சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

சமூக வலைதளங்களால் சீரழியும் குடும்பங்கள்

சமூக வலைதளம் என்பது தற்போதைய சமூகத்தில் அசைக்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. ஒரு செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உள்ளங்கையில் இருக்கும் தொலைபேசியே போதுமானதாக ஆகிவிட்டது. இதற்கு சமூக வலைதளங்களே முக்கிய காரணமாக உள்ளன. மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக சக மனிதர்களைத் தொடர்பு கொள்வது எளிதாக ஆகிவிட்டது. இப்படி இதனுடைய நன்மைகள் பலவாறு இருந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளும் மற்றொரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது.

குடும்பத் தொடர்பைத் துண்டிக்கும் சமூக வலைதளங்கள்

இதன் விளைவாக ஒரே வீட்டிலே இருக்கக் கூடிய அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, அகமகிழ்ந்து பேசிக் கொள்ளாமல் ஆளுக்கொரு மூளையில் அமர்ந்து இணையதளத்தில் மூழ்கி உள்ளனர். அமெரிக்காவில் இருப்பவரை வாட்ஸபில் நலம் விசாரிப்போர் அடிவாசலில் இருக்கும் அண்ணன் தம்பிகளை மறந்து விடுகின்றனர். ஸ்டேடஸ் என்ற பெயரில் குடும்பக் குறைகள் அனைத்தையும் கொட்டித் தீர்த்து விடுகின்றனர்.

பெண்கள்…

கூத்தாடிகளின் புகைப்படங்களை புரைஃபலில் வைத்து புன்னகைக்கின்றனர் இளைஞர்க்ள். இவ்வாறு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் சீரழிந்து விடுகின்றனர். இதற்கு உதாரணமாக தற்போது நடந்த சம்பவத்தைப் பாருங்கள்:

கொல்கத்தாவில் வீட்டு வேலைகளைச் செய்யாமல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஆர்வம் காட்டினார் என்று கூறி மனைவியை கணவன் அடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்கத்தாவின் தெற்குப் பகுதியில் உள்ள சேட்லா என்னும் பகுதியினைச் சேர்ந்தவர் சுரஜித் பால். இவரது மனைவி தும்பா. இவர் சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டி நிறைய நேரம் செலவழித்து வந்ததாகத் தெரிகிறது. அத்துடன் சமூக ஊடகங்கள் மூலம் பழக்கம் ஏற்பட்டு வேறு சிலருடன் தும்பா தொடர்பு வைத்திருப்பதாகவும் சுரஜித் சந்தேகம் கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று மதியம் வேலை முடிந்து சுரஜித் பால் வீடு திரும்பியுள்ளார். ஆனால் அவரது மனைவி தும்பா சமையல் எதுவும் செய்யாமல் சமூக ஊடகங்களில் நேரம் செலவழித்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக சுரஜித் சமையல் செய்யத் துவங்கினார். அப்பொழுது இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சுரஜித் தன் கையில் வைத்திருந்த கட்டை ஒன்றினால் தும்பாவின் தலையில் தாக்கியுள்ளார். அத்துடன் அவரது கழுத்தினை நெரித்துள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

பின்னர் தனது மணிக்கட்டினை அறுத்துக் கொண்டு சுரஜித் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அது பலன் அளிக்காமல் கையில் காயம் ஏற்பட்டு, அதற்கு மருந்து போட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். மாலை பள்ளியிலிருந்து திரும்பிய அவர்களது மகன் சயன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது தாயாரைக் கண்டு கொடுத்த தகவலின் பேரால் போலீசார் விரைந்து சென்று சடலத்தினைக் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் தங்கள் விசாரணையைத் தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில், வியாழன் அன்று சுரஜித் தாமாகவே காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

பின்னர் தொடர்ந்த விசாரணையில் சுரஜித் கடந்த ஆண்டு தும்பாவின் சகோதரியோடு சுரஜித் தொடர்பு வைத்திருந்ததாக, தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அது முதல் தும்பா வீட்டு வேலைகளில் அதிக ஆர்வம் காட்டாமல், சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வந்தார் என்பதும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இவ்வாறு கணவன் மனைவியின் உறவையே அறுந்து போகச் செய்கின்ற அளவிற்கு சமூக வலைதளத்தின் போதை உள்ளது.

தீர்வு என்ன?

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு எளிதானது தான். சமூக வலைதளங்களை சமூக நன்மைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். சமூகச் செய்திகளைத் தெரிந்து கொள்ள பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் சமூக வலைதளங்கள் என்ற பெயரில் பொழுது போக்குவதை தவிர்க்க வேண்டும்.