15) தலாக் சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

  • ஒரு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டால் எடுத்தவுடனே தலாக் கூறாமல், இந்த 4 விஷயங்களை முதலில் கடைபிடிக்க வேண்டும்.
    1. அறிவுரை கூறி, திருத்த வேண்டும். முடியாவிட்டால் (அல்குர்ஆன்: 4:34)
    2. படுக்கையிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி வைக்க வேண்டும். (அல்குர்ஆன்: 4:34)
    3. முடியாவிட்டால், இலேசாக அடித்துத் திருத்துவது (விவாகரத்து வரை செல்லாமல் இருக்க) 
    4. மனைவி திருந்தாவிட்டால், இரு குடும்பத்திலும் ஒரு நடுவரை ஏற்படுத்தி பேசி நல்லிணக்கம் ஏற்படுத்தவது. (அல்குர்ஆன்: 4:35)
  • கணவன் மனைவியருக்கிடையேயுள்ள பிணக்கு மேற் சொன்ன நாங்கு நடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொடருமானால் அவர்கள் பிரச்சனையில் ஜமாஅத் (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) தலையிடும்.

(அல்குர்ஆன்: 4:35)

  • ஜமாஅத்தார்கள் பேசி, அவர்களுக்கு மத்தியில் இணக்கம் வராவிட்டால், அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றி தலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.

தலாக் கூறிட மூன்று வாய்ப்புக்கள்:

  1. முதல் தடவை தலாக் கூறிய பின், சேர்த்து வாழ நினைத்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
  2. இரண்டாம் தடவை தாலாக் கூறிய பின், சமாதானம் ஆகி சேர வாழ நினைத்தால், சேர்த்துக் கொள்ளலாம். (அல்குர்ஆன்: 2:229)
  3. மூன்றாம் தடவை தலாக் கூறிய பின், இது கடைசி வாய்ப்பு அந்த நிமிடமே திருமண உறவு நிரந்தரமாக நீங்கி விடும். மீண்டும் சேர்வதற்கு எந்தக் கெடுவும் இல்லை.
  4. மூன்று தடவை தலாக் கூறிய பின், ஒரு வேலை சேர்ந்து வாழலாம் என்று நினைத்தால், அவள் வேறு கணவனை மணம் முடித்து, அவர் தலாக் விட்டால், (மீண்டும் முதல் கணவனை திருமணத்தின் மூலம் மனந்து கொண்டு வாழலாம்.

(அல்குர்ஆன்: 2:30)

  • மறு திருமணம் செய்வதற்கு, மாதவிலக்கு அற்றுப் போனவர்கள் அல்லது மாதவிலக்கு ஏற்படாதவர்கள்.(மூன்று மாதங்கள் முடியும் வரை காத்திருக்க வேண்டும். (அல்குர்ஆன்: 65:04)
  • மறு திருமணம் செய்வதற்கு, கர்ப்பிணியாக இருந்தால், பிரசவிகுக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
  • (அல்குர்ஆன்: 65:04)
  • கணவன் இறந்துவிட்டால், நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும்.

(அல்குர்ஆன்: 2:234)

ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறுவது கூடாது. அவ்வாறு கூறினாலும் அது ‘ஒரு தலாக்காக’ மட்டுமே கணக்கிடப்படும்.

(அஹ்மத்: 2387)