82) ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்
நூல்கள்:
ஜனாஸாவின் சட்டங்கள்
முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.
‘உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நிற்க வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். ‘அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா’ என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)