065. பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி தவாஃபை ஆரம்பிக்க வேண்டுமா?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

தவாஃபை ஆரம்பிக்கும்போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது சரியா?

பதில்

பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.

(புகாரி: 1613)