நபியவர்கள் தனக்காக அகீகா கொடுத்தார்கள்
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
நூற்கள் :
முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம் 4 பக்கம் 329)
அஸ்ஸூனனுல் குப்ரா (பாகம்9 பக்கம் 300)
முஸ்னதுல் பஸ்ஸார் (பாகம் 6 பக்கம் 193)
மேற்கண்ட அனைத்து அறிவிப்புகளிலும் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனம் ஆனவர் ஆவார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஒரு போதும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளத் தகுந்தவை இல்லை.