நபியின் இரத்தத்தை குடிப்பது சிறப்பா?
நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தைஎடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில் படாதவாறு)புதைத்துவிடு” என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்துவிட்டேன். பிறகு அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக்குடித்தேன் என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சிரித்தார்கள்.
அறிவிப்பவர்: சஃபீனா (ரலி),
நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா
இந்தச் செய்தியில் புரைஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர்என்று இப்னு கஸீர் கூறியுள்ளார். இமாம் தாரகுத்னீயும் இப்னு ஹிப்பானும் இவரைப்பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
மேலும் இந்த செய்தியில் உமர் பின் சஃபீனா என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் யார்என அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறியுள்ளார்கள். இமாம் புகாரி அவர்கள்இவரை மஜ்ஹுல் – அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். எனவே இதையும்ஏற்றுக்கொள்ள முடியாது.
சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு
உஹதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய முகத்தில்காயம் ஏற்பட்டபோது என் தந்தை மாலிக் பின் சினான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி விழுங்கினார்கள். “நீ இரத்தத்தைகுடிக்கின்றாயா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம். நான்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தைக் குடிக்கின்றேன்” எனக்கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய இரத்தம் அவருடையஇரத்தத்துடன் கலந்துவிட்டது. அவரை நரகம் தீண்டாது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் மாலிக் (ரலி),
நூல்: தப்ரானீ
இந்தச் செய்தியில் ருபைஹ் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இவருடையநம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. மேலும் இதில் இடம்பெற்றுள்ள இப்னுல் அஸ்கஃயாரென்ற விபரம் அறியப்படவில்லை.
மேலும் இதில் மூசா பின் யஃகூப் என்வர் இடம்பெற்றுள்ளார். இவர் மனன சக்திசரியில்லாதவர் என்று இமாம் இப்னு ஹஜரும், இவர் பலவீனமானவர் என்று இமாம் அலீபின் மதீனீயும், இவரிடத்தில் பலவீனம் உள்ளது என்று இமாம் தஹபீயும் கூறியுள்ளனர்.
மேலும் இதில் இடம்பெற்றுள்ள அப்பாஸ் பின் அபீ ஷம்லா என்பவரைப் பற்றி எந்தக்குறிப்பும் ஹதீஸ் நூற்களில் இல்லை. இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும்நற்சான்று அளிக்கவில்லை. எனவே பலவீனமானவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியைஏற்றுக்கொள்ள முடியாது.