நோன்பாளி ஆஸ்துமா ஸ்பிரே பயன்படுத்தலாமா?
கேள்வி-பதில்:
நோன்பு
நோன்பாளி ஆஸ்துமா ஸ்பிரே பயன்படுத்தலாமா?
பயன்படுத்தலாம்.
எனக்கு ஆஸ்துமா இருக்கிறது எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன் . இந்த ஸ்பிரே நேராக நுரையிரலுக்கு செல்வது . நோன்புஇருக்கும் போது இதை நான் உபயோகிக்காலமா ? இதனால் நோன்பு முறிந்து விடாதா? எனக்கு விளக்கவும்
பதில்:
சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சிறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை. எனவே நோன்புக்கு எந்த பாதிப்பு இல்லை. முறியாது.