சஜ்தாவில் தரையில் படவேண்டிய உறுப்புக்கள் யாவை?
கேள்வி-பதில்:
தொழுகை
சஜ்தாவில் தரையில் படவேண்டிய உறுப்புக்கள் யாவை
முஹம்மது ஹஸீப்
பதில்
தரையில் பட வேண்டிய உறுப்புகள்
‘நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் – என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் – ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது’ என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)