பிக் பாஸ் குடி கெடுக்கும் விஜய் தொ(ல்)லைக்க்காட்சி

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பிக் பாஸ் குடி கெடுக்கும் விஜய் தொ(ல்)லைக்க்காட்சி

விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி நாட்டு மக்களை ஒழுக்கக்கேட்டின் உச்சிக்கு கொண்டு செல்வதையே தங்களது குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் தொலைக்காட்சிகளில் முதலிடம் பிடிப்பது விஜய் டிவிதான். ஒழுக்கம் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் வகையில் சின்னஞ்சிறு பிஞ்சுகள் முதல் கிழவிகள் வரைக்கும் ஆபாசத்தில் மூழ்க வித்திடும் அசிங்கங்களை விதைப்பதுதான் விஜய் டிவியின் பிரதான நோக்கம்.

அந்த வகையில் ஜூனியர் சிங்கர் என்ற அசிங்க நிகழ்ச்சியின் மூலம் சிறுகுழந்தைகளை ஆபாச நடனமாட வைத்தது முதல், நீயா நானா என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ஒழுக்கக்கேடான விஷயங்களை ஊக்குவிக்கும் வகையில் செட்டிங் விவாதம் நடத்தி வழிகெடுத்துக் கொண்டிருப்பதுவரை, செய்யும் அட்டூழிய அசிங்கங்கள் போதாதென்று தற்போது திரைக்கூத்தாடி கமல்ஹாசனை வைத்து விஜய் டிவி நடத்தி வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் என்ற ஆபாச அசிங்க நிகழ்ச்சி.

ஒரு தனி வீட்டில் திரைக்கூத்தாடிகள் ஆபாச நடிகைகள் உள்ளிட்ட 15 இரண்டு கால் மிருகங்களை 100 நாட்கள் அடைத்து வைப்பார்களாம். அதிலிருந்து ஒவ்வொருவராக ஒவ்வொரு வாரம் வெளியேற வைப்பார்களாம். மொத்தம் 30 கேமராக்கள் வாயிலாக அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் (நீச்சல் குளத்தில் குளிப்பது உட்பட அனைத்தும்) படம் பிடிக்கப்படுமாம்; அதை தொகுத்து தினமும் ஒரு மணி நேரம் ஆபாச நாயகன் கமல ஹாசன் மக்களுக்கு வழங்குவாராம்; இதுதான் பிக் பாஸ் என்ற கழிசடை நிகழ்ச்சியாம்.

ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு, கண்டவர்களுடனும் கட்டிப்பிடித்துக் கொண்டு கேவலத்தனங்களை அரங்கேற்றுவதும், அதை படம் பிடித்து ஒளிபரப்பி காசு பார்க்கும் கேவலமான இழிவேலையை விஜய் தொலைக்காட்சி செய்து வருகின்றது. கலாச்சார காவலாளி(?) காவாலி கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.

திருமணம் முடிக்காமலேயே இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்ததோடு மட்டுமல்லாமல், கௌதமி என்ற கூத்தாடியோடு திருமணம் ஆகாமலேயே கேடுகெட்ட செயல்களில் ஈடுபட்ட கமலஹாசனை பிக் பாஸ் என்ற கண்காணிப்பாளராக வைத்திருப்பதே இந்த நிகழ்ச்சியின் தரத்தை உணர்த்துகின்றது. அடுத்தவர் பெட்ரூமில் எட்டிப்பார்க்க எவருக்கும் உரிமையில்லை என்று முழங்கிய கலாச்சாரக் காவலர் கமலஹாசன் தான் 15 பேருடைய படுக்கையறையிலும் கேமரா வைத்து வெளியில் காவல் காத்து கிடக்கின்றார்.

இப்படிப்பட்ட கேவலமான அசிங்க நிகழ்ச்சிகளையெல்லாம் எவ்வித தணிக்கையும் இல்லாமல் ஒளிபரப்பு செய்ய அனுமதிப்பது எவ்விதத்தில் நியாயம்? ஒரு சினிமா படம் வெளியிடுவதற்கு முன்னாள் ஆயிரத்து எட்டு தணிக்கை செய்யும் அரசாங்கம் (அதைக்கூட சரியாகச் செய்வதில்லை; பணத்தை வாங்கிவிட்டு ஏ சான்றிதழ் வழங்க வேண்டிய படத்திற்கு யு சான்றிதழ் வழங்குகின்றார்கள் என்பது தனிக்கதை) எவ்வித தணிக்கையும் இல்லாமல் இதுபோன்ற கேடுகெட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிப்பதுதான் கருத்துச் சுதந்திரமா?

பெண்களை போகப்பொருளாக ஆக்கி காசு பார்ப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் பிரதானம்; பெண்ணுரிமை பேசக்கூடிய அமைப்புகளும், அறிவு ஜீவிகளும் எங்கே போனார்கள்? பெண்கள் தங்களது உடல் அழகை தனது கணவனைத்தவிர மற்ற அந்நிய ஆண்களிடத்தில் காட்டக்கூடாது; அதை மறைக்கும் வண்ணம் தங்கள் கற்பை காக்கும் விதத்தில் அனைத்து பெண்களும் பர்தா அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும் என்று கருத்து சொன்ன மதுரை ஆதீனத்தின் ஆதீன மடத்தை முற்றுகையிட்ட பெண்ணுரிமைப் போராளிகளைக் காணவில்லை.

ஆபாச போஸ்டர்களில் உள்ள ஆபாசப் படத்தை தார்ப்பூசி அழித்து, ஆபாசப் படம் திரையிடப்பட்ட தியோட்டர்களை அடித்து நொறுக்கி, ஆபாச திரைப்பட்டத்தின் ரீல் பெட்டிகளை தீயிட்டுக் கொளுத்திய புதுமைப் பெண்கள் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குடும்பத்தோடு பார்க்க அமர்ந்துவிட்டார்களா எனத்தெரியவில்லை. குடும்பங்களின் குடி கெடுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட வேண்டும்; இல்லாவிட்டால் குடும்பப் பெண்களும் சீரழிந்து, குழந்தைகளும் குட்டிச் சுவர்களாக ஆகி ஒழுக்கக்கேடர்களாக மாறி அனைவரும் கமல்ஹாசன் போலவே ஒழுக்கங்கெட்டவர்களாக மாறிவிடுவர். எச்சரிக்கை.

Source: unarvu ( 28/08/17 )