நோன்பு
நோன்பு
நோன்பு கட்டாயக் கடமை – 2:183, 2:185
முந்தைய சமுதாயத்திற்கும் நோன்பு கடமையாக இருந்தது – 2:183
நோன்பை விட்டுவிட ஆரம்பத்தில் அனுமதி இருந்தது – 2:184
பயணிகளும், நோயாளிகளும் வேறு நாட்களில் நோன்பு நோற்கலாம் – 2:184
நோன்பின் மாதம் – 2:185
நோன்பிருப்பவர்கள் இரவில் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் – 2:187
கிழக்கு வெளுத்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரம் – 2:187
நோன்பு வைக்க முடிவு செய்த பின்பு கிழக்கு வெளுக்கும் வரை உண்ணலாம், பருகலாம் – 2:187
ஹஜ்ஜின்போது ஏற்படும் குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு நோற்றல் – 2:196, 5:95
தவறுதலாக ஒருவரைக் கொன்று விட்டு அவருக்குரிய நட்டஈடு அளிக்க வசதியில்லாதவர் இரு மாதங்கள் நோன்பு நோற்றல் – 4:92
சத்தியம் செய்து அதை முறித்தால் பரிகாரமாக மூன்று நோன்பு நோற்றல் – 5:89
முந்தைய சமுதாயத்தின் மௌன விரதம் – 19:26
நோன்பாளிகளுக்குக் கிடைக்கும் பரிசு – 33:35
மனைவியுடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்தவர்கள் அதை முறித்து விட்டு இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும் – 58:4
ஸுப்ஹ் முதல் மக்ரிப் வரை நோன்பு. அதற்குக் குறைவான நோன்பு இல்லை – 2:187
இயலாதவர் வேறு நாட்களில் நோற்கச் சலுகை – 2:184, 185
நோன்பு நோற்க இயலாதவர் செய்யும் பரிகாரம் – 2:184,185
ரமலானை அடைவது – 2:185
திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் – 2:185