நபிமொழிகளில் தடைசெய்யப்பட்டவை -3

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

வாங்கும் எண்ணம் இல்லாமல் ஏலத்தில் விலை ஏற்றக்கூடாது

نَهَى النَّبِيُّ : عَنِ النَّجْشِ.

வாங்கும் நோக்கமின்றி விலை உயர்த்துவதற்காக விலையை அதிகம் கேட்பதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 2142) 

அடுத்தவர் விலை பேசிக்கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு விலை பேசக்கூடாது

لاََ يَبِيعُ بَعْضُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ.

ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 2139) 

அடுத்தவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது குறிக்கிட்டு பெண் பேசக்கூடாது.

وَلاَ يَخْطُبَ الرَّجُلُ عَلَى خِطْبَةِ أَخِيهِ حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ ، أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ.

ஒருவர் தம் சகோதரன் பெண்பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண்பேசலாகாது. தமக்கு முன் பெண்கேட்டவர் அதைக் கைவிடும்வரை; அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 5142) 

அடுத்தவர்களின் உணவை அவரசப்பட்டு சாப்பிடக்கூடாது

 فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الإِقْرَانِ إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ مِنْكُمْ أَخَاهُ.

ஒருவர் தன் சகோதரருக்கு அனுமதி தந்தாலே தவிர சேர்த்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 2490) 

குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் திருமணம் கூடாது

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ

கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம் கூடாது என்று தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),
நூல் : (புகாரி: 4216) 

குறிப்பிட்ட பணத்தை கொடுத்து விட்டு சில நாட்கள் மட்டும் பெண்களிடம் உறவு கொண்டுவிட்டு பின்னர் அப்பெண்ணை பிரிந்துவிடும் பழக்கம் அன்றைய கால அரபியர்களிடம் இருந்தது. அதை நபிகளார் தடைசெய்தார்கள்.

மஹர் இல்லா திருமணம் கூடாது

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشِّغَارِ وَالشِّغَارُ أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الآخَرُ ابْنَتَهُ لَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ.

“ஷிஃகார்’ முறைத் திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

ஒருவர் மற்றொருவரிடம் “நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்” என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே “ஷிஃகார்’ எனப்படும். இதில் இரு பெண்களுக்கும் “மஹ்ர்’ (விவாகக் கொடை) இராது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 5112)   

பிராணிகளை அம்பு எய்யும் இலக்காக ஆக்கக்கூடாது.

 نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُصْبَرَ الْبَهَائِمُ.

“விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

நூல் : (புகாரி: 5513) 

பிராணிகளின் அங்கங்களை சிதைக்கக்கூடாது

أَنَّهُ نَهَى عَنِ النُّهْبَةِ وَالْمُثْلَةِ.

நபி (ஸல்) அவர்கள், பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி),
நூல் : (புகாரி: 5516)