பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலி ருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி ), நூல் : திர்மிதீ (803)
இதே கருத்து அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது. (ஹதீஸ் எண் : 3356,3659) இடம் பெற்றுள்ளது.
இச்செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளைகுழம்பியவர். இவர் மூளைகுழம்பிய பின்னர் அவரிடம் கேட்டவர்களில் ஒருவர் ஜரீர் ஆவார். (பத்ஹுல் பாரீ) இந்தச் செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவரிடம் ஜரீரே கேட்டுள்ளதால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.