நபிமொழிகளில் தடைசெய்யப்பட்டவை -4

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இசை

حَدَّثَنِي أَبُو عَامِرٍ ، أَوْ أَبُو مَالِكٍ – الأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ يَأْتِيهِمْ ، يَعْنِي الْفَقِيرَ – لِحَاجَةٍ فَيَقُولُوا ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمُ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ.

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ அவர்கள் கூறியதாவது: “அபூஆமிர் (ரலி) அவர்கள்’ அல்லது “அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள்’ என்னிடம் கூறினார்கள் அல்லாஹ்வின் மீதாணையாக!அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது:) நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிகேட்டுச்) செல்வான்.

அப்போது அவர்கள், “நாளை எங்களிடம் வா” என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்களில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி),
நூல்கள் : (புகாரி: 5590) , பைஹகீ அஸ்ஸுனனுல் குப்ரா, பாகம் : 3, பக்கம் : 272

சகுணம் பார்ப்பது

لاَ طِيَرَةَ وَخَيْرُهَا الْفَأْلُ قَالُوا وَمَا الْفَأْلُ قَالَ الْكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள்.

மக்கள், “நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது நீங்கள் செவியுறும் நல்ல சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 5754) 

குறிகாரர்களிடம் செல்வது

سَأَلَ أُنَاسٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، عَنِ الْكُهَّانِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسُوا بِشَيْءٍ قَالُوا : يَا رَسُولَ اللهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ قَرَّ الدَّجَاجَةِ فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِئَةِ كَذْبَةٍ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சோதிடர்கள் (பொருட்படுத்தத்தக்க) ஒரு பொருளே அல்ல” என்று பதிலளித்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகிவிடுகிறதே (அது எப்படி?)” என்று வினவினர். அதற்கு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த உண்மையான வார்த்தைகளை ஜின்கள் (வானவர்களிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டுவிடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : (புகாரி: 6213) 

பச்சை குத்துதல்

أُتِيَ عُمَرُ بِامْرَأَةٍ تَشِمُ فَقَامَ فَقَالَ : أَنْشُدُكُمْ بِاللَّهِ مَنْ سَمِعَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْوَشْمِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ فَقُمْتُ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَنَا سَمِعْتُ قَالَ مَا سَمِعْتَ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ تَشِمْنَ ، وَلاَ تَسْتَوْشِمْنَ.

பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (யாராவது உங்களில்) இருக்கின்றாரா?” என்று (எங்களிடம்) கேட்டார்கள். நான் எழுந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், “என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்க, “(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்திவிடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன் எனக் கூறினேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 5946) 

ஒட்டுமுடி வைப்பது

لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ.
قَالَ نَافِعٌ الْوَشْمُ فِي اللِّثَةِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான்.
(தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்.)

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 5937) 

سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ ابْنَتِي أَصَابَتْهَا الْحَصْبَةُ فَامَّرَقَ شَعَرُهَا وَإِنِّي زَوَّجْتُهَا أَفَأَصِلُ فِيهِ فَقَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمَوْصُولَةَ.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளுடைய தலைமுடி கொட்டி விட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன். அவளது தலை முடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா (ரலி),
நூல் : (புகாரி: 5941) 

சிலை, தானாக செத்தவை

عَامَ الْفَتْحِ وَهُوَ بِمَكَّةَ إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ وَالْمَيْتَةِ وَالْخِنْزِيرِ وَالأَصْنَامِ فَقِيلَ يَا رَسُولَ اللهِ أَرَأَيْتَ شُحُومَ الْمَيْتَةِ فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ وَيُدْهَنُ بِهَا الْجُلُودُ وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ فَقَالَ : لاََ هُوَ حَرَامٌ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : عِنْدَ ذَلِكَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوا ثَمَنَه.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்! என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),
நூல்: (புகாரி: 2236) 

முகத்தில் அடித்தல்

إِذَا قَاتَلَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2559) 

அல்லாஹ் அல்லாதவர் பெயரில் சத்தியம் செய்வது

أَلاَ مَنْ كَانَ حَالِفًا فَلاَ يَحْلِفْ إِلاَّ بِاللَّهِ فَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا فَقَالَ : لاََ تَحْلِفُوا بِآبَائِكُمْ.

“எவர் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்கள் மீது சத்தியம் செய்து வந்தார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்கள் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 3836)