பாதத்தை மறைப்பது
பாதத்தை மறைப்பது
உம்மு ஸல்மா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டையுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பெண்ணுடைய) பாதங்களை மறைக்கக் கூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிலளித்தார்கள்.
நூல் : அபூதாவூத்
இதில் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் (தீனார்) என்பவர் இடம்பெருகிறார். இவர் பலவீனமானவர். இவரை பற்றி இப்னு மயீன் அவர்கள் இவருடைய செய்தியில் பலவீனம் இருக்கிறது என்றும், அபூஹாதம் அவர்கள் இவர் பலவீனமானவர் இவருடைய செய்திகளை எழுதிக்கொள்ளலாம், ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இப்னு அதீ அவா்கள் இவர் அறிவிக்கக்கூடிய செய்திகளில் சிலவை நிராகரிக்கப்பட வேண்டியவை, (பெரும்பாலும்) இவருடைய செய்தியை யாரும் வழிமொழிந்து அறிவிப்பதில்லை என்றும், மொத்தத்தில் இவர் பலவீமானவர்களின் பட்டியல் எழுதப்பட வேண்டியவர் என்றும் கூறுகின்றனர்.
நூல்: தஹ்தீபுல் கமால் (பாகம் 17 பக்கம் 208)