செல்ஃபி பைத்தியங்கள்
‘செல்பி’ எனப்படும் சுய புகைப்படம் எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல அமெரிக்க செய்தி நிறுவனமான ‘வொஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.
‘செல்பி’ அறிமுகமான புதிதில் வர்த்தக நிலையங்கள், பூங்கா, சுற்றுலாத்தளம் என்று பல்வேறு இடங்களில் ‘செல்பி’ எடுத்துக் கொண்ட இள வயதினர், அதிக “Like” குகளுக்கு ஆசைப்பட்டு ரெயில் கூரை, உயரமான மலை, என்று ஆபத்தான இடங்களில் ‘செல்பி’ எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், ‘செல்பி’ உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் 2015 ஆம் ஆண்டு மட்டும் 27 பேர் ‘செல்பி’ எடுத்துக் கொள்ளும்போது உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் மும்பை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ‘செல்பி’ எடுக்கும் இடங்களில் அபாயகரமான பகுதிகளாக 16 இடங்களை கண்டறிந்துள்ள பொலிஸார் அப்பகுதிகளில் ‘செல்பி’ எடுக்க தடை விதித்துள்ளனர்.
இதேபோல் இந்தியா முழுவதும் அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து ‘செல்பி’ எடுக்க தடை விதிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். (ஸ)