தேடுவது எப்படி?

முக்கிய குறிப்புகள்: அறிமுகம்

இந்த App-ல் உள்ள Search வசதியை பயன்படுத்தும் முன் சில குறிப்புகள்.


ஒரு செய்தியை தேடும் போது எந்த வார்த்தை அந்த செய்தியில் மட்டுமே இருக்குமோ அந்த வார்த்தையை கொண்டு தேட வேண்டும். உதாரணமாக, இந்த செய்தியை பாருங்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.(6017)

தவறான முறை:
மேற்கண்ட ஹதீஸை தேடுவதற்கு,
முஸ்லிம் என்று தேடக்கூடாது.
பெண்கள் என்று தேடக்கூடாது.
அன்பளிப்பு என்று தேடக்கூடாது. ஏனெனில்  ஏராளமான ஹதீஸ்களில் இந்த வார்த்தைகள் இருக்கும். எனவே நிறைய முடிவுகள் கிடைக்கும். எடுப்பது சிரமம்.

சரியான முறை:
எந்த வார்த்தை அந்த செய்தியில் மட்டுமே இருக்குமோ அந்த வார்த்தையை கொண்டு தேட வேண்டும். மேற்கண்ட செய்தியில் மட்டுமே இருக்கும் வார்த்தை கால் குளம்பு.

அதிலும், கால் குளம்பு என்று தேடி கிடைக்காவிட்டால், கால் குளம் என்று வார்த்தையின் இறுதியில் ஓரிரு எழுத்துக்களை குறைத்து தேட வேண்டும். அதிலும் கிடைக்காவிட்டால் இன்னும் ஓரிரு எழுத்துக்களை குறைத்து தேட வேண்டும்.

3 வார்த்தைகளை தவிருங்கள்:
அண்டை வீட்டுப் பெண் என்று தேடக்கூடாது.
கால் குளம்பை அன்பளிப்பு என்று தேடக்கூடாது.
அற்பமாக நினைக்க வேண்டாம் என்று தேடக்கூடாது. ஏனெனில் நாம் தேடும் வார்த்தைகளில், சிறுசிறு வார்த்தை மாற்றங்கள் இருந்தால், முடிவுகள் கிடைக்காது. எனவே, அதிகபட்சம் 2 வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

அதிகப்படுத்துவது கூடாது. 

சில வார்த்தைகளை உள்ளீடு செய்து தேடி முடிவுகள் கிடைக்காத போது, இன்னும் ஓரிரு எழுத்துக்களை அதிகப்படுத்துவது தவறு.  உதாரணமாக,
ஆட்டின் கால் என்று தேடி முடிவுகள் கிடைக்காவிட்டால்,
ஆட்டின் கால் குளம்பு  என்று தேடினாலும் முடிவுகள் கிடைக்கப் போவதில்லை.

100 ரூபாய் இல்லை என்று சொல்பவரிடம், 150 ரூபாய் இருக்கிறதா? என்று கேட்பதை போன்றது இது.

எனவே, எப்போதுமே ஒன்றை தேடி அது கிடைக்காவிட்டால், அதன் இறுதியில் ஓரிரு எழுத்துக்களை குறைத்து தேட வேண்டும். அதிலும் கிடைக்காவிட்டால் இன்னும் ஓரிரு எழுத்துக்களை குறைத்து தேட வேண்டும். அல்லது வார்த்தையை மாற்றி தேட வேண்டும்.


 

மற்றோர் உதாரணம்:

ஹதீஸ்:  “நியாயத் தீர்ப்பு நாளில் என் தோழர்களில் ஒரு கூட்டத்தினர் என்னிடம் வருவார்கள். அவர்கள் (கவ்ஸர்) தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள். அப்போது நான் “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்; என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் எனக் கூறுவேன். “உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்ற அறிவு உமக்கு இல்லை. அவர்கள் வந்த வழியே பின்புறமாகத் திரும்பிச் சென்று விட்டனர் என்று இறைவன் கூறுவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி: 6585)

இதில் தேட வேண்டிய வார்த்தை : தடாகத்தை (அல்லது) தடுக்கப்படுவார்கள்


 

மற்றோர் உதாரணம்:

ஹதீஸ்:  ““மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்! எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கூடாது! அது ஹராம்! எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்! என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).(புகாரி: 2236)

இதில் தேட வேண்டிய வார்த்தை : கப்பல்களுக்கு (அல்லது) விளக்கெரிக்க (அல்லது) கொழுப்பை