தொழுகையின் போது தோள் புஜங்களை மறைக்க வேண்டுமா?
கேள்வி-பதில்:
தொழுகை
ஆம். மறைக்க வேண்டும்
உங்களில் எவரும் தமது தோள் புஜத்தின் மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 807)
ஒரு ஆடை அணிந்து தொழுபவர்கள் தமது தோள் புஜங்கள் மீது (ஆடை) ஏதும் இல்லாமல் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.