059. பாபு பனீ ஷைபா என்பதும், பாபுஸ்ஸலாம் என்பதும் ஒன்றா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
ஹரமில் “பாபு பனீ ஷைபா’ வழியாக நுழைவது சுன்னத் என்பதை அறிந்திருக்கிறேன். சிலர் “பாபுஸ்ஸலாம்’ வழியாக நுழைவது சுன்னத் என்கிறார்கள். “பாபு பனீ ஷைபா’ என்பதும் “பாபுஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றா?
பதில்
இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த வாசல் மகாமு இப்ராஹீம் அமைந்துள்ள கஅபாவின் பகுதியை முன்னோக்கியிருக்கும்.