பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்!
பழங்களின் பல்சுவைக்கு காரணியான மழை… உமிழ்….நீர்!
(Water may be key to understanding sweetness!)
…பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சை தோட்டங்களையும், விளை நிலங்களையும், கிளைகள் உள்ளதும், இல்லாததுமான பேரீச்சையையும் அவனே உண்டாக்கினான்.
(இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை, வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கிறோம். நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன்: 13:4) ➚.)
அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கும் மழை நீரானது, தாவர,விலங்கு மற்றும் மனிதர்கள் அனைவருக்குமான வாழ்வாதாரமாக உள்ளது. குறிப்பாக மண்ணில் வளரும் தாவரங்கள் மழை நீரை குடித்து வளர்ந்து சுவையான கனிகளை தருகின்றன. மரங்கள் தரும் அனைத்து கனிகளிலும் இனிப்பு சுவையே பிரதானமாக உள்ளது. ஆயினும் அந்த இனிப்பானது ஒன்றுபோல் இல்லாமல் வெவ்வேறு சுவைகளில் இருப்பதை அறிகிறோம்.
பழங்கள் தரும் சுவைகள் பல்வேறு ருசிகளில் இருக்கிறது. திராட்சை இனிப்பாகவும், சற்று புளிப்பு கலந்தும் உள்ளது. பேரீச்ச பழம் நல்ல இனிப்பாகவும் இருக்கிறது. இந்த இனிப்பு சுவைகளின் மாறுபாட்டுக்கு காரணம் பழத்தில் உள்ள பொருட்களா? அல்லது மனிதனின் நாக்கில் உள்ள சுவை நரம்புகளா? என்பது குறித்து பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. பொதுவாக இனிப்பு “சுகர்” என்று சொல்லப்பட்டாலும் இதிலும் பல்வேறு வகைகள் உள்ளன.
உதாரணமாக,திராட்சைப் பழத்திலும் இனிப்பு உள்ளது. இதுபோல் தேனிலும் இனிப்பு உள்ளது. கடைகளில் விற்கும் மிட்டாய்களிலும் இனிப்பு உள்ளது. ஆனால் எல்லா இனிப்பும் ஒன்று போல் அல்ல. திராட்சையில் சிறிதும்,தேனில் நடுத்தரமாகவும், மிட்டாயில் அதிகளவும் இனிப்பு சுவை உணரப்படுகிறது. நமது நாக்கிலுள்ள புரதத்தை கிரகிக்கும் சுவை மொட்டுக்களை இவ்வினிப்புப் பொருட்கள் தூண்டி விடுகின்றன. அதனால் இந்த உணர்வை சுவை நரம்புகள் மூளைக்கு செய்தி அனுப்பி, இனிப்பின் தரத்தை தீர்மானிக்கின்றன.
கடந்த 18-ஜூலை 2018 ‘அமெரிக்கன் கெமிகல் சொஸைட்டி” (ACS) ஆய்வு இதழான “ The Journal of Physical Chemistry Letters” ல் இது சம்பந்தமான ஒரு ஆய்வை வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆய்வு முடிவு என்ன கூறுகிறது என்றால், இனிப்பு சுவை கொடுக்கும், மானோஸ், குளுக்கோஸ், மற்றும் பிரக்டோஸ் (Mannose, Glucose, Fructose) ஆகிய (மோனோ சாக்கிரைடுகள்) இவை மூன்றும் ஒரே இரசாயன கட்டமைப்பை கொண்டிருந்தாலும் இனிப்பு சுவைகளில் வேறுபாடு உள்ளதன் காரணம், இதுவரை ஆய்வாளர்களுக்கு தெரியாதிருந்தது.
தற்போதைய நவீன ஆய்வுக்கருவிகளின் (Neutron diffraction with isotopic substitution) மூலம் தெரியவந்துள்ள உண்மை…. இனிப்பின் சுவை அளவு மாறுபடுவதன் காரணம் நாக்கில் சுரக்கும் உமிழ்நீரில் உள்ள (Hydrogen bond) நீரும் இனிப்பு பொருளும் சேர்ந்து இடை வினையாட்டுகின்றன ( Interactions). உமிழ் நீருலுள்ள ஹைட்ரஜன் அணு இணைப்பின் நீளம் மற்றும் அதன் பலத்தைப் பொறுத்து இனிப்பின் அளவு வேறுபடுவதாக கண்டறிந்துள்ளனர்.
மானோஸ், குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகிய மூன்று சர்க்கரைகளும் உமிழ் நீரில் வினை புரிந்தாலும், நீரில் உள்ள ஹைட்ரஜன் பினைப்புகளின் (Hydrogen bonding) சராசரி நீளம் முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. பிரக்டோஸ் ஹைட்ரஜன் பிணைப்புகள் சுமார் 1.8 ஆக இருக்கும், குளுக்கோஸ் சர்க்கரையில் 1.95 ஆகவும், மானோஸ் சர்க்கரையில் பிணைப்புகள் அதிக நீளமாக 1.95 முதல் 2.05 வரை நீளமாக இருக்கிறது. நீண்ட பிணைப்புகள் உடையதும் பலம் (Long bond and weaker strenth) குறைந்த சர்க்கரையில் இனிப்பின் சுவை குறைவாகவே இருக்கும்.
நமது உமிழ்நீரில் உள்ள ஹைட்ரஜன் இணைப்புகளே நாம் நாவில் சுவைக்கும் பழங்களின் இனிப்பின் வேறு பாட்டிற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரே விதமான மழை நீரே…. பல் சுவை தரும் எல்லா கனிகளையும் உருவாக்குகின்றது. இந்தக் கனிகளின் இனிப்பினை வகைப்படுத்தி பிரித்துக் காட்டுவதும் நாவில் சுரக்கும் நீர்தான் என்பது இன்று ஆய்வாளர்கள் அறிந்த உண்மை.
https://phys.org/news/2018-07-key-sweetness.html
https://phys.org/news/2018-07-key-sweetness.html
அல்லாஹ் கூறுகின்றான். ஒரே தண்ணீர் கொண்டு பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை, வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கிறோம். நிச்சயமாக, இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன்.13:4.)
அல் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மைகளை ஆய்வு செய்து வெளிப்படுத்துவது நமது முஸ்லிம்கள் அல்ல. நமது மக்களின் பார்வையில் குர்ஆன் என்பது பள்ளிகளில் ஓதவும், தொழுகவும் மாத்திரமே! சிந்திப்பதற்கோ ஆய்வு செய்வதற்குகோ அல்ல… ஆனால் அல்லாஹ் சொல்கிறான் “உணர்தறியும் மக்களுக்கு பல சான்றுகள் இருப்பதாக….
இந்தக் சான்றுகளை பார்ப்பதற்கோ, படித்து ஆய்வு செய்யவோ நம் சமுகம் தயாரில்லை. ஹராமான இயக்கங்களை உருவாக்கி வேற்று கோஷம் போடவே, இங்கு ஆட்கள் உருவாக்கப்படுகிறார்கள். இந்த கனிகளின் சுவை வேறுபாட்டில் பல சான்றுகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். நீரால் உருவான கனிகளின் இனிப்பின் சுவை அளவை வாயின் உமிழ் “ நீர்“ தீர்மானிக்கும் ஒரு சான்றுதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறியாத அறிவியல் சான்றுகள் இன்னும் பல உள்ளன. இதை ஆய்வு செய்து அறிவிக்க இஸ்லாமிய அறிஞர்கள் தயாரா?
மேலும், அந்த நீரைக்கொண்டு பயிர்களை முளைக்கச் செய்கிறான். மேலும், ஜைத்தூன் மற்றும் பேரீச்சை மரங்களையும், திராட்சை கொடிகளையும், வித விதமான கனிகளையும் உற்பத்தி செய்கின்றான். திண்ணமாக, சிந்திக்கும் மக்களுக்கு இவற்றில் பெரும் சான்று உள்ளது.
(அல்குர்ஆன்:16;11.)
Source: http://www.readislam.net/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be/