நோன்பு துஆ
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
நோன்பு துஆ
«2359» حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مَرْوَانُ- يَعْنِي ابْنَ سَالِمٍ- الْمُقَفَّعُ- قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: ((ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ)).
நபிகளார் நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லித்தில் உரூக்கு வஸபத்துல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் (தாகம் தணிந்து, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :(அபூதாவூத்: 2357, 2010),(தாரகுத்னீ: 2302), பைஹகீ-7922, முஸ்னத் பஸ்ஸார்-5395,(ஹாகிம்: 1536),(நஸாயீ: 3329)
இந்த செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பவு என்பவர் இடம் பெறுகிறார். இவர் யாரென அறியப்படாதவர்.