07) புனிதப் போரில் கொல்லப்பட்டவர்களைக் குளிப்பாட்டக் கூடாது
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
அல்லாஹ்வின் பாதையில் நியாயத்துக்காகப் போரிடும் போது எதிரி நாட்டுப் படையினரால் கொல்லப்படுபவரைக் குளிப்பாட்டாமல் இரத்தச் சுவடுடன் அடக்கம் செய்ய வேண்டும்.
உஹதுப் போரில் கொல்லபட்டவர்களைக் குறித்து ‘இவர்களை இவர்களின் இரத்தக் கறையுடனே அடக்கம் செய்யுங்கள்!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களைக் குளிப்பாட்டவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(புகாரி: 1346, 1343, 1348, 1353, 4080)