தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு! சொத்துக்களும் பறிமுதல் !
தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு! சொத்துக்களும் பறிமுதல்.!
ஜார்க்கண்டில் காட்டுத்தனமாக அடித்து கொல்லப்பட்ட தப்ரேசுக்கு ஆதரவாக போராடியவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்கு பதிவு செய்தும் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது உ.பியின் பாஜக யோகி அரசாங்கம்.
சில தினங்களுக்கு முன்னர் தப்ரேஸ் அன்சாரி என்பவரை திருடர் என்று ஆதாரமின்றி கூறியும் அவரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற கட்டாயப்படுத்தியும் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். இந்த வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சில தினங்களுக்கு முன்பாக அமைதி போராட்டம் நடைபெற்றது, அப்போது போலீசார் தடியடி நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது கிரிமினல் வழக்குகளை போட்டு போராட்டத்தை ஒடுக்கினர்.
இதை தொடர்ந்து (வெள்ளி கிழமை 06-07-2019) முஸ்லீம் பொது மக்கள் இந்திரா சவ்க் என்ற இடத்தில் மீண்டும் போராட்டம் நடத்தி விட கூடும் என்பதால் அற்றைய தினம் இன்டர்நட் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டு இருந்தது.. அப்பகுதியில் போலீசாரும் அதிக அளவில் குவிக்கபட்டு உள்ளனர்.
ஏற்கனவே நடந்த போராட்டத்தில் பங்கு கொண்ட பொது மக்களில் 50 பேரை உ.பி போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் அராஜகம்
போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படும் பதர் அலி என்பவரை வியாழக்கிழமை மீரட்டில் உள்ள ஒரு மால் அருகே கைது செய்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது ; மேலும் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீரட் எஸ்எஸ்பி அஜய் சாஹ்னி கூறியதாவது : “காலை 6 மணி முதல் போலீஸ் ரோந்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் அதிக அளவில் குவிக்க பட்டுள்ளனர். பாரத் பந்த் பற்றிய வதந்திகள் மிதந்ததால் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்கள் தாங்கள் பந்தை ஆதரிக்கவில்லை என்றும், விஷயங்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.” என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 148 (கொடிய ஆயுதம் தாங்கி கலவரத்தில் ஈடுபடுதல் ), 352 (தாக்குதல்), 336 (உயிர் மற்றும் தனிநபர் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் அணிவகுப்பு :
மீரட் பொலிஸ் பணியாளர்கள், விரைவான அதிரடி படை(RAP) மற்றும் மாகாண ஆயுதமேந்திய கான்ஸ்டாபுலரி ( PAC ) ஆகியோரை கொண்டு இந்திரா சவ்க்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீரட் மண்டல ஏ.டி.ஜி,பி உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகளால் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே , குறைவான மக்களே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.
இந்திரா சவுக் அருகே ஒரு வெல்டிங் கடையை நடத்தி வரும் நூர் ஹசன் கூறினார்: “ தப்ரெஸ் படுகொலையை கண்டிக்கும் விதமாக போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே போராட்டம் நடத்த அனுமதி மறுத்தால் மக்கள் எதிர்ப்பையும் மீறி அமைதி போராட்டடத்தில் பங்கேற்க முற்பட்டனர். ஆனால் பொலிஸ் தடியடி அதை மோசமாக்கியது. இப்போது இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது . அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், ஏதாவது அசம்பாவிதம் நடக்கக்கூடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை. ”
கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஜனநாயக வழியில் போராட அனுமதி மறுத்து, போராடியவர்கள் மீது கடுமையான வழக்குகக்ளை போடுவதும் , சொத்துக்களை பறிமுதல் செய்வதும் மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Source:http://www.newscap.in/yogipolice-atrocities/