ஜிப்ரீலிடம் நபியவர்கள் கேட்ட போது…

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன? என்று கேட்டார்கள்.2 அப்போது தான் (நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன் எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

(புகாரி: 4731)