சொர்க்கம் நரகம் ஆயிரம் ஆண்டுகள் மூடப்பட்டனவா?
முக்கிய குறிப்புகள்:
பலவீனமான ஹதீஸ்கள்
”(ஜிப்ரீலே! நரகத்தைப் பற்றிக் கூறும் என நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள், அப்போது ஜிப்ரீல் அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது வெண்மையாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் மூட்டப்பட்டது, பின்னர் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது சிகப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது, பின்னரும் அல்லாஹ் நரகத்திற்கு ஆணையிட்டான் அது கருப்பாக ஆகுமளவிற்கு ஆயிரம் ஆண்டுகள் நெருப்புமூடப்பட்டது இறுதியாக அது இருள் நிறைந்த கருப்பாக ஆகிவிட்டது)” என்ற இந்த ஹதீஸ் ”ஹைதமி’ என்ற நூலில் (10/387) ம் பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (910) ம் பக்கத் திலும் பலவீனமானது என்று உள்ளது.