ஜின்கள் குர்ஆனை செவியேற்றபோது
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்தி ருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்தி ருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங் களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்து விட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திக ளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்த போது உக்காழ் சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நக்லா எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண் டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான் என்று கூறிவிட்டு, தம் கூட்டத் தாரிடம் சென்று, எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒரு போதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, (நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்… என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.