பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா வராதா?
பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்லமுடியாமல் போகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறுகிறார்கள். இது ஆதாரபூர்வமான ஹதீஸா?
பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்ல முடியாமல் போகும் என்ற கருத்தில் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை. இது அடிப்படை ஆதாரமற்றதும், மக்களால் புனைந்து சொல்லப்பட்டதுமாகும்.
பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் சொல்வது நபிவழியாகும். ஒருவர் பாங்கிற்கு பதிலளிக்காமல் பேசினால் அவர் பாங்கிற்கு பதிலளிக்கவில்லை என்ற அடிப்படையில் நபிவழியைக் கடைப்பிடிக்கவில்லை என்று ஆகும்.
ஆனால் இச்செயலைச் செய்ததால் அவரின் மரணத்தருவாயில் கலிமா வராது என்றெல்லாம் நபிகள் நாயகம் சொல்லவில்லை. மேலும் இதை விட பெரும் பெரும் பாவங்களைப் பற்றி நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
அது போன்ற பெரும்பாவங்களை செய்தவருக்குக் கூட மரணத்தருவாயில் கலிமா வராது என்ற நிலையை நபிகளார் சொல்லவில்லை. எனவே இது நபியின் பெயரில் மக்களால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதையாகும்.