ஜும்மா அத்தியாயத்தின் சில வசனங்கள்
முக்கிய குறிப்புகள்:
குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.