07) ஜனாஸா தொழுகை சட்ட சுருக்கம்
நூல்கள்:
சட்டங்களின் சுருக்கம்
- ஜனாஸா தொழுகை கட்டாய சமுதாய கடமை
- ஓரிருவர் தொழுதாலும் கடமை நீங்கிவிடும்
- இறந்தவரின் குடும்பத்தினரே தொழுவிக்க உரிமை படைத்தவர்கள்
- இறந்தவரை குறுக்கு வசமாக வைக்கவேண்டும்.
- ஆண் ஜனாஸா தலைக்கு நேராக இமாம் நிற்கவேண்டும்
- பெண் ஜனாஸா வயிற்றுக்கு நேராக இமாம் நிற்கவேண்டும்
- உளு அவசியம், கிப்லாவை முன்னோக்க வேண்டும்
- ருகூவு, ஸஜ்தா, அத்தஹியாத்து கிடையாது
- நான்கு அல்லது ஐந்து தடவை தக்பீர் கூறலாம்
- முதல் தக்பீருக்கு பின், சூரதுல் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டும்
- சத்தமாக அல்லது மெதுவாக ஓதலாம்
- இரண்டாவதற்கு பின், நபியின் மீது ஸலவாத் கூற வேண்டும்
- மூன்றாவது, நான்காவது தக்பீருக்கு பின் இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமைக்கா துஆ செய்ய வேண்டும்.
- இருபுறமும் நின்றவாறே ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும்
- ஒரு பக்கம் மட்டும் ஸலாம் கொடுப்பது நபிவழி அல்ல