பச்சைக் கிளியும், தூங்கும் சட்டமும்
பச்சைக் கிளியும், தூங்கும் சட்டமும்
ஜோஷியம் பார்க்கலையா ஜோஷியம் என தெருவில் கூப்பாடு கேட்கும். விவரம் தெரியாமல் இவர்களிடம் ஜோதிடம் பார்க்க முயன்றால் கூண்டில் அடைக்கப் பட்டுள்ள பச்சைக் கிளியை அவிழ்த்து விடுவார்கள். கழுத்தில் சிவப்பு நிற வளையமும், இறகில் கொஞ்சம் சிவப்பு நிறமும் உள்ள இந்தக் கிளி, வெளியில் வந்து ஜோதிடன் அடுக்கி வைத்துள்ள படங்களைப் புரட்டி, அதில் ஒரு படத்தை எடுத்துக் கொடுக்கும். இந்த வேலைக்கு பரிசாக ஒரு நெல்மணியை கிளிக்கு ஜோதிடன் கொடுப்பான். அதனால் என்ன என்கிறீர்களா?
இந்திய வன உயிரியல் பாதுகாப்புச் சட்டம் 1945ன் படி இந்தக் கிளியை வைத்திருப்பது, வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்ய வைப்பது, விற்பது என எல்லாமே கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்தக் கிளிகளை ஜோதிடக்காரர்கள் வைத்துக் கொண்டு, தெருத் தெருவாக திரிந்து, ஜோதிடத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களின் இந்த சட்ட விரோத செயல் குறித்து வனத்துறையின ருக்கு நன்கு தெரியும்.
இருந்தாலும் இவர்கள் அந்த ஜோதிடக்காரர்களிடம் ஜோதிடம் பார்க்க முற்படுகிறார்களே தவிர, பச்சைக்கிளி வைத்திருந்த அந்த ஜோதிடக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை. ஜோதிடம் என்பது இந்து மதத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. இதனால் பச்சைக் கிளிகளை சட்ட விரோதமாக பயன்படுத்தி ஜோதிடம் பார்த்தால் வனத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை எனத் தெரிகிறது. வனத்துறையினரின் இந்த செயல் சட்ட விரோதமானது. மிருக வதை தடுப்புச் சட்டப்படி மத நம்பிக்கையின் படி ஒட்டகத்தை அறுக்கலாம்.
ஆனால் சென்னை உயர்நீதி மன்றம் இதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம் ஒருவர் ஒட்டகத்தை குர்பானி கொடுக்க முயன்றால் அதை வனத் துறையினரும், காவல் துறையினரும் பார்த்துக் கொண்டு இருப்பார்களா? ஒருக்காலும் இருக்க மாட்டார்கள். அதே சமயம் ஜோதிடக் காரன் சட்ட விரோதமாக பச்சைக் கிளியை கூண்டில் அடைத்து, தெருத் தெருவாக சுற்றி அலைந்தாலும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதுதான் மதச் சார்பின்மை ஒழிய
வேண்டும். சரிதானே!
Source : unarvu ( 03/2/2017 )