02) நோன்பின் சட்ட சுருக்கம்
- ரமளான் நோன்பு ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாய கடமை
- இறையச்சத்தை அதிகமாக்குவதும், பொய்யான செயல்களை விட்டுஒதுங்குவதுமே நோன்பின் நோக்கங்கள்
- நோன்பிற்குரிய கூலி முன் பாவங்கள் மன்னிக்கப்படுதல்
- நோன்பிலிருந்து நிரந்தர விலக்கு பெற்றவர்கள் –
தள்ளாத வயதினர், நிரந்தர நோயாளிகள் - தற்காலிக விலக்கு பெற்றவர்கள் –
1)பிரயாணிகள் 2)தற்காலிக நோயாளிகள், 3)கர்ப்பிணிகள், 4)பாலூட்டும் தாய்மார்கள், 5)மாதவிடாய் பெண்கள் - பிரயாணிகள் நோன்பை விடுவது கட்டாயம் அல்ல.
- விடுபட்ட நோன்பை வைப்பதற்கு காலக்கெடு எதுவுமில்லை.
- பிறையை கண்ணால் பார்த்த பின்பே நோன்பு நோற்க வேண்டும். பிறை தெரியாவிடில், ஷஅபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.
- அனைத்து செயலுக்கும் தூய்மையான நிய்யத் அவசியம்.
- எனினும் ஹஜ்,உம்ரா தவிர, வேறு எதற்கும் வாயால் மொழிதல் இல்லை.
- நஃபில் நோன்பிற்கு, உண்ணாவிடில், விடிந்த பிறகு கூட நிய்யத் வைக்கலாம்.
- ரமளான் நோன்பிற்கு, பஜ்ருக்கு முன்னேரே நிய்யத் அவசியம்.
- சுப்ஹுடைய நேரமே சஹரின் இறுதி நேரம்
- சஹரின் ஆரம்ப நேரம் இறுதி நேரத்திற்கு, 50 வசனங்கள் ஓதும் முன்னிலிருந்து
- சஹர் உணவு சம்பந்தமாக கட்டுப்பாடு எதுவுமில்லை.
- சஹருக்காக, பஜ்ருக்காக என இரு பாங்கு சொல்வது நபிவழி
- மஃரிபுடைய நேரமே இப்தாரின் நேரம். தாமதமாக்கக் கூடாது.
- பேரீட்சம் பழம் இல்லாவிடில் தண்ணீர் கொண்டு நோன்பு திறக்க வேண்டும்
- நோன்பு துறக்க தனி துஆ இல்லை. பிஸ்மில்லாவைத் தவிர.
- நோன்பை முறிக்கும் காரியங்கள்
1) உண்ணுதல் 2) பருகுதல் 3) உடலுறவு 4) மாதவிடாய் ஏற்படுதல் - இதைத் தவிர வேறு எதனாலும் நோன்பு முறியாது.
- நோன்பை முறிக்காத செயல்கள்.
1) குளித்தல் 2) நறுமணம் பூசுதல் 3) பல்துலக்குதல் 4) நகம் வெட்டுதல் 5) சுருமா இடுதல் 6) தைலம் தேய்த்தல் 7) மனைவியுடன் நெருக்கமாக இருந்தல் - மறதியாக உண்பதால் குற்றமில்லை.
- தாய், தந்தையை விட்ட கடமையான நோன்பை பிள்ளைகள் நோற்கலாம்.
- சிறுவர்களை முடிந்தஅளவு நோன்பு நோற்க பழக்கலாம்.
- நோன்பு நோற்க கூடாத நாட்கள் –
1) நோன்புப் பெருநாள்
2) ஹஜ்ஜுப் பெருநாள்
3) அதையடுத்த மூன்று நாட்கள்
4) ஷஅபான் முப்பதா? ரமளான் முதல் இரவா? என்ற ஷக்குடைய நாள் - ஷவ்வால் பிறை கண்டதும் நோன்பை விடவேண்டும். பிறை தெரியாவிட்டால் ரமளானை 30ஆக பூர்த்தி செய்யவேண்டும்.