பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?
கேள்வி-பதில்:
பெண்கள்
பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?
பாங்கு சொல்லும் போது பெண்கள் தலையில் துணி போட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. சமுதாயத்தில் பரவியுள்ள பித்அத்களில் இதுவும் ஒன்றாகும்.
பெண்கள் அந்நிய ஆண்களுக்கு முன்னால் இருக்கும் போது முகம், முன்கை, மற்றும் பாதங்கள் தவிர மற்ற உறுப்புகளை மறைப்பது கடமையாகும். எனவே இந்நேரத்தில் மட்டும் அவர்கள் தலையில் துணியிட்டு மறைத்திருக்க வேண்டும். அது போல் தொழுகையின் போதும் இவ்வாறு மறைத்திருப்பது அவசியமாகும்.
அந்நிய ஆண்களின் பார்வை படாத வகையில் தங்களது வீடுகளுக்குள் இருக்கும் போது தலையை மறைத்திருப்பதும் மறைக்காமல் இருப்பதும் அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இந்நேரத்தில் பாங்கு சொன்னாலும் தலையை மறைக்க வேண்டியதில்லை.