நோன்பாளிக்கு உதவுவது
நோன்பாளிக்கு உதவுவது
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நஸாயீ கபீர் ( 2 / 256 )
(திர்மிதீ: 807)
(இப்னு மாஜா: 1746)
தாரமி-1702
(அஹ்மத்: 21168)
முஸ்னத் ஹுமைதி-276
பஸ்ஸார்-3775
(இப்னு ஹிப்பான்: 895)
தப்ரானீ கபீர்-5/256,257
பைகஹீ ஷுபுல் ஈமான்-3952
ஆகிய நூல்களின் இந்த ஹதீஸ் இடம் பெருகிறது
நூல் : இலலுல் மதீனீ பாகம் : 1 பக்கம் : 66
நூல் : அல்மராசீலு இப்னி அபீ ஹாத்தம் பாகம் : 1 பக்கம் : 155
இந்த ஹதீஸை ஸைது இப்னு காலிதில் ஜுஹனிய்யீ (ரலி) அவர்களிடம் இருந்து அதாஉ என்பவர் அறிவிக்கின்றார் இவர் ஸைது பின் காலிதில் ஜுஹனிய்யீ ரலி அவர்களிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியை கூட செவியுறவில்லை என்று இமாம்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால் நோன்பாளிக்கு உதவுவது நன்மை உண்டு!
அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை.
நோன்பு நோற்காமல்விட்டு விட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், இன்று நோன்பை (நோற்காமல்)விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றார்கள் என்று கூறினார்கள்.