தமிழகத்தில் தொடரும் தீண்டாமை குற்றங்கள் தீர்வு என்ன?
தமிழகத்தில் தொடரும் தீண்டாமை குற்றங்கள் தீர்வு என்ன?
சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தில் அருந்ததி சமூகத்தை சார்ந்த ஒரு பெண் சமைப்பவராக பணியாற்றி வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள், இவர் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் எனவே இவர் இங்கே சமைத்தால் பள்ளிக்கூடத்தை இங்கு இயங்க விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அரசாங்கமும் அந்த பெண்ணை வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்கிறது. தீண்டாமை கூடாது என்று போதிக்கின்ற பள்ளிக்கூடத்தில் சிலர் தீண்டாமையை அரங்கேற்றுகின்றனர். அவர்களை கண்டிக்காமல் அவர்கள் கேட்டுக்கொண்டதை அரசாங்கம் செய்து தந்ததிலிருந்து தீண்டாமையை ஒழிப்பதில் அரசாங்கம் தோற்றுப்போய்விட்டது. ஒரு அரசினால் கூட தீண்டாமையை தகர்க்க முடியவில்லை, தீண்டாமைக்கு எதிராக சட்டமியற்ற முடியவில்லை
ஆனால் இஸ்லாம் தீண்டாமை ஒழிவதற்கு அற்புதமான வழிமுறைகளை கூறுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல்வாதிகள் அறிக்கை விடுகின்றனர். கண்டிப்பதனால் தீண்டாமை ஒழிந்து விடுமா? பாதிக்கப்பட்டு பெண்ணிற்கு நியாயம் கிடைத்து விடுமா? எனவே, அரசியல்வாதிகள் இதை கண்டித்து அறிக்கை விடாமல் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருப்பதற்கு எந்த மார்க்கம் தீர்வோ, அதை நோக்கி மக்களுக்கு அழைப்பு விட வேண்டும்.
இஸ்லாமிய வழிமுறைகளின் மூலமாக தீண்டாமை இல்லாத ஒரு சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். அதன் விளைவு, இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்களிடத்தில் துளியளவு கூட தீண்டாமையை பார்க்க முடியாது. யாரை தீண்டத்தகாதவர் என்று நினைக்கிறார்களோ, அவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டால் அடுத்த கணமே பள்ளிவாசலில் வந்து மற்றவர்களுடன் சமமாக தொழலாம், அனைவருக்கும் தொழுகை நடத்தலாம் இங்கு எந்த பாகுபாடும் கிடையாது.
இங்கு இருப்பவர்கள் கூட யாரும் அரபு நாட்டு இறக்குமதிகள் கிடையாது. எல்லாம் வேறு மதத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்கள்தான். ஆனால் அவர்களிடத்தில் எந்த தீண்டாமையும் இல்லை, அதற்கு காரணம் இஸ்லாம் மட்டுமே. எனவே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் அதற்கு இஸ்லாம் மட்டுமே தீர்வு. இஸ்லாத்தை நோக்கி அனைவரையும் அழைக்கிறோம்.
Source : unarvu ( 27/07/2018 )