22) தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது சிறந்தது

நூல்கள்: இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு


தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வது சிறந்தது

குழந்தைகளின் வருங்கால வாழ்க்கைக்காக செல்வங்களை சேமித்து வைப்பது சிறந்த செயலாகும். இவ்வாறு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : சஃத் பின் அபீவக்காஸ் (ரலி),

நூல் : புகாரி (3936)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தம் சின்னஞ் சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர் தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச் செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச் செய்கிறான்” என்றும் கூறினார்கள்.

அறி : ஸவ்பான் (ரலி),

நூல் : முஸ்லிம் (1817)