133. தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
? எந்த இடத்தில் துஆ செய்தாலும் தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா? நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா? அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா?
பதில்
தஹ்மீது, ஸலவாத் சொல்லித் தான் துஆ செய்ய வேண்டும் என்று ஹதீஸ் எதுவும் வரவில்லை.
பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது போன்ற அன்றாடப் பழக்கவழக்கங்களின் துஆக்களைத் தவிர இதர துஆக்களில் கையை உயர்த்துவது நபிவழியாகும். அரஃபா உள்ளிட்ட எந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் இது பொருந்தும்.