78) பெண்கள் ஜனாஸாவைப் பின் தொடராமல் இருப்பது சிறந்தது

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது அதிக நன்மை தரக் கூடியது என்றாலும் ஜனாஸாவைப் பெண்கள் பின் தொடர்ந்து செல்லாமல் இருப்பது நல்லது. பின் தொடர்ந்தால் குற்றமாகாது. ‘ஜனாஸாவைப் பின் தொடர வேண்டாம் என்று (பெண்களாகிய) நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். (ஆயினும்) வலிமையாகத் தடுக்கப்படவில்லை’ என்று உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

(புகாரி: 1278)

மென்மையான முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றால் அதைச் செய்யாமலிருப்பது நல்லது என்றே புரிந்து கொள்ள வேண்டும். கட்டாயம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.