093. தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா?
கேள்வி-பதில்:
ஹஜ் உம்ரா
தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா?
இல்லை
பெண்களும் ஆண்களுடன் தவாஃப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்து விடாத வண்ணமாக அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாஃப் செய்ததாக புகாரியில் (1618) காணப்படுகின்றது.
எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும். எனினும், அறியாமல் கை பட்டு விட்டால், அதற்காக மீண்டும் உளுச் செய்ய வேண்டியதில்லை. மேலும், தவாஃபிற்கு பின் உள்ள தொழுகைக்காகவே உளு வேண்டும். தஃவாபிற்காக உளு தேவையில்லை.