06) சத்தியம் சட்ட சுருக்கம்

நூல்கள்: சட்டங்களின் சுருக்கம்

  • சத்தியம் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்யவேண்டும்
  • மற்றதின் மீது சத்தியம் செய்தால், லாயிலாஹ இல்லல்லாஹ் கூற வேண்டும்
  • வாக்குறுதி அடிப்படையிலான சத்தியத்தை நிறைவேற்றுவது அவசியம்
  • சத்தியம் செய்தவர் இயலாவிடில், முறிக்கலாம்.
  • முறித்தால் பரிகாரம் செய்யவேண்டும்.
  • இன்ஷா அல்லாஹ் சேர்த்துக் கூறினால் பரிகாரம் இல்லை
  • பைஅத் என்றால் உறுதிமொழி என்று பொருள்
  • தொழுகை, நோன்பு போன்ற மார்க்க பைஅத் நபியிடம் மட்டுமே செய்யவேண்டும்
  • கொடுக்கல், வாங்கல் உலக உறுதிமொழி யாரிடமும் செய்யலாம்
  •  பொய் சத்தியம் செய்வது பெரும் பாவம்
  • அவசரப்பட்டு சத்தியம் செய்தால் நிறைவேற்ற வேண்டியதில்லை.
  • ”நீ செய்ய வேண்டும்” என பிறர் செய்ய வேண்டிய செயலுக்கு சத்தியம் கூறலாகாது
  • எனினும், இரத்த உறவுகளுக்கு இடையே கூடும்
  • பிறரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுதல் சிறந்தது
  • வியாபாரத்தில் சத்தியம் உண்மையாக இருப்பினும்  கூடாது
  • நம்பாதவர்களிடம் சத்தியம் செய்து கூறக் கூடாது
  • சத்தியத்தை முறித்தால் பரிகாரம் செய்ய வேண்டும். அது,
    1) பத்து ஏழைகளுக்கு உணவு, முடியாவிட்டால்,
    2) பத்து ஏழைகளுக்கு உடை, முடியாவிட்டால்,
    3) ஒரு அடிமையை விடுதலை செய், முடியாவிட்டால்
    4) மூன்று நோன்பு வைக்க வேண்டும்.
  • சிறந்ததை கண்டால், சத்தியத்தை முறித்து, பரிகாரம் செய்து சிறந்ததை நிறைவேற்றலாம்.