பெண்களின் கற்பைப் பறித்த ஜோதிட நம்பிக்கை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பெண்களின் கற்பைப் பறித்த ஜோதிட நம்பிக்கை

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை அடுத்த ஆர்.தொப்பூரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். ஜோதிடர் என சொல்லிக் கொள்ளும் இவரிடம் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேர்ந்த தம்பதி, தங்களது மகளுக்கு திருமணம் தள்ளிப் போகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? என ஆலோசனை கேட்ட போது தனி அறையில் பெண்ணை வைத்து பரிகார பூஜை செய்தால் திருமணத் தடை நீங்கி விடும் என ஜோதிடர் கூறியுள்ளார்.

இதை நம்பி பெற்றோர் பெண்ணை ஜோதிடரிடம் அழைத்து வந்துள்ளனர். ஜோதிடர் பன்னீர் செல்வம் பரிகார பூஜை செய்வதாக அந்தப் பெண்ணை தனி அறையில் அழைத்துச் சென்று கற்பழித்து விட்டார். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ஜோதிடர் பன்னீர் செல்வத்தைக் கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார் ஜோதிடம் பார்க்க வந்த வேறொரு பெண்ணை தனி அறைக்குள் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது திடீரென அறைக்குள் நுழைந்த போலீசார் நிர்வாணமாக இருந்த ஜோதிடர் பன்னீர் செல்வத்தைக் கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது பன்னீர் செல்வம் ‘கடந்த இரண்டு மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட பெண்களைக் கற்பழித்ததாக ஒப்புக் கொண்டார். இந்த ஜோதிடர் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருவதாக அவன் சொன்ன போது போலீசாருக்கு தலை சுற்றி விட்டது. கைது செய்யப்பட்ட ஜோதிடர் பன்னீர் செல்வத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு ஆணும், பெண்ணும் தனித்து இருந்தால் மூன்றாவதாக அவர்களுடன் ஷைத்தான் இருக்கிறார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். எனவே எந்த ஒரு நிலையிலும் ஒரு பெண் இன்னொரு ஆணுடன் தனித்து இருக்கக் கூடாது. நபிகள் நாயகத்தின் இந்த கூற்றை மீறி நடந்து கொண்டால் கற்பு பறி போய் கதறும் நிலை ஏற்படும். இதைப் பெண் இனம் புரிந்து நடந்து கொள்ள முன்வருமா?

 

Source : unarvu (30/03/219)