121. பலவீனர்களுக்கு உதவியாக நாம் கல் எறியலாமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
நமக்கு கல் எறிந்த பிறகு, நோயாளி மற்றும் பலவீனர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு பதிலாக நாம் கல் எறியலாமா?
பதில்
உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!
முடிந்தவரை அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தாங்களே கல்லெறிய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் பிறரிடம் பொறுப்புச் சாட்டலாம். ஆனால் இவ்வாறு பிறருக்காக எறிபவர்கள் முதலில் தமக்காக எறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும்.