஒரே தீர்வாகும்.